*பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு அஞ்சிவோம்*
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
*அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும்! ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை*.
நூல்: புகாரி 1496
*அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை* என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள்.
நூல்: புகாரி 2448
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*அநீதி, மறுமை நாளின் பல இருள்களாக காட்சி தரும்.*
நூல்: புகாரி 2447
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் அநீதியானது, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும்.*
நூல்: முஸ்லிம் 5034
மறுமையின் இருள் என்பது நாம் மீளவே முடியாத அளவுக்குப் படுபயங்கரமான பாதிப்பை ஏற்ப்படுத்துகின்ற இழிவு தரும் இருளாகும். அந்த இழிவிலிருந்தும், இருளிலிருந்தும் நாம் தப்பிக்க வேண்டுமானால் பிறருக்கு அநீதி இழைப்பதிலிருந்து தவிர்ந்து இருக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
*அநீதி இழைத்தோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.*
அல்குர்ஆன் 3:57
அத்தகையவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்குப் பயந்து திருந்தி வாழ வேண்டும். அதற்கு வல்ல இறைவன் உதவி செய்வானாக!!!