இணக்கம் கருதி ஸலாம் சொல்பவர்கள்
நமக்கும் நம்மைச் சுற்றியிருக்கும் மற்றவர்களுக்கும் மத்தியில் எதாதொரு விஷயத்திலும் எந்தவொரு மனஸ்தாபமும் வரவே வராது என்று எவராலும் உறுதியிட்டு கூற முடியாது. காரணம், மனிதர்கள் என்ற அடிப்படையில் நம்மிடம் இருக்கும் குறைகளால் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற தருணங்களில் ஒருவருக்கொருவர் குரோதம் கொண்டு பழிவாங்கும் காரியங்களில் இறங்குபவர்கள் இருக்கிறார்கள். பல நாட்கள் பகைமை கொண்டு வழியில் முறைத்துக் கொள்கிறார்கள்; உறவை நட்பை முறித்துக் கொள்கிறார்கள். பல நாட்கள் பேசாமல் இருக்கிறார்கள். இவ்வாறு இல்லாமல், தவறை மறந்து மன்னித்து முதலில் ஸலாம் சொல்பவர் சிறந்தவர் என்று மார்க்கம் கூறுகிறது.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி), நூல் : புகாரி-6077 , (6237)