நபியாவதற்கு வயது வரம்பு இல்லை
இவ்விரு வசனங்களில் (19:12, 19:30) சிறு வயதில் இருவர் நபியாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வேதம் வழங்கப்படுவதும், ஒருவர் நபியாக ஆக்கப்படுவதும் நாற்பது வயதில்தான் என்று கூறி, நாற்பதுக்கு தனி முக்கியத்துவம் இருப்பது போல் சில முஸ்லிம் அறிஞர்கள் சித்தரிக்கின்றனர். இதற்கு மறுப்பாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.
நபியாக நியமிக்கப்படுவதற்கும், வயதுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாகும்.