புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு
இவ்வசனங்களில் (20:53, 43:10, 78:6) பூமியைத் தொட்டிலாக இறைவன் ஆக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்கராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால் கட்டி இழுக்கப்படுவது போன்ற நிலையில் இந்தப் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.
மணிக்கு 1,07,000 கி.மீ. வேகத்தில் சூரியனை ஒரு ரங்கராட்டினம் போல் பூமி சுற்றி வந்தாலும் அதை நம்மால் உணர முடிவதில்லை. அது சுற்றுவது நமக்குத் தெரிவதும் இல்லை.
குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு ஆட்டும்போது அதன் சுழற்சி குழந்தைகளுக்குத் தெரியாது. அவர்களுக்கு அது சுகமாகவும், நித்திரை தருவதாகவும் இருக்கும்.
பூமி வேகமாகச் சுழன்றாலும் அந்தச் சுழற்சி நமக்குத் தெரியாது. எந்த விதமான பாதிப்பும் நமக்கு இருக்காது. ‘தொட்டிலாக’ என்ற சொல் மூலம் இதைத்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
மாபெரும் அறிவியல் உண்மையை உள்ளடக்கி இவ்வசனம் இறைவனின் வார்த்தையே என்பதற்கான சான்றாக அமைகின்றது.