பனூ நளீர் குலத்தாரின் மரங்களை வெட்டிய போது இறங்கிய வசனம்
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புவைரா எனுமிடத்திலிருந்த பனூ நளீர் குலத்தாருடைய சில பேரீச்ச மரங்களை (அவர்களின் தேசத் துரோகக் கொடுஞ் செயல்களுக்காக) எரித்தார்கள். இன்னும் (சிலவற்றை) வெட்டினார்கள்.
அப்போது அல்லாஹ், நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் அடி மரங்களின் மீது அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதோ எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்) எனும் (59:5ஆவது) வசனத்தை அருளினான்.
(புகாரி 4884)