நபித்தோழர்கள் நபியிடம் கற்றுத் தருமாறு கேட்ட சில துஆக்களில் இதுவும் ஒன்று…
ஷகல் இப்னு ஹுமைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கொரு துஆவைக் கற்றுத் தாருங்கள்! என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹூம்ம இன்னீ அவூது பிக்க மின் ஷர்ரி ஸம்யீ, வமின் ஷர்ரி பஸரீ, வமின் ஷர்ரி லிசானீ, வமின் ஷர்ரி கல்பீ, வமின் ஷர்ரி மனிய்யீ என்று நீ கூறு’’ என பதிலளித்தார்கள்.
பொருள்: அல்லாஹ்வே! என்னுடைய செவிப்புலனின் தீங்கிலிருந்தும்,
என்னுடைய பார்வையின் தீங்கிலிருந்தும்,
என்னுடைய நாவின் தீங்கிலிருந்தும்,
என்னுடைய உள்ளத்தின் தீங்கிலிருந்தும்,
என்னுடைய மறைவுறுப்பின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் கோருகிறேன்
நூற்கள்: அபூதாவூத் (1327), திர்மிதி (3414)