பெண்கள் தலையில் பூ வைத்து கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளதா❓
பூ என்பது நறுமணப் பொருளாகவும் அலங்காரமாகவும் உள்ளது.
பெண்கள் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெண்கள் இஷாத் தொழுகைக்கு பள்ளிக்கு வரும்போது நறுமணம் பூசிக்கொண்டு வரக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே பூ வைத்துக் கொண்டு இரவில் பள்ளிக்கு வரக்கூடாது.
பள்ளி அல்லாத மற்ற இடங்களுக்கு பூ வைத்துக்கொண்டு செல்லலாம். பூ அலங்காரமாக இருப்பதால் அந்நிய ஆண்களிடம் இதை வெளிப்படுத்துவது கூடாது.
பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.
அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.
நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் (24 : 31)
எனவே அந்நிய ஆண்கள் பார்க்கும் வகையில் வெளிப்படையாக பூ வைப்பது கூடாது.
மற்ற அலங்காரங்களை அந்நிய ஆண்களிடமிருந்து மறைப்பது போல் இதையும் மறைக்க வேண்டும்.
ஏகத்துவம்