நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசி என்று நற்சான்று அளித்தவர்கள்
————————
சொர்க்கத்திற்கு நன்மாறாயம் பத்து 10 நபித்தோழர்கள்
1.அபூபக்கர் (ரலி)
2.உமர் (ரலி)
3.உஸ்மான் (ரலி)
4.அலி (ரலி)
5.தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி)
6.ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி)
7.அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)
8.ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி)
9.ஸயீத் இப்னு ஸைத் (ரலி)
10.அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி)
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)
திர்மிதி 3747
பிலால் (ரலி) அவர்கள்
————————————-
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒரு ஃபஜ்ருத் தொழுகையின்போது பிலால்(ரலி) அவர்களிடம் ‘பிலாலேஸ இஸ்லாத்தில் இணைந்த பின் நிர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்‘ என்று
நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்த செயல் என்று விடையளித்தார்கள்.
ஸஹீஹுல் புகாரி: 1149.
உம்மு சுலைம் (ரலி) அவர்கள்
—————————————
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (கனவில்) சொர்க்கத்தில் நுழைந்தேன். அங்கு ஒரு காலடிச் சப்தத்தைக் கேட்டேன். அப்போது இது யார்? என்று கேட்டேன்.
அ(ங்கிருந்த வான)வர்கள், “இவர்தான் அனஸ் பின் மாலிக் அவர்களின் தாயார் ஃகுமைஸா பின்த் மில்ஹான் என்று பதிலளித்தனர்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்: 4851
உக்காஷா (ரலி) அவர்கள்
——————————-
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
‘என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம் சந்திரன் பிரகாசிப்பது போல் முகங்கள் பிராகாசித்தபடி சொர்க்கத்துக்குள் நுழைவார்கள்‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உடனே உக்காஷா இப்னு மிஹ்ஸன் அல்அசதீ(ரலி) அவர்கள் தம் மீதிருந்த கோடுபோட்ட வண்ணப் போர்வையை உயர்த்தியவாறு எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார்கள்.
நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக’ என்று பிரார்த்தனை செய்தார்கள். பிறகு அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உக்காஷா உம்மை முந்திக் கொண்டுவிட்டார்’ என்றார்கள்.
ஸஹீஹுல் புகாரி: 5811.
*உம்மு சுஃபைர்* ரலி அவர்கள்
——————————
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், *சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?* என்று கேட்டார்கள். நான், *ஆம்; (காட்டுங்கள்)* என்று சொன்னேன்.
அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, *நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்* என்றார்.
நபி (ஸல்) அவர்கள், *நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்* என்று சொன்னார்கள்.
இந்தப் பெண்மணி, *நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்துகொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்* என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அதாஉ பின் அபீரபாஹ்
நூல்: *புகாரி 5652*
_______________________
*ஹாரிஸா பின் நுஃமான்* (ரலி)
———————————
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு (ஒருநாள்) கனவில் சொர்க்கம் எடுத்துக்காட்டப்பட்டது. அப்போது அங்கே ஒருவர் குர்ஆன் ஓதுவதை செவியுற்றேன். அப்போது இவர் யார்? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், *இவர்தான் ஹாரிஸா பின் நுஃமான்* என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், *நன்மை இவ்வாறு தான். நன்மை இவ்வாறு தான்* என்று கூறிவிட்டு, *அவர் தான் மக்களிலேயே தன்னுடைய தாய்க்கு அதிகமாக நன்மை செய்யக்கூடியவராக இருந்தார்* என்று கூறினார்கள்.
நூல்: *அஹ்மத் 24026*
*பத்ருப் போரில் கலந்து கொண்ட அனைவருமே சொர்க்கவாசிகள்*
————————————-
நபி (ஸல்) அவர்கள், *இவர் பத்ருப் போரில் கலந்துகொண்டவர் இல்லையா? உங்களுக்கு என்ன தெரியும்? * ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களிடம் *நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள். சொர்க்கத்தை உங்களுக்கு நான் உறுதியாக்கிவிட்டேன்* என்று கூறிவிட்டிருக்கலாம்” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்களின் கண்கள் கண்ணீரில் மூழ்கின.(ஹதீஸின் சுருக்கம்)
அப்போது உமர் (ரலி) அவர்கள், *அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்* என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 6939, 3007, 3081, 4274, 4890, 6259, 3983
இதுபோன்று, *பைஅத்து ரிள்வான்* என்று சொல்லப்படக்கூடிய *ஹுதைபியா உடன்படிக்கையின் போது ஒரு மரத்தடியில் உறுதி மொழி எடுத்தவர்கள் அனைவரையும் சொர்க்கவாசிகள்* என்று நாம் சொல்லலாம்.
ஏனென்றால் அவர்கள் தியாகம் செய்யாவிட்டாலும் அதற்காகப் பின்வாங்காமல், *உயிரை விடவும் தயாராக இருந்ததால் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டதாகப்* பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.
*அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதிமொழி எடுத்தபோது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்கு சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான்.*
அல்குர்ஆன் *48:18*
________________________
*ஸஅத் பின் முஆத்* (ரலி)
——————————-
நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் பட்டை (அணியக் கூடாது என்று) தடை செய்து வந்தார்கள். மக்களோ, அந்த அங்கி(யின் தரத்தை மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (என் தோழர்) சஅத் பின் முஆதுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதை விட உயர்ந்தவை” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 2616. 3248
*நபியவர்களுடைய மகன் இப்ராஹீம்* சிறு வயதிலேயே, அதாவது பால்குடிப் பருவத்திலேயே இறந்து விடுகிறார். அவரும் சொர்க்கவாசி என்று கூறலாம்.
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபியவர்களின் மகன்) இப்ராஹீம் இறந்த போது நபி (ஸல்) அவர்கள், *இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு* எனக் கூறினார்கள்.
நூல்: புகாரி 1382, 3255, 6195
ஏகத்துவம்