படைத்தவனைத் துதிப்பவர்கள்

ஏழு வானங்கள், பூமி மற்றும் அவற்றுள் இருக்கின்ற அனைத்துக்கும் உரிமையாளனாக இருக்கும் ஏக இறைவன், மிகப் பெரியவன். அவனது அனுமதி இல்லாமல் அணுவும் அசையாது. ஆதலால், அவனே அனைத்துப் புகழுக்கும் உரித்தானவன்; தகுதியானவன். அவன் அனைத்து விதமான தேவைகள், பலவீன்ங்களை விட்டும் பரிசுத்தமானவன்; தூயவன். இதை நினைவில் கொண்டு முஃமின்கள் அவனது திருப்பெயர்களை குறிப்பிட்டு துதிக்க வேண்டும். அவனது அரும் பெருமைகளை மறக்காமல் போற்றிப் புகழ வேண்டும். நித்திய ஜீவனை நினைவு கூறும் பண்பினை கொண்டவர்கள், வாழும் மக்களிலேயே மிகச் சிறந்தவர்கள் என்பதை கீழ்வரும் நபிமொழி மூலம் அறியலாம்.

ஏழைகள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “செல்வச் சீமான்கள் உயர்வான பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்)கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதுபோன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் தங்களது அதிகப்படி யான செல்வங்கள் மூலம் அவர்கள் ஜ் செய்கின்றனர்; உம்ரா செய்கின்றனர்; அறப்போருக்காகச் செலவளிக்கின்றனர்; தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே)” என்று கூறினர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்த சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட (செல்வர்)வர்களையும் நீங்கள் பிடித்துவிடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களிடையே வாழ்கிறீர்களோ அவர்களில் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படுத்தினால் தவிர (அவர்களாலும் அச்சிறப்பை அடைய முடியாது.) (அந்தக் காரியமாவது:)

 

நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீ் (சுபஹானல்லாஹ்) சொல்லுங்கள்; 33 தடவை த்மீத் (அல்ஹம்துலில்லாஹ்) கூறுங்கள்; 33 தக்பீர் (அல்லாஹு  அக்பர்) சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் இது தொடர்பாக கருத்து வேறுபாடு கொண்டோம். எங்களில் சிலர் சுப்ானல்லா் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு  அக்பர்) 34 தடவை கூறவேண்டும்” என்றனர். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடமே திரும்பி (ச் சென்று இதுபற்றி வினவி)னேன். நபியவர்கள், “சுப்ானல்லாி வல்ம்துலில்லாி, வல்லாு அக்பர் (அல்லாஹ் தூயவன்; அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்; அல்லாு மிகப் பெரியவன்) என்று 33 தடவை சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றும் 33 தடவை கூறியதாக அமையும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி-843

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *