*நல்லடியார்களிடம் கையேந்தக் கற்றுக் கொடுத்த தலைவர்கள் நாளை மறுமையில் என்ன சொல்வார்கள்??* அல்லாஹ் பகிரங்கப்படுத்தும் நிகழ்வை பாருங்கள்:
அல்குர்ஆன்: 2:165-167
—————————————-
மனிதர்களில் சிலர், அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களையும் (அவனுக்கு) நிகரானவர்களாய் ஆக்கிக் கொள்கிறார்கள். மேலும், அல்லாஹ்வை எவ்வாறு நேசிக்க வேண்டுமோ அது போல அவர்களை நேசிக்கின்றார்கள்.
ஆனால் இறைநம்பிக்கை கொண்டவர்களோ அல்லாஹ்வை அனைவரையும்விட அதிகமாக நேசிக்கிறார்கள். ஆற்றல் முழுவதும் அல்லாஹ்வின் பிடியிலேதான் இருக்கிறது; மேலும், *அல்லாஹ் கடுமையாக தண்டனை கொடுப்பவன் * என்பதை இந்த அக்கிரமக்காரர்கள் வேதனையை (நேரில்) காணும்போது அறியத்தான் போகின்றார்கள்!
(தண்டனை வழங்கப்படும்) அந்த நேரத்தில், (இவ்வுலகில்) பின்பற்றப்பட்டு வந்த (வழிகாட்டிகள் மற்றும் தலை) வர்கள் தம்மைப் பின்பற்றி வந்தோரை விட்டு (அவர்களுக்கும் தமக்குமிடையில் எந்தத் தொடர்புமில்லை என்று கூறி) விலகி விடுவார்கள்.
ஆயினும் அவர்கள் தண்டனை பெற்றே தீருவார்கள்! மேலும் அவர்களுக்கிடையே இருந்த எல்லா உறவுகளும் முற்றிலும் அறுந்துவிடும்!
அப்பொழுது அத்தலைவர்களைப் பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: *“நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமானால், * இன்று நம்மைவிட்டு அவர்கள் விலகிக் கொண்டது போல நாமும் அவர்களை விட்டு விலகிக் கொள்வோமே!”
இவ்வாறு வேதனையாலும், துக்கத்தாலும் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கும் வகையில் அவர்கள் (இவ்வுலகில்) செய்த தீய செயல்களை அல்லாஹ் அவர்களுக்குக் காண்பித்துக் கொடுப்பான். மேலும், நரகத்திலிருந்து அவர்கள் வெளியேறிவிட முடியாது.
அல்குர்ஆன் 24:39
——————————-
எவர்கள் நிராகரித்து விட்டார்களோ அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை). ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான். (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் தீவிரமானவன்.