பெண்கள் ஜனாஸாவை ஆண்கள் பார்க்கலாமா?
இறந்த பெண்ணின் முகத்தை ஆண் பார்ப்பதற்கும் இறந்துவிட்ட ஆணின் முகத்தை பெண் பார்ப்பதற்கும் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.
மற்றவர்களை ஆசை உணர்வுடனும் தவறான எண்ணத்துடனும் பார்ப்பது தான் தடைசெய்யப்பட்டுள்ளது.
நபியவர்களின் காலத்தில் பெண்கள் தங்கள் முகத்தை திறந்திருந்தார்கள் என்பதை பல ஹதீஸ்களில் காணுகிறோம்.
உயிருடன் இருக்கும் போது எம்முறையில் பார்ப்பது அனுமதிக்கப்பட்டிருக்கிறதோ அம்முறையில் இறந்தவரைப் பார்ப்பதில் குற்றமில்லை. உயிருடன் இருக்கும் போது எந்த எண்ணத்தில் மற்றவர்களைப் பார்க்கக்கூடாதோ அவ்வெண்ணத்தில் இறந்தவர்களையும் பார்க்கக்கூடாது.