பரகத்தை வலியுருத்தி நபிகளாரின் துஆ
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் தங்களுடைய தோழர்களுக்காக துஆ செய்யும் போதும் அதிகாமாக இந்த பரகத்தை வலியுருத்தி துஆ செய்தார்கள். ஒருவருடைய வாழ்கையில் பரகத் கிடைத்து விட்டது என்றால் அவனுடைய வாழ்கை நிம்மதியாக இருக்கும்.
என் தாயார்(உம்மு சுலைம்)அவர்கள் நபி(ஸல்)அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! தாங்களின் சேவகர் அனசுக்காகப் பிரார்த்தியுங்கள் என்றார்கள். நபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிக மாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ளவற்றில் அபிவிருத்தி வழங்குவாயாக! என்று பிரார்தித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)அவர்கள்; நூல்: புகாரி-6344
நபி(ஸல்)அவர்கள் தங்களுடைய சேவகர் அனஸ{க்காக பிரார்திக்கும் போதும் பரகத்தை வலியுருத்தி கேட்டுள்ளார்கள்.
ஒருவருடைய வாழ்கையில் மிக முக்கியமான நேரங்களில் ஒன்று திருமனம் அந்த திருமனத்தில் நபி(ஸல்)அவர்கள் மணமக்களை வாழ்த்துவாதற்காக கற்றுத்தந்த துஆ பரகத்தை வலியுருத்தக்க கூடியதாகத்தான் இருந்தது.
அல்லாஹ் உனக்கு பரக்கத் செய்யட்டும் உங்கள் இருவரையும் நல்ல விஷயத்தில் ஒன்று சேர்க்கட்டும். நபி(ஸல்) அவர்கள் திருமனம் முடிக்கும் போது ஒரு மனிதனை வாழ்த்தினால் அல்லாஹ் உங்களுக்கு அகத்திலும் புறத்திலும் அபிவிருத்தி வழங்குவாயாக! நல்ல காரயங்களில் இவ்விருவரையும் ஒன்று சேர்பாயாக! மற்ற ஒரு அறிவிப்பில் “அல்லாஹ் உமக்கு அபிவிருத்தி வழங்குவானாக!” என்று மட்டும் வந்துள்ளது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: திர்மிதி-1011
அந்த சந்தர்பத்தின் போது கூட நபி(ஸல்)அவர்கள் பணத்தை கேட்டு பிரார்த்தனை செய்யாமல் பரகத்தை வலியுருத்தித்தான் பிரார்த்தனை செய்தார்கள். அதுமட்டுமல்லாமல் நபி(ஸல்)அவர்கள் மதினா நகருக்கு ஒரு பிரத்தியோகமான துஆவைக்கேட்டார்கள் அந்த துஆவும் பரகத்தை வலியுருத்தித்தான் இருந்தது.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வே! நீ மக்காவுக்கு வழங்கிய பரகத்தைப் போல் இருமடங்கு பரகத்தை மதினாவுக்கு வழங்குவாயாக!
அறிவிப்பவர்: அனஸ்(ரலி) அவர்கள்; நூல்: புகாரி-1885
இந்த துஆவின் பிரதிபலனை அந்த மக்களும் அனுபவித்தார்கள். மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதினாவுக்கு வந்த போது மதினாவிலிருந்த மக்கள் தங்கள் சொத்துக்களில் சரி பாதியை மக்கத்து மக்களுக்கு வழங்கினார்கள்.
எவ்வளவு அவர்களுடைய செல்வத்தை மக்கத்து மக்களுக்கு வழங்கினாலும் மதினாவில் அதை வழங்கிய மக்களுக்கு எந்த குறையும் ஏற்படவில்லை. ஏன் என்றால் மதினாவுக்கு நபி(ஸல்)அவர்கள் கேட்ட துஆ பிரதிபலித்தது. பாதியைக் கொடுத்தாலும் மீதியை வைத்து முழுவதும் இருந்தால் எப்படி வாழ்தார்களோ அதே போன்று தான் வாழ்ந்தார்கள்.