பரகத்தை அடைய என்ன வழி?
ஹலாலான சம்பாத்தியம்
எனவே நம்முடைய வாழ்கையில் நமக்கு பரகத் கிடைத்தது என்றால் நாம் நிம்மதியாக வாழமுடியும்.அதை எந்த வழிகளில் பெருவது என்பதையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள்.அந்த அடிப்படையில் செயல்பட்டோம் என்றால் நமக்கும் நம்முடைய வாழ்வில் அபிவிருத்தியைப் பெறமுடியும்.
நபி(ஸல்)அவர்கள்:
யார் செல்லவத்தை உரியமுறையில் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு பரகத் கிடைக்கும்;. யார் செல்வத்தை தவரான முறையில் எடுத்துக் கொள்கிறாரோ அவர் சாப்பிட்டுவிட்டு வயிரு நிரம்பாதவனைப் போல என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுசயீதில் குத்ரி; நூல்: முஸ்லிம்-1742
நமது பொருளாதாரத்தில் அபிவிருத்தியைப் பெறவேண்டுமானால் நாம் பொருளாதாரத்தை திரட்டும் போது இஸ்லாம் அனுமதித்த முறையில் திரட்ட வேண்டும். அவ்வாறு நாம் திரட்டினோம் என்றால் அவனின் பரகத்தை அடைய முடியும். இல்லாவிட்டால் நமக்கு எவ்வளவு பொருளாதரம் கிடைத்தாலும் அதைக் கொண்டு நம்முடைய தேவைகள் நிறைவடையாது என்பதை இறைத்தூதர்(ஸல்)அவர்கள் சாப்பிட்டும் வயிரு நிரம்பாதவர்போல என்று குறிப்பிடுகிறார்கள்.
எனவே முதலில் நம்முடைய வாழ்கையில் பரகத் கிடைக்க வேண்டுமானால் நம்முடைய தொழிலில் நாம் இஸ்லாம் தடுத்த விஷயங்களை சேர்த்துள்ளோமா என்பதை கவணிக்க கடமைப்பட்டுள்ளோம்.
அதிகமானவர்களுக்கு பரகத் கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் தங்களின் வியாபரத்தில் வட்டி போன்ற மார்கம்அனுமதிக்காத காரியங்களை செய்வதுதான். நமக்கு குறைவாக கிடைத்தாலும் சரி இஸ்லாம் அனுமதித்த முறையில் தான் கிடைக்கவேண்டும் என்று உருதியாக இருந்தால் அவனுடைய பரகத்தை பெறமுடியும்.