மறுமைக்காக வாழ்வோம்….
பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், விளைநிலங்கள் ஆகிய மனம் கவருபவற்றை நேசிப்பது மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்காப்பாட்டுள்ளது.
இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.
இதை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு சொல்லட்டுமா? என்று கேட்பீராக! இறைவனை அஞ்சுவோருக்கு தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன, அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். தூய்மையான துணைகளும், அல்லாஹ்வின் திருப்தியும் உள்ளன. அல்லாஹ் அடியார்களை பார்ப்பவன்.
அல்குர்ஆன் 3:15,16
இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 3:185
ஏக இறைவனை மறுப்போர் ஊர்கள் தோறும் சொகுசாக திரிவது உம்மை ஏமாற்றி விட வேண்டாம். இது அற்ப வசதிகளே பின்னர் அவர்களின் தங்குமிடம் நரகமாகும். தங்குமிடத்தில் அது கெட்டது.
அல்குர்ஆன் 3:196,197
இவ்வுலகின் வசதி குறைவு தான். இறைவனை அஞ்சுவோருக்கு மறுமையே சிறந்தது.
அல்குர்ஆன் 4:77
மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது.
அல்குர்ஆன் 9:38
மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 13:26
இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகமே. மறுமையே நிலையான உலகம்.
அல்குர்ஆன் 40:39
நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கின்றீர்கள். மறுமையே சிறந்ததும் நிலையானதுமாகும்.
அல்குர்ஆன் 87:16,17
இவ்வுலகை விட மறுமையே உமக்குச் சிறந்தது.
அல்குர்ஆன் 93:4
———————
ஏகத்துவம்