பெண் விலா எலும்பைப் போன்றவள்
பெண் என்றால் இப்படித் தான்
பெண்’ இந்தச் சொல்லுக்கு எத்தனையோ விதமான பொருள்கள் நடைமுறையில் வழங்கப்படுகின்றது. அமைதியின் பிறப்பிடம்; அன்பின் உறைவிடம்; சகிப்புத் தன் மையின் உச்சக்கட்டம்; இன்னும் இதுபோன்று பல விளக் கங்களுக்கு அந்த ஒற்றை வார்த்தை இலக்காகிறது. ஆனால் நடைமுறை வாழ்வில் மேற்கண்ட விளக்கங்களில் ஒன்று கூடப் பொருந்தாத நிலையில்தான் நிகழ்காலப் பெண்களின் வாழ்க் கைத் தரம் அமைந்துள்ளது.
இத்தகையவர்களை மனைவிகளாக பெற்ற கணவர்கள், அவர்களின் தவறுகளை மன்னித்து, மனைவியிடம் நல்ல முறையில் நடக்க வேண்டும். சிறுசிறு தவறுகளுக்கெல்லாம் சண்டையிட்டால், இறுதி மணவிலக்கு தான்.
விலா எலும்பைப் போன்றவள்
பெண் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவள் ஆவாள். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை நீ அப்படியே விட்டுவிட்டால், அவளில் கோணல் இருக்கவே அவளை அனுபவிக்க வேண்டியதுதான் என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (2912)
இந்த நபிமொழி பெண்களின் இயற்கை தன்மை குறித்து தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. பெண்களைப் பொருத்தவரை வேகமாக உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள், தொலை நோக்கு பார்வை குறைவாக உள்ளவர்கள், விரைவாக தீர்வு எடுக்க அவச ரப்படுபவர்கள் என்ற குணங்கள் இயல்பாக பெரும்பாலான பெண்களிடம் உண்டு. எனவே அவர்களது சிந்தனையும் செயலும் கோணலாக அமையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவேதான் அக்கோணலை சரியாக்கும் முயற்சியில் ஈடுபடும்போது எதிர்மறையாக மணமுறிவு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆண் மணமுறிவு வேண்டும்போது அவசரம் காட்டுதல் கூடாது என்றும் அவளை வெறுப்பது என்றால் கூட நிதானம் வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள்.
“இறை நம்பிக்கைகொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கை யுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிட மிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத் தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்திகொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (2915)
எனவே பெண்களை ஆண்கள் வெறுக்கக் கூடாது என்று வலியுறுத் தியுள்ள தகவல்கள் பெண்களைப் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் ஆணிடம் இருப்பதாகக் விளக்குகின்றன.
சிறந்த செல்வம்
இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
நூல் : முஸ்லிம் (2911)
அமைதியின் உச்ச கட்டம்
நபி (ஸல்) அவர்கள் தமது மனைவி மார்களில் ஒருவரிடம் இருந்தார்கள். விசுவாசிகளின் தாய்மார்களில் ஒருவர் (நபியவர்களின் மனைவிமார்களில் ஒருவர்) பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத் தனுப்பினார்கள். (அவர்கள் உணவு) கொடுத்தனுப்பிய வீட்டிலிருந்த நபி (ஸல்) அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து, உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்), உண்ணுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து (அனுப்பி) விட்டார்கள்.
நூல்: புகாரீ 2481
எனவே. இனி வரும் காலங்களில் மனைவியிடம் நல்ல முறையில் நடந்து, அவளின் தவறுகளை மன்னித்து, இறைவனிடம் நன்மைகளை பெறும் நன்மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக!