*ஏக இறைவனின் திருப்பெயரால்…*

*பொருளாதாரத்தில் தன்னிறைவுப் பெற்று அதை அல்லாஹுவின் பாதையில் செலவிட மறுப்பவர்களா நீங்கள்…!* (உதாரணமாக: மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவிகள் போன்றவை)

பின்வரும் ஹதீஸில் படிப்பினை உள்ளது…

அல்லாஹ், *ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை* என்பான்.

அதற்கு மனிதன், *என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?* என்று கேட்பான்.

அதற்கு அல்லாஹ், *உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்:*

*அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்* என்று கூறுவான்.

மேலும் *ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை*

என்று அல்லாஹ் கூறுவான்.

அதற்கு மனிதன், *என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க,உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?* என்று கேட்பான்.

அதற்கு அல்லாஹ், *என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்துகொள்:*

*அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்* என்று கூறுவான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

நூல்: *ஸஹீஹ் முஸ்லிம் 5021*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடியான், *என் செல்வம்; என் செல்வம்* என்று கூறுகின்றான்.

அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குரியவையாகும்.

*அவன் உண்டு கழித்ததும், அல்லது உடுத்திக் கிழித்ததும், அல்லது கொடுத்துச் சேமித்துக்கொண்டதும்தான்* அவனுக்கு உரியவை.

மற்றவை *அனைத்தும் கைவிட்டுப் போகக்கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச்செல்லக் கூடியவையும்* ஆகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: *ஸஹீஹ் முஸ்லிம் 5666.*

ஆகவே….

*உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்!*

*”இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே”* என்று அப்போது (மனிதன்) கூறுவான்.

[அல்குர்ஆன் *63:10]*

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *