மரணத்தை நினைவுக்கூற மையவாடி சந்திப்பு
—————————————————
அன்றாடம் ஒரு முஸ்லிமுக்கு மரணத்தை நினைவூட்டுவதுடன் இஸ்லாம் நின்று விடவில்லை. அடிக்கடி இறந்தவர்களின் பொது மையவாடியைப் போய் சந்திக்கவும் சொல்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் தனது தாயாரின் அடக்கத்தலத்தை சந்தித்த பின்னர், ‘நீங்கள் அடக்கத்தலங்களை (கப்ருகளை) சந்தியுங்கள். அது மறுமையை (மரணத்தை) நினைவூட்டுகின்றது’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1622
அவ்வாறு சந்திக்கும் போது…
السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ
அஸ்ஸலாமு அலை(க்)கும் தார கவ்மின் முமினீன் வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹி(க்)கூன்
பொருள்:
இறை நம்பிக்கையுள்ள சமுதாயமே! உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக்கூடியவர்களே!
நூல்: முஸ்லிம் 367
வெளியிலிருந்து யார் என்ன பேசினாலும் இறந்தவர்கள் அதைச் செவியுற மாட்டார்கள் என்பது இஸ்லாத்தின் அழுத்தமான நம்பிக்கையாகும்.
அப்படியிருந்தும் இஸ்லாம் இந்தப் பிரார்த்தனையை செய்யச் சொல்கின்றது என்றால் இதில் இரண்டு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.
உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்களுக்காக அல்லாஹ்விடம் செய்கின்ற பிரார்த்தனையாகும்.
உயிருடன் இருப்பவர்கள் தாங்களும் மரணமடைந்து அவர்களுடன் போய் சேரக் கூடியவர்கள் என்று உணரச் செய்வதாகும்.
நாங்களும் உங்களுடன் சேரக்கூடியவர்கள்’
என்ற வார்த்தைகள் உளவியல் ரீதியாகத் தாங்களும் மரணிப்பவர்கள் என்ற ஒரு பயிற்சியை அளிக்கின்றது. இப்படிப்பட்ட பயிற்சியின் மூலம் மரணச் செய்தியைத் தாங்கக் கூடிய மனப்பக்குவத்தை இஸ்லாம் முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்கின்றது. உண்மையில், இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்.
ஏகத்துவம்