//புறம் தரும் மண்ணறை வேதனை//
கோள் சொல்பவர்கள் சொர்க்கம் புக முடியாது என்பதோடு மண்ணறையிலும் கடுமையான வேதனைக்கு ஆளாவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை’ என்று சொல்லிவிட்டு,
‘இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்’ என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள்.
அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் ‘நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என்று கேட்கப்பட்டதற்கு, ‘அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல் : புகாரி 216
\புறம் பேசுவதை தவிர்க்க ஒரு நல்ல வழி\
பிறரைப்பற்றி ஒரு குறை நமக்கு தெரியவருமாயின் அதை மறைத்து விடவேண்டும். அவ்வாறு மறைத்தால் நமது குறைகளை இறைவன் மறுமையில் மறைத்து விடுகின்றான்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் மற்றோர் அடியாரின் குறையை இவ்வுலகில் மறைத்தால் அவருளடைய குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர்: ஆஹுரா (ரலி); நூல் : முஸ்லிம் 504
நமது குறைகள் தவறுகள் மறைக்கப்பட வேண்டிய முக்கிய தருணம் மறுமை நாள் தான். இவ்வுலகில் அவைகள் வெளிப்படுத்தப்பட்டால் அதனால் பெரிய விளைவுகள் ஏதும் ஏற்பட போவதில்லை.
ஆனால் *மறுமை நாளில் நமது குறைகள் வெளிப்படுத்தப்பட்டால் அதை விட வேறு கேவலம் கிடையாது எனவே மறுமையில் நாம் அசிங்கப்படுவதை அவமானப்படுவ தவிர்க்க புறம் பேசுவதை தவிர்த்தே ஆக வேண்டும் என்பாத மனதில் நீக்கமற பதிய வேண்டும் *.
புறம் என்ற தீய குணம் நம்மை விட்டும் விரட்டியடிப்போம்