*சிந்திக்க வைக்கும்…*
ஹதீஸ் *ஸஹீஹ் முஸ்லிம்: 4989.*
———————————————-

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
*“நல்லறங்களில் மிகவும் சிறந்தது*,

*ஒரு பிள்ளை தன் தந்தையின் அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்”* என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்”.

என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
———————————————-

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

*உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.*

இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் *முஸ்லிம்: 4997.*
——————————————

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தமது *வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதை*, அல்லது *வாழ்நாள் நீட்டிக்கப்படுவதை* விரும்புகின்றவர் தமது *உறவைப் பேணி வாழட்டும்*.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் *முஸ்லிம்: 4998.*
———————————————

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

“அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது *”உறவு”* எழுந்து, (இறைஅரியணையின் கால்களைப் பற்றிக்கொண்டு) “(மனிதர்கள் தம்) *உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்”* என்று கூறியது.

அல்லாஹ், “ஆம்; *உன்னை (அதாவது உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்துகொள்வேன்* என்பதும்,

*உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்துவிடுவேன்* என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று கேட்டான்.

அதற்கு உறவு, “ஆம் (திருப்தியே) என் இறைவா!” என்று கூறியது. *அல்லாஹ், “அது உனக்காக நடக்கும்” என்று சொன்னான்* என்றார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

ஸஹீஹ் *முஸ்லிம்: 4994.*
——————————————

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *