பேரணி, ஆர்ப்பாட்டம் என முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அந்நியர்களின் பார்வையில் மழையிலும் கூட மார்க்கச் சகோதரிகளைக் காட்சிக்கு வைப்பது மார்க்கத்தில் ஆகுமான காரியமா? என்று தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபட்டு நீக்கப்பட்டவர்களின் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கேள்வி எழுப்புகின்றார். இதற்கு என்ன பதில் கூறுவது?

பெண்கள் அன்னிய ஆண்கள் முன்னால் முகம் கை தவிர மற்ற அங்கங்களை மறைத்துக் கொண்டு வரலாம் என்பது பொதுவான அனுமதி. இதற்கு நபிவழியில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

பெருநாள் தொழுகையில் ஆண்கள் கலந்து கொள்வது போல் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகிறது.

இரு பெருநாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களையும் (தொழுகைத் திடலுக்கு) அனுப்பி வைக்குமாறு நாங்கள் (இறைத்தூதரால்) பணிக்கப்பட்டோம். பெண்கள் அனைவரும் முஸ்லிம்களின் கூட்டுத் தொழுகையில் பங்குகொள்ள வேண்டும்முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ள வேண்டும். மாதவிடாயுள்ள பெண்கள் மற்ற பெண்கள் தொழும் இடத்திலிருந்து விலகியிருக்க வேண்டும் (என்று நபி (ஸல்) அவர்கள் கூறஇதைக் கேட்டுக் கொண்டிருந்த) ஒரு பெண், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிலரிடம் அணிந்து கொள்ள மேலங்கி இல்லையே! (அவள் என்ன செய்வாள்?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு (இரவலாக) அணியக் கொடுக்கட்டும்!” என்றார்கள்.

அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி),

நூல்: புகாரி 351

இவர்களின் வாதப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களைக் காட்சிக்கு வைத்தார்கள் என்று ஆகுமே? அதுவும் பெருநாள் தினத்தில் புத்தாடை எல்லாம் அணிந்திருப்பார்களே? என்றெல்லாம் இவர்கள் கேட்பார்களா?

ஐந்து வேளைத் தொழுகையிலும் பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் எந்தத் தடுப்பும் போடப்படவில்லை.

ஆண்களும் பெண்களும் ஒன்றாக உளூச் செய்துள்ளனர். இதனால் கைகளை மனிக்கட்டு வரை வெளிப்படுத்தும் நிலையும் தலையைத் திறக்கும் நிலையும் ஏற்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களைக் காட்சிப் பொருளாக ஆக்கிவிட்டார்கள் என்று இவர்கள் கூறுவார்களா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே (ஓரிடத்தில்) உளூ செய்வார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 193

போர்க்களத்திலும் பெண்கள் கலந்து கொண்டு காயமடைந்த ஆண்களுக்கு மருத்துவம் செய்யவும், தண்ணீர் விநியோகிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

நாங்கள் இரு பெருநாள்களிலும் (தொழுமிடத்திற்கு) புறப்பட்டு வருவதை விட்டும் எங்கள் குமரிப் பெண்களை தடுத்துக் கொண்டிருந்தோம். இந்நிலையில் ஒரு பெண்மணி வந்து பனூ கலஃப் குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அத்தியா- ரலி) வழியாக வந்த செய்தியை அறிவித்தார்.

என்னுடைய சகோதரி (உம்மு அத்திய்யா) அவரது கணவர் நபி (ஸல்) அவர்களோடு பன்னிரண்டு போர்களில் கலந்து கொண்டார். இதில் என் சகோதரி ஆறு போர்களில் தம் கணவரோடு இருந்தார்.

என் சகோதரி (உம்மு அத்திய்யா) கூறினார்:

(பெண்களாகிய) நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்களில் காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்நோயாளிகளைக் கவனித்தோம். நான் நபி (ஸல்) அவர்களிடம், “எங்களில் ஒரு பெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரசாரங்களிலும் கலந்து கொள்ளட்டும்!” என்று சொன்னார்கள்.

ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்த போது, “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் செவியுற்றீர்களா?” என்று நான் கேட்டேன் அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள், “என் தந்தை நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும். ஆம்! நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று சொன்னார்கள். உம்மு அத்திய்யாநபி (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதேல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும் என்பதையும் சேர்த்தே கூறுவார்.

வயது வந்த பெண்களும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களும் மாதவிடாயுள்ள பெண்களும் (பெருநாள் தினத்தன்று) வெளியே சென்று நன்மையான செயல்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரசாரத்திலும் கலந்து கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருப்பார்கள் என்று கூறினார்கள்” என்றார் உம்மு அத்திய்யா (ரலி)

(இதை அறிவித்த உம்மு அத்திய்யா அவர்களிடம்) நான், “மாதவிடாயுள்ள பெண்களுமா (பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்)?” என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள், “மாதவிடாயுள்ள பெண் அரஃபாவுக்கும் (மினாமுஸ்தலிஃபாபோன்ற) இன்னின்ன இடங்களுக்கும் செல்வதில்லையா?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

அறிவிப்பவர்: ஹஃப்ஸா பின்த் சீரீன்

நூல்: புகாரி 351, 979, 1250, 1953

சபைகளில் கேள்வி கேட்பதற்காகப் பெண்கள் வந்து நபிகள் நாயகத்திடம் கேள்வியும் கேட்டனர். அதைப் பல ஆண்களும் பார்த்தனர்.

ஹஜ் பயணத்தின் போது ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே பயணித்துள்ளனர். அப்போது பெண்கள் ஆண்களின் பார்வையில் பட்டுள்ளனர்.

(விடைபெறும்‘ ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபழ்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபழ்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) “கஸ்அம்‘ குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபழ்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்த போது ஃபழ்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபழ்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.

அப்போது அப்பெண், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்கள் மீது விதித்துள்ள ஹஜ்என் தந்தையின் மீது கடமையாயிற்று. அவரோ வயது முதிந்தவர்வாகனத்தில் அவரால் சரியாக அமர இயலாது. ஆகவேநான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்ஆம் (நிறைவேறும்) என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி),

நூல்: புகாரி 6228

இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அறிவுடையோருக்கு இது போதுமானதாகும்.

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *