மக்கள் முன்னிலையில் தண்டனை
இவ்வசனத்தில் (24:2) தண்டனைகளை பொதுமக்கள் மத்தியில் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மக்களுக்குத் தெரியாமல் இரகசியமாக தண்டனைகளை நிறைவேற்றுவதை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் தண்டனை வழங்குவதற்கான நோக்கங்களில், அதைப் பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
எனவே மக்கள் முன்னிலையில் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால்தான் தண்டனை வழங்கப்படுவதன் நோக்கத்தை எட்ட முடியும். இதனால்தான் ‘தண்டனை அளிக்கப்படுவதை ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்’ என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.