பேராசை படாமல் இருத்தல்
நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ”ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக்கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது.
அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது” என்று கூறினார்கள்.அப்போது நான், ”அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும்வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்” எனக் கூறினேன்.
ஆபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி)அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் ‘முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன்.
அவரோ அதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’ எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும்வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள்; நூல்: புகாரி-1472
இந்த செய்தியில் நபி(ஸல்)அவர்கள் செல்வத்தை பேறாசையில்லாமல் எடுத்தால் பரகத்தை பெறமுடியும். பெறாசையுடன் செல்வத்தை அடைந்தோமேயானால் பரகத்தை அடைய முடியாது. அதிகமானவர்கள் செல்வத்துக்காக எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்று இருக்கிறார்கள் இப்படிப்பட்வர்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் பரகத்தை வழங்கமாட்டன்.
அதுமட்டும் இல்லாமல் சிலர் காசு பணத்துக்காக கொள்கையைவிட்டுக் கூட தடம்புரளக்கூடிய நிலைமையை பார்கமுடிகிறது இப்படி இருந்தால் எப்படி பரகத்தை அடையமுடியும். இன்னும் நம்மில் சிலர் ஒரு பொருள் இலவசமாக கிடைப்பதாக இருந்தால் அதற்கு சண்டை இட்டுக் கொண்டு தன்மானத்தை விட்டு செல்வதை பார்கலாம்.
இவர்களுக்கு தன் மானத்தை விட செல்வம் பெரிதாக தெரிகிறது. இஸ்லாமிய மார்கம் தன்மானத்துடன் வாழச்சொல்லக்கூடிய மார்கம். தன்மானத்தை எல்லாம் தூக்கி எரிந்துவிட்டு செல்வத்துக்கு அடிபணிந்து இருந்தால் அல்லாஹ்வின் பரகத்தை எப்படி அடையமுடியும்? சிந்தித்துப்பார்கவேண்டும்! ஏற்றத் தாழ்வை பொருத்துக் கொள்ள வேண்டும்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் தன்னுடைய அடியானை அவன் வழங்குவதைக் கொண்டு சோதிப்பான் யார் அவன் பிரித்துக் கொடுத்ததை பொருத்துக் கொள்கிறானோ அவனுக்கு அதிலே பரகத்தை ஏற்படுத்துவான் விசாலமாக வழங்குவான். யார் அதை பொருத்துக் கொள்ளவில்லையோ அவனுக்கு பரகத்தை வழங்கமாட்டான்.
ஆறிவிப்பவர்: பனூ சுலைம் குலத்தைச் சார்ந்த ஒருவர்; நூல் : அஹமத்-19398
அல்லாஹ் இந்த உலகில் உள்ள அனைவரையும் செல்வந்தர்களாகப் படைத்திருக்க மாட்டான். ஏற்றத்தாழ்வுடன் தான் படைத்து இருப்பான். வசதியில்லாதவர்கள் வசதியானவர்களைப் பார்த்துவிட்டு அல்லாஹ் நம்மையும் அவர்களைப்போன்று வைக்கவில்லையே என்று நினைத்துவிடக்கூடாது. அதை நாம் பொருத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு பொருத்துக் கொள்வதின் மூலம் அல்லாஹ்வின் பரகத்தைப் பெற முடியும்.அல்லாஹ் சிலருக்கு செல்வத்தை குறைவாக கொடுத்து இருப்பான். அதை நாம் பொருத்துக் கொள்ளவில்லை என்றால் அவனுடைய பரகத்தை அடைய முடியாது.நாம் எப்பொழுதும் நம்மை விட வசதி குறைந்தவனைத் தான் பார்கவேண்டும் அப்படி பார்பதின் மூலம் நமக்கு செல்வத்தின் மேல் உள்ள மோகம் குறைந்துவிடும்.
நம்மை விட வசதி அதிகமானவனைப் பார்த்தால் அவன் அளவுக்கு நாம் எப்படி வசதியாகுவது என்று தான் நம்முடைய சிந்தனை இருக்குமே தவிர இருப்பதை வைத்து நாம் போதுமாக்கிக் கொள்ளமாட்டோம். இஸ்லாம் இதற்கு அழகிய வழி முறையில் கற்றுத்தருகிறது.
நூல்: புகாரி-6490
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி-6490
நம்மை விட குறைந்தவர்களை நாம் பார்த்தோம் என்றால் அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கும் அருளை விளங்க முடியும்.நம்மை விட மேலானவர்களை நாம் பார்த்தோம் என்றால் நமக்கு இருப்பது குறையாகத்தான் தெரியும்.குறைவாக இருந்தாலும் அல்ஹம்து