நின்றவாறு சிறுநீர் கழிக்கலாமா?
அமர முடியாத இடத்தில் நின்று கழிக்கலாம்.
அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்று இஸ்லாம் கற்றுத் தருகின்றது.
(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று யாரேனும் உமக்கு அறிவித்தால் அவரை நம்பி விடாதே! பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அவர்களுக்கு அருளப்பட்டதிலிருந்து அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை.
அறி: ஆயிஷா (ரலி)
அஹ்மத் 24604
ஆனால் சில நேரங்களில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்துள்ளார்கள்.
சிறுநீர் கழிக்கக் கூடிய இடம் அசுத்தமாக இருக்குமானால் நாம் உட்கார வேண்டியதில்லை. உட்கார்ந்து இருப்பதன் நோக்கமே அசுத்தம் படக் கூடாது என்பது தான். உட்கார்ந்தால் அசுத்தம் பட்டுவிடும் என்று இருந்தால் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதே சிறந்தது. மொத்தத்தில் தூய்மை அவசியம்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்.
அறி: ஹுதைஃபா (ரலி)
புகாரி 224