மனிதர்களில் சிறந்தவர்கள்–பிறருக்குத் துன்பம் தராதவர்கள்
நமது வாழ்நாளில் அனைத்து காரியங்களும் நன்றாக இருக்க வேண்டும்; எப்போதும் இன்பமாக சந்தோசமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எந்தவொரு நிகழ்விலும் தீமை ஏற்பட்டு விடக்கூடாது; துன்பத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று நினைக்கிறோம். இதே எதிர்பார்ப்பும் எச்சரிக்கை உணர்வும் அடுத்தவர் விஷயத்திலும் நமக்கு இருக்க வேண்டும். பிற மக்களுக்கு நம்மால் முடிந்த நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும். நன்மைகளைச் செய்யாவிட்டாலும், ஒருபோதும் தீமையைச் செய்துவிடக் கூடாது. இவ்வாறு பிறருக்கு எந்த விதத்திலும் தொல்லைகள், இடையூறுகள், தீங்குகள் தாராமல் வாழ்பவர்கள், சமூகத்தில் இருக்கும் சிறந்த மனிதர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?”என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவருடைய நாவிலிருந்தும் கரத்தில் இருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : புகாரி-11 , முஸ்லிம் 64
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும் மக்களுக்கு முன்னால் வந்து நின்று, உங்களில் சிறந்தவர் யார்? கெட்டவர் யார்? என்பதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா?என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (மக்கள்) அமைதியாக இருந்தார்கள். எனவே, நபியவர்கள் அதே வார்த்தையை மூன்று முறை மீண்டும் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிறந்தவர் யார், கெட்டவர் யார் என்பதை எங்களுக்கு அறிவியுங்கள்என்று கூறினார்.
அதற்கு, உங்களில் எவரிடம் இருந்து நன்மையான காரியங்கள் (மக்களிடம்) எதிர்பார்கப்படுமோ, தீமையான காரியங்கள் குறித்து பயப்படப்படாதோ அவர்தான் உங்களில் சிறந்தவர். மேலும், உங்களில் எவரிடம் இருந்து நன்மையான காரியங்கள் (மக்களிடம்) எதிர்பார்க்கப்படாதோ, தீமைக்கள் காரியங்கள் பயப்படப்படுமோ அவர்தான் உங்களில் கெட்டவர்என்று நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதீ-2263 (2189)
அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
[அல்குர்ஆன் 112:1]