நோயாளியை சந்திக்கும் போது ஓதும் துஆக்கள்
————————————————
துஆ (01)

அல்லாஹும்ம ரப்ப(B]ன்னாஸி முத்ஹிபல் ப(B]ஃஸி இஷ்பி[F] அன்தஷ் ஷாபீ[F] லா ஷாபி[F]ய இல்லா அன்(த்)த ஷிபா[F]அன் லா யுகாதிரு ஸகமா.

‎اَللّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَأْسِ اِشْفِ أَنْتَ
‎الشَّافِيْ لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

பொருள்: இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாக்க் குணப்படுத்து!

நூல்: புகாரி 5742.
———————————
துஆ (02)

அல்லாஹும்ம ரப்ப(B]ன்னாஸி அத்ஹிபில் ப(B]ஃஸ இஷ்பி[F]ஹி வஅன்தஷ் ஷாபீ[F] லாஷிபா[F]அ இல்லா ஷிபா[F]வு(க்)க ஷிபா[F]அன் லா யுகாதிரு ஸகமா

‎اَللّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ اِشْفِهِ وَأَنْتَ الشَّافِيْ لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

பொருள்: இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத நிலையில் முழுமையாக குணப்படுத்து!

நூல்: புகாரி 6743.
—————————————-
துஆ (03)

நோயாளியின் உடலில் கையை வைத்து பி(B]ஸ்மில்லாஹ் என்று மூன்று தடவை கூறி விட்டு*

அவூது பி(B]ல்லாஹி வகுத்ர(த்)திஹி மின் ஷர்ரி மாஅஜிது வஉஹாதிரு
என்று ஏழு தடவையும் கூற வேண்டும்.

‎بِاسْمِ اللهِ

‎أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

பொருள்: நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

நூல்: முஸ்லிம் 4082
——————————————
துஆ (04)

லா ப(B]ஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்.
எனக் கூறலாம்.

‎لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللهُ

பொருள்: கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும்.

நூல்: புகாரி 3616.


ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *