முதல் அத்தஹியாத் இருப்பில் ஓத வேண்டியவை
முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும்.
\அத்தஹிய்யாத் துஆ.\
அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு.
பொருள்:
சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக. எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன் எனத் தொழுகையில் அமரும் போது நபி (ஸல்) அவர்கள் கூறச் சொன்னார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி),
நூல்கள்: புகாரி 1202, முஸ்லிம் 609
\மற்றொரு அத்தஹிய்யாத் துஆ\
அத்தஹிய்யா(த்)துல் முபார(க்)கா(த்)துஸ் ஸலவா(த்)துத் தய்யிபா(த்)து லில்லாஹி அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன் நபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஆலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹி‘ என்று நபி (ஸல்) அவர்கள் இருப்பில் ஓதுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: முஸ்லிம் 610
மேற்கூறிய இரண்டில் ஏதாவது ஒன்றை ஓதிக் கொள்ளலாம்.
——————————————-
தொழுகை சட்டங்கள்