நோன்பு
இறைவன் கட்டளையிட்டான் என்பதற்காக வைகறையிலிருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமலும், பருகாமலும் குடும்ப வாழ்வில் ஈடுபடாமலும் இருக்கும் கட்டுப்பாடே நோன்பு எனப்படும்.
ஆண்டுதோறும் ரமலான் எனும் மாதம் முழுவதும் இவ்வாறு நோன்பு நோற்பது கட்டாயமாகும். இது தவிர சில குற்றங்களுக்கான பரிகாரமாகவும் நோன்பு கூறப்பட்டுள்ளது.