பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம்
துல்கர்கணைன் என்ற மன்னர் மேற்கொண்ட ஒரு நீண்ட பயணத்தைப் பற்றி இவ்வசனம் (18:90) கூறுகிறது.
துல்கர்ணைன் கிழக்கு நோக்கித் தன் பயணத்தைத் துவக்குகிறார். கிழக்கு நோக்கிச் சென்றவர் திடீரென மேற்கு நோக்கிச் சென்று விடுகிறார் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது.
உலகம் உருண்டையாக இருந்தால் மாத்திரமே இது சாத்தியமாகும். அப்போதுதான் கிழக்கு நோக்கிப் புறப்பட்டவர் மேற்கு நோக்கி வந்து சேர முடியும்.
உதாரணமாக ஒரு பெரிய உருண்டையை ஒரு சட்டத்தில் நிறுத்தி வையுங்கள். உங்கள் விரலை அதன் மேற்புறத்தில் வைத்து விரலை நகர்த்திக் கொண்டே ஆரம்பித்த இடத்துக்குக் கொண்டு வாருங்கள்.
கிழக்கிலிருந்து மேற்காக விரலைக் கொண்டு சென்றால் பாதி உருண்டை வரை மேற்கு நோக்கிச் சென்ற உங்கள் விரல் உருண்டையின் சரிபாதியைக் கடந்த பின் கிழக்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்து துவங்கிய இடத்தை அடையும்.
சென்னையில் இருக்கும் ஒருவர் கிழக்கு நோக்கி நேர்கோட்டில் பயணிக்கிறார். அவர் பயணித்துக் கொண்டே இருக்கிறார். நீங்களும் அவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறீர்கள். 180 டிகிரி அதாவது சென்னைக்கு நேர் கீழே உள்ள பகுதிவரை கிழக்கு நோக்கியே சென்ற அவர் 180 டிகிரியை அடைந்ததும் மேற்கே திரும்ப ஆரம்பித்து விடுவார். மேற்குத் திசையில் இருந்து அவர் உங்களை அடைவார்.
ஒரு மணி நேரத்தில் உலகைச் சுற்றும் வேகத்தில் பயணிக்கும் ஒரு வாகனம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். சென்னயில் இருந்து ஒருவர் கிழக்குத் திசையில் நேர்கோட்டில் பயணிக்கிறார். ஒரு மணி நேரத்தில் புறப்பட்ட இடத்துக்கு அவர் வந்து விடுவார். அவர் எந்தத் திசையில் புறப்பட்டாரோ அந்தத் திசையிலிருந்து அவர் வர மாட்டார். எதிர்த்திசையிலிருந்து தான் வந்து சேர்வார்.
பூமி உருண்டை என்பதால் பாதியைக் கடந்ததும் திசை மாறிவிடும்.
சாதாரணமாக எந்த உருண்டையை நீங்கள் பார்த்தாலும் பாதி உருண்டை ஒரு திசையை நோக்கினால் மீதி உருண்டை எதிர்த் திசையைத் தான் நோக்கும். அப்படி நோக்காவிட்டால் அது உருண்டையாக இருக்காது.
ஒரு வரலாற்று நிகழ்ச்சியைக் கூறும்போது கூட மிகக் கவனமாக இந்த அறிவியல் உண்மையைக் கூறியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்கு மற்றொரு சான்று.