மனிதர்களில் சிறந்தவர்கள்- நற்குணம் கொண்டவர்கள்
ஒருவர் எல்லா வகையிலும் சிறந்தவராக இருக்க வேண்டும் என்றால், அவர் நற்குணம் நிறைந்தவராக இருக்க வேண்டும். நற்குணம் இல்லாதவர் எண்ணற்ற திறமைகளை ஆற்றல்களை கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் அர்த்தமற்றதாக ஆகிவிடும். நற்குணங்களை நடைமுறையில் தொலைத்துவிட்டு, எவ்வளவுதான் சத்தியக் கொள்கையைக் குறித்து உரக்கக் கூறினாலும், அவை அனைத்தும் வீணாகிவிடும். எனவே, சத்தியத்தை ஏற்று, அதை அழகிய முறையில் செயல்படுத்தி, அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லும் பணியில் இருக்கும் நாம் நற்குணங்களைப் பிரதிபலிக்கும் நன்மக்களாக இருக்க வேண்டும். அவை, நம்மை சிறந்தவர்களாக மிளிர வைக்கும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : புகாரி-3559
மஸ்ரூக் பின் அஜ்தஉ அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்களுடன் (இராக்கிலுள்ள) கூஃபா நகருக்கு வந்திருந்த அப்துல்லா் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, “அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை” என்று கூறிவிட்டு, “நற்குணமுடையவரே உங்களில் மிகவும் சிறந்தவர்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்றும் கூறினார்கள்.
நூல் : புகாரி-6029