அல் குர்ஆனும், ஆதாரப்பூர்வமான செய்திகளும் நபி (ஸல்) அவர்களுக்கு மகத்தான சிறப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று நமக்கு அறிவித்துக்கொண்டிருக்கிறது.
நபியவர்களின் தனிச்சிறப்புகளை அறிவதின் பயன்.
ஒருவருடைய நல்ல குணாதியசயங்களையும், தனிச்சிறப்புகளையும் அறியும் போதுதான் அவரின் மீது அண்பு அதிகரிக்கும். நபி (ஸல்) அவர்களின் மீது அண்பு வைப்பது, நேசம் வைப்பது ஒவ்வொரு முஸ்லிமான அனைத்து நபர்கள் மீதும் கல்மையாகும்.
நாம் ஒவ்வொரு நபர்களும் நபி (ஸல்) அவர்களின் நேசம் வைத்திருந்தாலும் இந்த செய்திகளை அறிவதின் மூலம் அந்த அண்பும் பாசமும் அதிகரிக்கும்.
நபி (ஸல்) அவர்களுக்குரிய தனிச்சிறப்புகள்.
இந்த வரிசையில் ஏனைய நபிமார்களுக்கும், ஏனைய மனிதர்களுக்கும் கொடுக்கப்படாத சிறப்புகளை பார்க்கலாம்.
உலகத்தூதர்
முந்திய தூதர்கள் அவர்களின் இடத்திற்கு உட்பட்ட சமுதாயத்திற்கு மட்டும் அனுப்பட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு மட்டுமில்லாமல் உலகம் முழுவதிற்கும் தூதாராக இருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனித சமுதாயத்திற்கு மட்டுமில்லாமல் ஜின் சமுதாயதிற்கும் தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள்.
முஹம்மதே நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்கும் உம்மை அனுப்பியுள்ளோம். மனிதர்களில் இதை அதிகமானோர் அறியமாட்டார்கள். (அல்குர்ஆன்: 34:28)
முஹம்மதே அகிலத்தார்கள் அனைவருக்கும் அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம். (அல்குர்ஆன்: 21:107)
மனிதர்களே நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். (அல்குர்ஆன்: 7:158)
முஹம்மதே இக்குர்ஆனை செவியுறுவதற்காக ஜின்களில் ஒரு கூட்டத்தினரை உம்மிடம் நாம் அனுப்பியதை எண்ணிப்பார்ப்பீராக அவை அவரிடம் வந்த போது வாயை மூடுங்கள் என்று கூறின. ஓதி முடிக்கப்பட்ட போது எச்சரிப்போராக தனது சமுதாயத்திடம் திரும்பின
எங்கள் சமுதாயமே மூஸாவுக்கு பின் ஒரு வேதத்தை நாங்கள் செவியுற்றோம். அது தமக்கு முன் சென்றதை உன்மைபடுத்துகிறது. உன்மைக்கும் நேரான பாதைக்கும் அது வழிகாட்டுகிறது எனக்கூறின.
எங்கள் சமுதாயமே அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு பதிலளியுங்கள் அவரை நம்புங்கள். அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றுவான். (அல்குர்ஆன்: 46:29-31)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு முன்னிருந்த இறைத்தூதர்கள் எவருக்கும் வழங்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பட்டுள்ளது:
1. (எதிரிகளுக்கும் எனக்குமிடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் அவர்களுடைய உள்ளங்கüல் என்னைப் பற்றிய அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது.
2. தரை முழுவதும் சுத்தம் (-தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. (எனவே,) என் சமுதாயத்தாரில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்து விட்டால் (அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திலேயே தயம்மும் செய்து கொள்ளட்டும்;)
3. (முந்தைய இறைத்தூதர்கள் எவருக்கும் அனுமதிக்கப்படாத) போரில் கிடைக்கப் பெறும் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளது.
4. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூதாயத்தாருக்கு மட்டுமே தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். (ஆனால்,) நானோ ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இறைத்தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டுள்ளேன்.
5. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை புரியும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி: 438)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு முன்னர் வாழ்ந்த (இறைத்தூதர்கள்) எவருக்கும் வழங்கப்பெறாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பெற்றுள்ளன:
1. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமுதாயத்தாருக்கு மட்டுமே (தூதராக நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். நான் சிவப்பர் கறுப்பர் (என்ற பாகுபாடின்றி) அனைவருக்கும் தூதராக அனுப்பப்பெற்றுள்ளேன்.
2. போரில் கிடைக்கப்பெறும் செல்வங்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்னிருந்த (இறைத்தூதர்) எவருக்கும் அவை அனுதிக்கப்படவில்லை.
3. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தூய்மை யானதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப் பட்டுள்ளது. (என் சமுதாயத்தாரில்) யாரேனும் ஒருவருக்குத் தொழுகை(யின் நேரம்) வந்து விட்டால் அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திலேயே தொழுதுகொள்வார்.
4. (எதிரிகளுக்கும் எனக்குமிடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் (அவர் களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய மதிப்புக் கலந்த) அச்சம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் வெற்றியளிக்கப்பெற்றுள்ளேன்.
5. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை செய்யும் வாய்ப்பு அளிக்கப் பெற்றுள்ளேன். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்: 905)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்) தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்து விட்டல், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்: 240)
மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களிலிருந்தும், நபிமொழியிலிருந்தும் நபி (ஸல்) அவர்கள் இந்த உலகம் முழுவதற்கும் இறைத்தூதராக அனுப்பட்டவர்கள் என்றும், அவர்கள் ஜின், மனித சமுதாயத்திற்கும் தூதராக இருக்கிறார்கள் என்றும் யூதர்கள், நிராகரித்தவர்கள் யாராக இருந்தாலும் நபி (ஸல்) அவர்களைத்தான் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் விளங்க முடிகிறது.
இறுதி நபித்துவம்
அல்லாஹ் இந்த தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கிய தனிச்சிறப்புகளில் அவர்களை இறுதி தூதராக ஆக்கியது. இந்த இடத்திற்கு நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு யாரும் வர இயலாது. அப்படி யாராவது நானும் தூதர்தான் என்று வாதிட்டால் அவன் பொய்யனவான்.
முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை.மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன்: 33:40)
அபூ ஹுரைரா (ர-) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) புஜம் (முன்கால் சப்பை) ஒன்றை அவர்கüடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதை) வாயாலேயே(பற்களால்) பற்றிக்கொண்டு அதி-ருந்து சிறிது உண்டார்கள்.
பிறகு “நான் மறுமை நாüல் மனிதர்கüன் தலைவன் ஆவேன். (அந்நாüல்) அல்லாஹ் (மனிதர்கüல்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெüயில் எதன் மூலம் ஒன்றுதிரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதனை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்கüடம்,
அவர்களால் தாங்கிக்கொள்ளவோ, பொறுத்துக்கொள் ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும். அப்போது மனிதர்கள் (சிலர் வேறு சிலரை நோக்கி) “உங்களுக்கு எத்தகையை (ஆபத்தான) நிலை நேர்ந்திருக் கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடிப்) பார்க்கமாட்டீர்களா?’ என்று கேட்பார்கள். அப்போது மனிதர்கüல் சிலர் வேறு சிலரிடம், “(உங்களுடைய ஆதி பிதா) ஆதம் (அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர்.
ஆகவே மனிதர்கள், ஆதம் (அலை) அவர்கüடம் சென்று “நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்க ளுக்குச் சிரம்பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப)நிலையையும் நீங்கள் கவனிக்க வில்லையா?’ என்று கேட்பார்கள்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள் (“நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது இன்று (கடும்) கோபம்கொண்டிருக் கிறான். இதற்கு முன் இதைப் போன்று அவன் கோபம்கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்தி-ருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது’ என்று கூறிவிட்டு “நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்” என்று சொல்வார்கள்.
உடனே மக்களும் நூஹ் (அலை) அவர்கüடம் சென்று “நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலை) அவர்கள் “என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை.
(எல்லா நபிமார் களுக்கும் இருப்பது போல் விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தினருக்கு எதிராகப் பிரயோகித்துவிட்டேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! என்று கூறிவிட்டு, “நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீமிடம் செல்லுங்கள்’ என்பார்கள்.
அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்கüடம் சென்று, “இப்ராஹீமே! நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசிப்பவர்கüல் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் “என் இறைவன் இன்று என் மீது (கடுங்)கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம்கொண்டதில்லை.
இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம்கொள்ளப்போவதுமில்லை. நான் மூன்று பொய்களைச் சொல்-யுள்ளேன். -அம்மூன்றையும் அறிவிப்பாளர் அபூ ஹய்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.- நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டி யுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத் தூதர்) மூசாவிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்களும் மூசா (அலை) அவர்கüடம் சென்று “மூசாவே நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தன்னுடய தூதுவத்தினை வழங்கியும் உங்கüடம் உரையாடியும் மக்கள் அனைவரையும்விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கூறுவார்கள்.
அதற்கு மூசா (அலை) அவர்கள் “இன்று என் இறைவன் (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம்கொண்ட தில்லை. இதற்குப் பின்பும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம்கொள்ளப் போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்பாடாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது. (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்கள் ஈசா (அலை) அவர் கüடம் சென்று, “ஈசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டி-ல் சிறுவராய் இருந்தபோதே மனிதர்கüடம் பேசினீர்கள். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கேட்பார்கள்.
அதற்கு ஈசா (அலை) அவர்கள், “என் இறைவன் இன்று (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை.- (தாம் புரிந்து விட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல்- நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! (ஆகவே,) நீங்கள் வேறெவரிட மாவது செல்லுங்கள்; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
அப்போது மக்கள் என்னிடம் வந்து “முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். இறைத்தூதர்கüல் இறுதியானவர். உங்களது முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கூறுவர். அப்போது நான் நடந்து இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான்.
பிறகு “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி “இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்’ என்பேன்.
அதற்கு “முஹம்மதே! சொர்க்கத்தின். வாசல்கüல் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாசல்கüலும் மக்களுடன் இணைந்து நுழைந்துகொள்ளலாம்’ என்று கூறப்படும். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்க வாச-ன் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் “மக்காவிற்கும் (யமனிலுள்ள) “ஹிம்யர்’ எனும் ஊருக்கும் இடையிலுள்ள’ அல்லது “மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள’ தூரமாகும்” என்று கூறினார்கள். (புகாரி: 4712)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்:
1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன்.
2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது.
3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன.
4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிட மாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
5. நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன்.
6. என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது. இதை அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்: 907)
நபித்துவமும், தூதுத்துவமும் என்னோடு முடிந்து விட்டன. எனக்குப்பின்னால் எந்த நபியும் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ: 2272)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன.
நான் முஹம்மது -புகழப்பட்டவர்- ஆவேன்.
நான் அஹ்மத் -இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன்.
நான் மாஹீ- அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான்.
நான் ஹாஷிர்- ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள்.
நான் ஆகிப் (இறைத் தூதர்கüல்) இறுதியானவர் ஆவேன். இதை ஜுபைர் பின் முத்இம் (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி: 3532)
(முஸ்லிம்: 4696) வது செய்தியில் நான் இறுதியானவர் எனக்குப்பின்னால் எந்த நபியும் இல்லை என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ர-) அவர்கüடம் (மார்க்க விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக) ஐந்தாண்டுகள் (தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு) அமர்ந்திருந்தேன்.
(ஒரு முறை) அபூஹுரைரா (ர-) அவர்கள் கூறினார்கள்: “பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார்.
மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப் போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அவர்கள் வரும் போது நாங்கள் என்ன செய்ய வேண்டு மென்று நீங்கள் உத்திரவிடுகின்றீர்கள்?” என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு, “அவர்கüல் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (செய்ய வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள்.) அவர்களுக்கு அவர்கüன் உரிமையைக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ் அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்கüடம் கேட்க விருக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (புகாரி: 3455)
மேற்கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களிலிருந்தும், நபிமொழிகளிலிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் இறுதி தூதர் என்பது தெளிவாகின்றது. அத்தோடு இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தனிச்சிறப்பு என்றும் தெரிகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது சத்தியம்.
அல்லாஹ் தஆலா தனது திருமறையில் பல இடங்களில் சூரியன், சந்திரன் போன்ற பல படைப்பினங்களின் மீது சத்தியம் செய்து பல விஷயங்களை சொல்கிறான். ஆனால் மனித படைப்பில் மனிதர்களில் நபி ஸல் அவர்களைத்தவிர யாரும் மீதும் அல்லாஹ் சத்தியம் செய்து சொல்ல வில்லை. இது நபி (ஸல்) அவர்களுக்குள்ள தனிச்சிறப்பையே காட்டுகிறது.
ஆகையால் இதை வைத்து கொண்டு மனிதர்கள் மற்ற மனிதர்கள் மீது சத்தியம் செய்யலாம் என்று விளங்கி கொள்ளக்கூடாது. படைத்த இறைவன் யாரும் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்வான்.
அல்லாஹ் தஆலா லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தைப்பற்றி குர்ஆனில் சொல்லிக்கொண்டு வரும் போது…
உமது வாழ் நாளின் மீது சத்தியமாக! அவர்கள் தமது (காம) போதையில் தட்டழிந்தனர். (அல்குர்ஆன்: 15:72)
மற்றொரு தனிச்சிறப்பு.
அல்லாஹ் தனது திருமறையில் நபிமார்களை அழைக்கும் போது அவர்களின் பெயர்களைக் கொண்டு கூப்பிடுகிறான். ஆனால் நபி (ஸல்) அவர்களை அழைக்கும் போது அவர்களை தூதரே, நபியே என்று அழைக்கிறான்.
ஒருவர் தனக்கு கீழ் உள்ளவரை அழைக்கும் போது அவரின் பெயரைச்சொல்லி அழைப்பதும் உண்டு. பெரும்பாலும் அவரிடம் இருக்கும் மிக உயர்ந்த தன்மைகளைச் சொல்லி அழைப்பதும் உண்டு. இப்படித்தான் நபி (ஸல்) அவர்களை அழைக்கும் போது அவர்களிடம் இருந்த மிக உயர்ந்த பண்பான நபித்துவத்தையும், தூதுத்துவத்தையும் சொல்லி அழைக்கிறான்.
அத்தோடு மனிதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைக்கும் போது சாதரண மக்களை அவர்களின் பெயரைச் சொல்லி அழைப்பது போன்று அழைக்க கூடாது என்றும் தடுத்திருக்கிறான்.
உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்! உங்களில் மறைந்து நழுவி விடுவோரை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்குத் துன்பம் ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும். (அல்குர்ஆன்: 24:63)
இரத்தினச்சுருக்கமான வார்த்தைகள்
நபிகள் நாயகததிற்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்புகளில் இந்த ஜவாமிவுல் கலிம் என்பதும் ஒன்று. அதாவது நபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையை பேசுவார்கள். அதில் பல விஷயங்கள் பொதிந்திருக்கும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்:
1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன்.
2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது.
3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன.
4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
5. நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன்.
6. என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது. இதை அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்: 907)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை பார்த்தால் ஒரிரு வார்த்தைகள் பல பொக்கிஷங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இதற்கு உதாரணமாக புகாரியில் இடம் பெற்றுள்ள முதலாவது செய்தியை எடுத்துக்கொள்ளலாம்.
அறிஞர் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறும் போது இந்த செய்தியில் மொத்த கல்வியில் மூன்றில் ஒன்றாக இருக்கிறது. இதில் எழுபது விதமான சட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
நூல்: ஜாமிவுல் உலூம் வல் ஹிகம் பக்கம் (5)
எதிரிகளின் பயம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்புகளில் எதிரிகளின் உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களைப்பற்றியான பயத்தை அல்லாஹ் போட்டது. எதிரிகள் ஒரு மாத கால அளவு தூரத்தில் இருந்தாலும் நபி (ஸல்) அவர்களைப்பற்றியான அச்சம் இருந்து கொண்டே இருக்கும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்:
1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன்.
2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது.
3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன.
4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிட மாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
5. நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன்.
6. என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது. இதை அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்: 907)
பூமியின் கரூவூலங்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஒருங்கிணைந்த (பொருள்களைத் தரும்) சொற்களுடன் அனுப்பப் பட்டுள்ளேன். (எதிரிகüன் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் விதைக்கப்பட்டு எனக்கு உதவப்பட்டுள்ளது. (ஒரு முறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங் களுடைய சாவிகள் கொண்டு வரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன.”
இதை அபூஹுரைரா (ர-) அவர்கள் அறிவித்து விட்டு, “நபி (ஸல்) அவர்கள் சென்று விட்டார்கள். நீங்கள் அந்தக் கரூவூலங்களை (தோண்டி) வெüயே எடுத்து (அனுபவித்துக்) கொண்டிருக்கிறீர்கள்” என்று சொன்னார்கள்.
(புகாரி: 2977)
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்ததைப் போன்று உஹுதுப்போர் உயர் தியாகிகளுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவுமேடை (மிம்பர்)க்குத் திரும்பி வந்து, “(உங்களுக்கு முன்னேற்பாடுகளைச் செய்து வைப்பவனைப்போல்) நான் உங்களுக்கு முன்பே செல்கிறேன்.
நான் (அப்போது) உங்களுக்கு சாட்சியம் கூறுவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள்’ வழங்கப்பட்டுள்ளன. மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும் நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டியிடுவீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். (புகாரி: 1344)
இந்த சிறப்பை பொருத்த வரை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டதுதான் என்றாலும் நபித்தோழர்களும் நபி (ஸல்) அவர்கள் இறந்திருந்ததற்குப்பின் பல நாடுகளை வெற்றி கொண்டார்கள்.
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்படுதல்
(முஹம்மதே!) உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப் படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும், தெளிவான ஒரு வெற்றியை உமக்கு நாம் அளித்தோம். (அல்குர்ஆன்: 28:1-3)
அபூ ஹுரைரா (ர-) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டுவரப் பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) புஜம் (முன்கால் சப்பை) ஒன்றை அவர்கüடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதை) வாயாலேயே(பற்களால்) பற்றிக்கொண்டு அதி-ருந்து சிறிது உண்டார்கள். பிறகு “நான் மறுமை நாüல் மனிதர்கüன் தலைவன் ஆவேன். (அந்நாüல்) அல்லாஹ் (மனிதர்கüல்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெüயில் எதன் மூலம் ஒன்றுதிரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதனை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்துகொண்டிருக்கும்.
சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்கüடம், அவர்களால் தாங்கிக்கொள்ளவோ, பொறுத்துக்கொள் ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும். அப்போது மனிதர்கள் (சிலர் வேறு சிலரை நோக்கி) “உங்களுக்கு எத்தகையை (ஆபத்தான) நிலை நேர்ந்திருக் கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடிப்) பார்க்கமாட்டீர்களா?’ என்று கேட்பார்கள். அப்போது மனிதர்கüல் சிலர் வேறு சிலரிடம், “(உங்களுடைய ஆதி பிதா) ஆதம் (அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர்.
ஆகவே மனிதர்கள், ஆதம் (அலை) அவர்கüடம் சென்று “நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்க ளுக்குச் சிரம்பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள்.
நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப)நிலையையும் நீங்கள் கவனிக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் (“நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது இன்று (கடும்) கோபம்கொண்டிருக் கிறான். இதற்கு முன் இதைப் போன்று அவன் கோபம்கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை.
(நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்தி-ருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது’ என்று கூறிவிட்டு “நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்” என்று சொல்வார்கள்.
உடனே மக்களும் நூஹ் (அலை) அவர்கüடம் சென்று “நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள் ளான்.7 எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?’ என்று கேட்பார்கள்.
அதற்கு நூஹ் (அலை) அவர்கள் “என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபம்கொண்டுள் ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (எல்லா நபிமார் களுக்கும் இருப்பது போல் விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத் தினருக்கு எதிராகப் பிரயோகித்துவிட்டேன்.
நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!’ என்று கூறிவிட்டு, “நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீமிடம் செல்லுங்கள்’ என்பார்கள்.
அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்கüடம் சென்று,ன “இப்ராஹீமே! நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசிப்பவர்கüல் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் “என் இறைவன் இன்று என் மீது (கடுங்)கோபம்கொண்டுள் ளான்.
இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம்கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம்கொள்ளப்போவதுமில்லை. நான் மூன்று பொய்களைச் சொல்-யுள்ளேன். -அம்மூன்றையும் அறிவிப்பாளர் அபூ ஹய்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.9- நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டி யுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! (ஆகவே,) வேறெ வரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத் தூதர்) மூசாவிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்களும் மூசா (அலை) அவர்கüடம் சென்று “மூசாவே நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தன்னுடய தூதுவத்தினை வழங்கியும் உங்கüடம் உரையாடியும் மக்கள் அனைவரையும்விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள் ளான். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?’ என்று கூறுவார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள் “இன்று என் இறைவன் (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான்.
இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம்கொண்ட தில்லை. இதற்குப் பின்பும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம்கொள்ளப் போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்பாடாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டி யுள்ளது. (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்கள் ஈசா (அலை) அவர் கüடம் சென்று, “ஈசாவே! நீங்கள் அல்லாஹ் வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டி-ல் சிறுவராய் இருந்தபோதே மனிதர்கüடம் பேசினீர்கள். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?’ என்று கேட்பார்கள்.
அதற்கு ஈசா (அலை) அவர்கள், “என் இறைவன் இன்று (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை.- (தாம் புரிந்து விட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல்- நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டி யுள்ளது! (ஆகவே,) நீங்கள் வேறெவரிட மாவது செல்லுங்கள்; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.
அப்போது மக்கள் என்னிடம் வந்து “முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். இறைத்தூதர்கüல் இறுதியானவர். உங்களது முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா?’ என்று கூறுவர். அப்போது நான் நடந்து இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான்.
பிறகு “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி “இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்’ என்பேன். அதற்கு “முஹம்மதே! சொர்க்கத்தின். வாசல்கüல் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாசல்கüலும் மக்களுடன் இணைந்து நுழைந்துகொள்ளலாம்’ என்று கூறப்படும்.
என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்க வாச-ன் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் “மக்காவிற்கும் (யமனிலுள்ள) “ஹிம்யர்’ எனும் ஊருக்கும் இடையிலுள்ள’ அல்லது “மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள’ தூரமாகும்” என்று கூறினார்கள். (புகாரி: 4712)
முஃகீரா பின் ஷுஅபா (ர-) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று (அல்லாஹ்வைத்) தொழுதார்கள். அப்போது அவர்கüடம் “தங்கüன் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே! (பிறகு ஏன் நீங்கள் இந்த அளவு சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும்?)” என்று கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள்,) “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்று கேட்டார்கள். (புகாரி: 4836)
குர்ஆன்
ஒவ்வொரு நபிமார்களுக்கும் வேதத்தையும், ஞானத்தையும் வழங்கியுள்ளான். தன்னுடைய நபிமார்களை உன்மைபடுத்துவதற்காக ஏராளமான சான்றுகளையும் வழங்கியுள்ளான். அந்த சான்றுகளில் நபிமார்களுக்கு மிகவும் முக்கியமானதாக அவர்களுடைய கால கட்டத்தில் மிகப்பெரிய சான்றாக அமைந்தது.
இதே பொன்று நபி (ஸல்) அவர்களுக்கும் ஏராளமான சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த சான்றுகளில் மிகவும் முக்கியமானதாக இந்தக்குர்ஆன் இருந்து கொண்டுருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருüய வேத அறிவிப்பு(வஹீ)தான். ஆகவே, நபிமார்கüலேயே மறுமை நாüல், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இதை அபூஹுரைரா (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி: 4981)
நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த திருக்குர்ஆன் மற்ற முந்திய வேதங்களை விட வித்தியாசமானது.
முந்திய வேதங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் உரியதாக பொருந்தக்கூடியதாக இருந்தது. குர்ஆன் கியாம நாள் வரை இதுதான் வேதமாகும். இதற்கு பிறகு எந்த வேதமும் இல்லை.
முந்திய வேதங்கள் அந்த சமுதாயத்தாயவர்களால் பாழ்படுத்தப்பட்டது. இந்தக்குர்ஆன் இறைவனால் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. கியாம நாள் வரை இந்தக்குர்ஆனில் எந்த மாற்றமும் இல்லாமல் பாதுகாக்கப்படும்.
இதை அல்லாஹ் தஆலா தன்னுடைய திருன்றையில் சொல்லிக்காட்டுகிறான்.
இந்தக்குர்ஆனை நாமே இறக்கினோம் நாமே பாதுகாப்போம். (அல்குர்ஆன்: 15:9)
இந்தக்குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு மிகப்பெரிய அற்புதமானதாக இருக்கிறது என்பதற்கான சான்றுகள் குர்ஆனில் நிறைந்து காணக்கிடைக்கின்றன. குர்ஆனில் விஞ்ஞானத்தை சொல்லக்கூடிய ஆயத்துகள். மகத்துவத்தை பற்றி சொல்லக்கூடிய வசனங்கள், இப்படி என்னென்ன துறைகள் இருக்கிறதோ அத்துனை துறைகளுக்கும் வழகாட்டக்கூடியதாகவும் அதைப்பற்றிய செய்திகளை சொல்லக்கூடியதாகவும் இருக்கிறது. இதுவே குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய அற்புதம் என்பதற்கான சான்றுகளாக இருக்கின்றன.
வின்வெளிப்பயனம்
நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்புகளில் நபி (ஸல்) அவர்களின் வின்வெளிப்பயனமும் ஒன்று.
இந்த வின்வெளிப்பயனத்தில் நபி (ஸல்) அவர்களின் பூத உடலோடு இந்த உலகத்தை விட்டு ஒரு இரவில் பாலஸ்தீனில் உள்ள பைதுல் முகத்தஸ் சென்று அங்கிருந்து வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களுடன் ஏழு வானத்தையும் கடந்து பைதுல் மஃமூர் சென்று பிறகு இறைவனுடன் திறைக்கப்பால் நின்று உரையாடி ஜந்து நேரத்தொழுகையும் வாங்கி வந்தார்கள்.
இதற்கு குர்ஆனிலும் நபிமொழித்தொகுப்புகளிலும் நிறைய ஆதுôரங்கள் காணக்கிடைக்கின்றன.
மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல்குர்ஆன்: 17:1)
அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தல்வையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது, அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார். (அல்குர்ஆன்: 53:5-18)
இந்த வசனங்களில் ஜிப்ரயீல் (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அவர்களின் அசல் தோற்றத்தில் பார்த்தது. சித்ரதுல் முன்தஹாவைப்பார்த்தது. இறைவனோடு உரையாடிய ஆகிய சம்பவங்களை அல்லாஹ் நமக்கு தெரிவிக்கிறான்.
வின்வெளிப்பயனத்தைபற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகையில்… நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (இறையில்லம் கஅபா அருகில்) ஹத்தீமில் …. .அல்லது ஹிஜ்ரில்…. படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் ஒருவர் (வானவார் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார்.
-அறிவிப்பாளர்கüல் ஒருவரான அனஸ் (ர-) அவர்கள், “இங்கிருந்து இது வரையில் அவர் பிளந்தார்” என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறினார்கள்.
அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் என்னருகி-ருந்த (அனஸ் (ர-) அவர்கüன் நண்பர்) ஜாரூத் (ரஹ்) அவர்கüடம், “அனஸ் (ர-) அவர்கள், “இங்கிருந்து இது வரையில்…… என்று எதைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஜாரூத் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்கüன் நெஞ்சின் காறை யெலும்பி-ருந்து அடிவயிறு வரை ….அல்லது நெஞ்சின் ஆரம்பத்தி-ருந்து அடிவயிறு வரை…. என்ற கருத்தில் அனஸ் (ர-) அவர்கள் கூறினார்கள்” என்று பதிலüத்தார்கள்.-
பிறகு அ(ந்த வான)வர் (ஜிப்ரீல்) எனது இதயத்தை வெüயிலெடுத்தார். பிறகு, இறை நம்பிக்கையால் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டு, எனது இதயம் கழுவப்பட்டு, (அதில்) அந்த இறை நம்பிக்கை நிரப்பப்பட்டது. பிறகு பழையபடி மீண்டும் (எனது இதயம், மூடி) வைக்கப்பட்டது. பிறகு கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது.
(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கüல் ஒருவரான) அனஸ் (ர-) அவர்கüடம் ஜாரூத் (ரஹ்) அவர்கள், “அது புராக் எனும் வாகனம் தானே அபூஹம்ஸா அவர்களே!” என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ர-) அவர்கள், “ஆம், (அது புராக் தான்.) அந்த வாகனம் பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கும்” என்று கூறினார்கள்.-
பிறகு நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். என்னை ஜிப்ரீல் முதல் வானத்திற்கு அழைத்துச் சென்று அதன் கதவைத் திறக்கும்படிக் கூறினார். அப்போது, “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜிப்ரீல்” என்று பதிலüத்தார். “உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்குஅவர், “முஹம்மது” என்று பதிலüத்தார். “(அவரை அழைத்து வரச் சொல்-) அவரிடம் ஆள் அனுப்பப் பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம்” என்றார். “அவரது வரவு நல்வர வாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. அப்போது (அந்த வானத்தின் காவலர்) கதவைத் திறந்தார்.
நான் அங்கு சென்றடைந்த போது அங்கு ஆதம் (அலை) அவர்கள் இருந் தார்கள். (என்னிடம் ஜிப்ரீல்) “இவர்கள் உங்கள் தந்தை ஆதம். இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று கூறினார். அவர்களுக்கு நான் சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு, ஆதம் (அலை) அவர்கள், “(என்) நல்ல மகனும், நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!” என்று சொன்னார்கள். பிறகு (என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல்) இரண்டாம் வானத்திற்கு உயர்ந்து அதைத் திறக்கும்படிச் சொன்னார். “யார் அது?” என்று கேட்கப்பட்டது.
அவர், “ஜிப்ரீல்” என்று பதிலüக்க, உங்களுடன் (இருப்பவர்) யார்?” என்று வினவப்பட்டது. (அதற்கு) அவர், “முஹம்மது” என்று பதிலüத்தார், “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப் பட்டது. அவர், “ஆம்” என்று பதிலüத்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. பிறகு (அந்த வானத்தின் காவலர் கதவைத்) திறந்தார். நான் அங்கு சென்றடைந்த போது, அங்கு யஹ்யா (அலை) அவர்களும், ஈசா (அலை) அவர்களும் இருந்தனர். -அவ்விருவரும் சிற்றன்னையின் மக்களாவர்.-134 இது யஹ்யா அவர்களும், ஈசா அவர்களும் ஆவர். இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார்.
நான் (அவர்கள் இருவருக்கும்) சலாம் சொன்ன போது அவர்கள் சலாமிற்கு பதில் கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும், “நல்ல சகோதரரும், நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்துக்) கூறினர். பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு மூன்றாம் வானத்திற்கு உயர்ந்தார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படிக் கூறினார். “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலüத்தார். “உங்களுடன் (இருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அவர், “முஹம்மது” என்று பதிலüத்தார். “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப் பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம்” என்று பதிலüத்தார்.
“அவர் வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொல்லப் பட்டது. பிறகு (அந்த வானத்தின் கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் சென்றடைந்த போது அங்கு யூசுஃப் (அலை) அவர்கள் இருந்தார்கள். “இவர்கள் தாம் (இறைத்தூதர்) யூசுஃப். இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்களும் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு, “நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் நான்காம் வானத்திற்கு உயர்ந்தார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்குமாறு சொன்னார்.
“யார் அது” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலüத்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அவர், “முஹம்மது” என்று பதிலüத்தார். “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டி ருந்ததா?” என்று வினவப்பட்ட போது, “ஆம்” என்று அவர் பதிலுரைத்தார். “அவர் வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (எனக்கு வாழ்த்துச்) சொல்லப்பட்டு(க் கதவும்) திறக்கப்பட்டது. அங்கு நான் சென்றடைந்த போது அங்கு இத்ரீஸ் (அலை) அவர்கள் இருந்தார்கள். “இவர்கள் தாம் இத்ரீஸ் (அலை) அவர்கள். இவர்களுக்கு சலாம் கூறுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார்.
நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்களும் எனக்கு பதில் சலாம் கூறினார்கள். பிறகு, “நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்தும்) சொன்னார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் ஐந்தாம் வானத்திற்கு வந்து சேர்ந்து அதைத் திறக்கும்படிச் சொன்னார். “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலüத்தார். “உங்களுடன் (இருப்பவர்) யார்?” என்று வினவப்பட்டது. அவர், “முஹம்மது” என்று பதிலüத்தார். “(அவரை அழைத்து வருமாறு) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப் பட்டது. அவர், “ஆம்” என்றார். “அவர் வரவு நல்வரவாகட்டும்.
அவர் வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொல்லப் பட்டது. நான் அங்கு சென்றடைந்த போது ஹாரூன் (அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். “இவர்கள் தாம் ஹாரூன். இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் சொன்னார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு அவர்கள், “நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் ” என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு என்னுடன் அவர் ஆறாம் வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படிக் கூறினார். “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலüத்தார். “உங்களுடன் யார்?” என்று கேட்கப்பட்டது.
அவர், “முஹம்மது” என்றார். “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம்” என்றார். (அந்த வானத்தின் காவலர்,) “அவர் வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொன்னார். அங்கு நான் சென்றடைந்த போது மூசா (அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். “இவர்கள் தாம் மூசா. இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் சொன்னார்கள். பிறகு, “நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். நான் (மூசா -அலை- அவர்களைக்) கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். “தங்கள் அழுகைக்கு என்ன காரணம்?” என்று அவர்களை நோக்கிக் கேட்கப்பட்டது.
அவர்கள், “என் சமுதாயத் தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள், எனக்குப் பிறகு அனுப்பப் பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தி-ருந்து சொர்க்கம் புகுவார்கள் என்பதால் தான் அழுகிறேன்” என்று பதிலüத்தார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் ஏழாவது வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படி ஜிப்ரீல் கூறினார். “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலüத்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று வினவப்பட்ட போது அவர், “முஹம்மது” என்று பதில் சொன்னார். “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப் பட்டது. அவர், “ஆம்” என்றார். (அந்த வானத் தின் காவலர்,) “அவரது வரவு நல்வரவா கட்டும், அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்துச்) சொன்னார். நான் அங்கு சென்றடைந்த போது, இப்ராஹீம் (அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். “இவர்கள் தாம் உங்கள் தந்தை.
இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் உரைத்தார்கள். அவர்கள், “நல்ல மகனும், நல்ல இறைத் தூதருமான இவரது வரவு நல்வரவாகட்டும்” என்று வாழ்த்துச் சொன்னார்கள். பிறகு, (வான எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான) “சித்ரத்துல் முன்தஹா’ என்னும் இடத்திற்கு நான் கொண்டு செல்லப் பட்டேன். அதன் (இலந்தைப்) பழங்கள் (யமனில் உள்ள) “ஹஜர்’ எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானை கüன் காதுகள் போ-ருந்தன. “இது தான் சித்ரத்துல் முன்தஹா” என்று ஜிப்ரீல் (அறிமுகப் படுத்திக்) கூறினார். அங்கு (அந்த மரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து ஓடி வருகின்ற) நான்கு ஆறுகள் இருந்தன. இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் இரண்டு ஆறுகள் வெüயே இருந்தன. “ஜிப்ரீலே! இவ்விரண்டு ஆறுகள் எவை?” என்று நான் கேட்டேன். அவர், “உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகியவை)வையாகும்.
வெüயே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்” என்று பதிலüத்தார்கள். பிறகு, “அல் பைத்துல் மஃமூர்’ (எனும் “வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும் இறை யில்லம்’) எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்து. பிறகு என்னிடம் ஒரு பாத்திரத்தில் மதுவும், ஒரு பாத்திரத்தில் பாலும் இன்னொரு பாத்திரத்தில் தேனும் கொண்டுவரப்பட்டது. நான் பாலை (தேர்ந்து) எடுத்தேன். (பிறகு அதைக் குடித்தேன்.) அப்போது ஜிப்ரீல், “இது தான் நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இருக்கும் (இஸ்லாம் எனும்) இயற்கை நெறியாகும்” என்று கூறினார்கள். பிறகு என் மீது ஒவ்வொரு தினத்திற்கும் ஐம்பது (வேளைத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் திரும்பி வந்த போது மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன்.
அப்போது அவர்கள், “உங்களுக்கு என்ன உத்தரவிடப்பட்டது?” என்று கேட்டார்கள். “ஒவ்வொரு நாளும் ஐம்பது (வேளைத்) தொழுகை (கட்டாயக் கடமையாக நிறை வேற்றும்படி) எனக்கு உத்தரவிடப் பட்டது” என்று நான் பதிலüத்தேன். உஙகள் சமுதாயத்தார் ஒரு தினத்திற்கு ஐம்பது வேளைத் தொழுகையைத் தாங்கமாட் டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுக்கு முன் மக்கüடம் அனுபவப் பட்டுள்ளேன். பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு பக்குவப்பட்டுள்ளேன். ஆகவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் உங்கள் சமுதாயத்தினருக்காக (தொழுகை யின் எண்ணிக்கையைக்) குறைத்துக் தரும்படிக் கேளுங்கள்” என்று சொன்னார்கள். நான் திரும்பிச் சென்றேன்.
(இறைவனிடம் குறைத்துத் தரும்படி கேட்டேன்) இறைவன் (ஐம்பதி-ருந்து) பத்தை எனக்குக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்கüடம் திரும்பி வந்தேன். முன் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். நான் திரும்பிச் சென்றேன். அப்போது (நாற்பதி-ருந்து) பத்தைக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்கüடம் திரும்பி வந்தேன். அப்போதும் முன் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும் படி) கூறினார்கள். நான் (இறைவனிடம்) திரும்பிச் சென்றேன். எனக்கு (முப்பதி-ருந்து) பத்தைக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்கüடம் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் முன்போலவே (குறைத்து கேட்கும் படி) கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். எனக்கு (இருபதி-ருந்து பத்து குறைக்கப்பட்டு) தினந்தோறும் பத்து (வேளைத்) தொழுகைகள் (தொழும்படி) உத்தரவிடப்பட்டது. நான் (மூசா -அலை- அவர்கüடம்) திரும்பி வந்தேன். அப்போதும் அவர்கள் முன் போலவே சொன்னார்கள்.
நான் திரும்பிச் சென்றேன். ஒவ்வொரு நாளும் ஐந்து (வேளைத்) தொழுகைகள் (நிறை வேற்றும்படி) எனக்கு உத்தரவிடப்பட்டது. நான் மூசா (அலை) அவர்கüடம் திரும்பி வந்தேன். அப்போது”உங்களுக்கு என்ன உத்தரவிடப் பட்டது?”என்று கேட்டார்கள். ஒவ்வொரு நாளைக்கும் ஐந்து (நேரத்) தொழுகைகள் எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று சொன்னேன். “ஒவ்வொரு நாளும் ஐந்து (நேரத்) தொழுகைகளை உங்கள் சமுதாயத் தினர் தாங்கமாட்டார்கள். உங்களுக்கு முன்பே மக்களுடன் பழகி நான் நன்கு அனுபவப் பட்டுள்ளேன். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு பக்குவப்பட்டுள்ளேன். எனவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று உங்கள் சமுதாயத்தினருக்காக இன்னும் குறைத்துத் தரும்படிக் கேளுங்கள்” என்று கூறினார்கள்.
அதற்கு நான், “(கடமையான தொழுகைகüன் எண்ணிக்கைûயைக் குறைத்துத் தரும்படி பலமுறை இறைவனிடம்) எனக்கே வெட்கமேற்படும் வரையில் நான் கேட்டு விட்டேன். ஆகவே, நான் திருப்தி யடைகிறேன்; (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொள்கிறேன்” என்று கூறினேன். பிறகு (அந்த இடத்தை) நான் கடந்த போது, (அல்லாஹ்வின் தரப்பி-ருந்து) “நான் என் (ஐந்து நேரத் தொழுகை எனும்) விதியை நடைமுறைப்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகü-ருந்து ஐந்து நேரமாகக் குறைத்துக் கடமையை) எüதாக்கி விட்டேன்” என்று ஒரு (அசரீரிக்) குரல் ஒ-த்தது. (புகாரி: 3887)
பாதுகாக்கப்பட்ட இறைத்தூதர்
நபி (ஸல்) அவர்களின் தனிச்சிறப்புகளில் இதுவும் மிகவும் உன்னதமானது. அதுமட்டுமில்லாமல் இது நபி (ஸல்) அவர்களின் இறைவனின் தூதர் என்பதற்கும் மிகவும் சான்றாக அமைகின்றது.
தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராகமாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன்: 5:67)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய சமுதாயத்தில் இருந்த அனைத்துத் தீமைகளையும் தைரியமாக எதிர்த்ததால் ஏராளமான எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தனர். அவர்களை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று பல வகையிலும் முயற்சிகள் நடந்தன.
அவர்கள் கோட்டை, கொத்தளங்களில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. குடிசையில் தான் வசித்தார்கள். வாயிற் காப்போன் யாரும் இருக்கவில்லை. வீதியில் சாதாரணமாக நடமாடினார்கள். உயிரைக் காக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எந்தக் கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை.
போர்க் களங்களிலும் பங்கெடுத்து, கொல்லப்படுவதற்கான வாய்ப்பை தாமாகவே எதிரிகளுக்கு வழங்கினார்கள். ஆனாலும் அவர்களை யாரும் கொல்ல முடியவில்லை. “உம்மை இறைவன் காப்பான்” என்ற இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. (அல்குர்ஆன்: 5:67)
இப்படி அறை கூவல் விட்டதை முறியடிப்பதற்காகவாவது எதிரிகள் அவரைக் கொன்றிருந்தால் இது பொய்யான மார்க்கம் என்று நிரூபித்திருப்பார்கள். ஆனாலும் இயலவில்லை.
இது இறைவனது வார்த்தையாகவும், உத்தரவாதமாகவும் இல்லாதிருந்தால் அவர்கள் என்றோ கொல்லப் பட்டிருப்பார்கள். அவர்கள் கொல்லப்படாதது திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கான நிரூபணம்.
என்னை எவரும் கொல்ல முடியாது என்று அறிவித்து விட்டு, சர்வ சாதாரணமாக இன்றைய உலகில் எவரும் நடமாட முடியாது. அதுவும் தீய சக்திகளை எதிர்த்துப் போரிடுபவர் இப்படி அறிவித்தால் அடுத்த நாளே அவரது கதை முடிக்கப்பட்டு விடும்.
அன்றைய நிலையில் இவரைப் போல் சர்வ சாதாரணமாக எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுமின்றி மக்களோடு மக்களாக பழகும் ஒருவரை எளிதாகக் கொல்ல முடியும். ஆனாலும் தன்னைக் கொல்ல முடியாது என்று அறிவித்து, தாம் கூறுவது இறை வாக்கு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிரூபித்தார்கள்.
நூல்: பீ.ஜே அவர்களின் குர்ஆன் விளக்கம்.
பாதுகாக்கப்பட்ட உடல்
பொதுவாக மன்னுடைய தனித்தன்மைகளில் மன்னில் எதைக்கொண்டு போட்டாலும் அதை சாப்பிட்டு விட்டு அந்தப்பொருளை தன்னுடைய இனமாக ஆக்கிக்கொள்ளும்.
ஆனால் இறைத்தூதர்களுடைய உடலை அது சாப்பிட்டு தன்னுடைய இனமாக ஆக்கிக்கொள்ளாது.
உங்களுடைய நாட்களில் வெள்ளிக்கிழமை சிறந்த நாளாகும். இந்த நாளில்தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார். இந்த நாளில்தான் மரணமடைந்தார். இந்த நாளில்தான் முதலாவது ஊதுதலும் இரண்டாவது ஊதுதலும் நடைபெறும். எனவே என் மீது ஸவாத் சொல்லுங்கள். உங்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்து வைக்கப்படுகிறது. அதற்கு ஸஹாபாக்கள் நீங்கள் மரணித்து மன்னாகிவிடும் போது எங்களுடைய ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்து வைக்கப்படும் ? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் நபிமார்களின் உடல்களை சாப்பிடக்கூடாது என்று பூமிக்கு தடைவிதித்து விட்டான் என்று கூறினார்கள்.
(நஸாயீ: 1374) ,(அபூதாவூத்: 1047) ,(இப்னு மாஜா: 1085, 1636) ,(அஹ்மத்: 16162) ,
ஹவ்லுல் கவ்ஸர் (சிறப்பு தண்ணீர் பந்தல்)
அல்லாஹ் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வழங்கிய தனிச்சிறப்புகளில் ஹவ்லுல் கவ்ஸர் என்ற நீர்த்தடாகமாகும்.
இந்த நீர்த்தடாகத்தின் பற்றி பல்வேறு சிறப்புகள் வந்துள்ளன. அந்த சிறப்பை அறியும் போதுதான் அதன் மகிமை தெரிய வரும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (“அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ர) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி: 6579)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தில் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஓர் ஆறு இருந்தது. அதன் இரு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான் “(வானவர்) ஜிப்ரீலே! இது என்ன?” என்று கேட்டேன். அவர் “இதுதான் உங்கள் இறைவன் உங்களுக்கு (சிறப்பாக) வழங்கிய அல்கவ்ஸர்” என்றார். “அதன் மண்’ அல்லது “அதன் வாசனை’ நறுமணமிக்க கஸ்தூரியாகும். இதை அனஸ் பின் மா-க் (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“வாசனை’யா(தீப்)? “மண்ணா'(தீன்)? என்பதில் அறிவிப்பாளர் ஹுத்பா பின் காத் (ரஹ்) அவர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். (புகாரி: 6581)
புகழுக்குரிய இடத்தை அடைபவர்
கியாம நாளில் நபி (ஸல்) அவர்களுக்கு என்று தனியான மிக அந்தஸ்திற்குரிய ஒர் இடம் உண்டு. அதைப்பற்றி ஒரு நீண்ட ஹதிஸின் தொடரில் இடம் பெற்றுள்ளது.
“இறுதியில் குர்ஆன் தடுத்துவிட்ட, அதாவது நிரந்தர நரகம் கட்டாயமாகி விட்டவர்களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் இருக்கமாட்டார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள்ன கூறிவிட்டு, “(நபியே!) உம் இறைவன் உம்மை (“மகாமும் மஹ்மூத்’ எனும்) உயர் அந்தஸ்துக்கு அனுப்பலாம்” எனும் (17:79➚ ஆவது வசனத்தை) ஓதினார்கள்.
பிறகு இந்த “மகாமும் மஹ்மூத்’ எனும் இடம் உங்கள் நபிக்காக வாக்கüக்கப்பட்ட இடமாகும்” என்று கூறினார்கள்.
(புகாரி: 7440)
அதிகமாக பின்பற்றப்படும் நபி
மறுமையில் ஒவ்வொரு நபியும் ஒரு குறிப்பிட்ட சில ஜனத்தொகையினர் தன்னை பின்பற்றக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் மட்டும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இம்ரான் பின் ஹுஸைன் (ர-) அவர்கள் “கண்ணேறு, அல்லது விஷக்கடி தவிர வேறெதற்காகவும் ஓதிப்பார்த்த(-)ல் (சிறப்பு) கிடையாது” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இதை சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கüடம் எடுத்துரைத்தேன். அப்போது அவர்கள் தமக்கு இப்னு அப்பாஸ் (ர-) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்தார்கள் என்று கூறினார்கள்:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்கüல் ஓரிருவருடன் (அவர்களுடைய சமுதாயத் தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது.
நான், “இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?” என்று கேட்டேன். அப்போது, “அல்ல. இது (இறைத் தூதர்) மூசாவும் அவருடைய சமுதாயமும்” என்று எனக்குச் சொல்லப்பட்டது. அப்போது “அடிவானத்தைப் பாருங்கள்” என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளை நான் பார்த்தேன்.
பிறகு என்னிடம், “அடிவானங்கüல் இங்கும் இங்கும் பாருங்கள்” எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். “இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்கüல் அடங்குவர்” என்று எனக்குச் சொல்லப்பட்டது.
(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி (ஸல்) அவர்கள் (தமது வீட்டுக்குள்) நுழைந்து விட்டார்கள். (அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். “நாம்தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்,) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்” என்று சொன்னார்கள்.
இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. ஆகவே, அவர்கள் புறப்பட்டு வந்து, என்று சொன்னார்கள். அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, “அவர்கüல் நானும் ஒருவனா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “ஆம்” என்று பதிலüத்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, “அவர்கüல் நானும் ஒருவனா?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் “இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்” என்று சொன்னார்கள். (புகாரி: 5705)
முதலில் எழுப்பப்படுவர்
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் இறுதித்தூதராக இருந்தாலும். அவர்கள் மற்ற நபிமார்களை விட இறுதியில் இறந்தாலும் நபி (ஸல்) அவர்கள்தான் கியாம நாளில் முதன் முதலில் கப்ரை விட்டு எழுப்பப்படுவார்கள்.
அபூசயீத் அல்குத்ரீ (ர-)அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, “அபுல் காசிமே! உங்கள் தோழர்கüல் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “(அந்தத் தோழர்) யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அன்சாரிகüல் ஒருவர்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அவரைக் கூப்பிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், “இவரை நீர் அடித்தீரா?” என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, “இவர் கடைவீதியில், “மனிதர்கள் அனைவரையும்விட மூசாவுக்கு மேன்மையை அüத்தவன்மீது சத்தியமாக!’ என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை நான் செவியுற்றேன். உடனே நான், “தீயவனே! முஹம்மதை விடவா (மூசா மேன்மை வாய்ந்தவர்)?’ என்று கேட்டேன்.
என்னைக் கோபம் ஆட் கொண்டுவிட, இவரது முகத்தில் அறைந்துவிட்டேன்” என்று கூறினார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் போசாதீர்கள். ஏனெனில், மறுமை நாüல் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகிவிடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெüப்படுத்துபவர்கüல் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூசாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்கüல் ஒன்றைப் பிடித்துக்கொண்டிருப்பவராகக் காண்பேன். “மூர்ச்சையடைந் தவர்கüல் அவரும் ஒருவராக இருந்தாரா அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒüயை அவர் கண்ட போது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போது மென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அüக்கப்பட்டு) விட்டதா என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். (புகாரி: 2412)
பரிந்துரை செய்யும் தூதர்
நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்புகளில் கியாமநாளில் இந்த உம்மத்திற்காக நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்வதும் ஒன்றாகும்.
அபூஹுரைரா (ர-) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன், ஒரு விருந்தில் இருந்தோம். அப்போது (வைக்கப்பட்ட) புஜம் (முன்னங்கால்) ஒன்று நபி (ஸல்) அவர்கüடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்கள் (அதைத் தம்) வாயாலேயே (பற்கüல்) பற்றிக்கொண்டு அதி-ருந்து சிறிது உண்டார்கள். பிறகு, “நான் மறுமை நாüல் மக்கüன் தலைவன் ஆவேன்.
(மறுமை நாüல்) அல்லாஹ் (மக்கüல்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெüயில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்பவர் அந்த மக்களை பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியேற்பார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி), “நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்) பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்பார்கள்.
மக்கள் சிலர், “உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக் காகப் பரிந்துரை செய்வார்கள்)” என்று கூறுவார்கள். ஆகவே, மக்கள் ஆதம் (அலை) அவர்கüடம் சென்று, “ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்ட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங் களுக்குச் சிரம்பணியும் படி உத்திரவிட்டான்.
அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். உங்களை சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்கள் இறைவ னிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்க வில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “(நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது (கடும்) கோபம் கொண்டான்.
அதற்கு முன் அதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. அதற்குப் பிறகும் அதைப் போல் அவன் கோபம் கொள்ளமாட்டான். (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்தி-ருந்து (உண்ண வேண்டா மென்று) என்னைத் தடுத்தான். நான் (அவனுக்கு) மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ளேன். (ஆகவே,) நீங்கள் வேறெவ ரிடமாவது செல்லுங்கள். நீங்கள் நூஹ் (அலை) அவர்கüடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.
உடனே, மக்கள் நூஹ் (அலை) அவர்கüடம் சென்று, “நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப் பட்ட) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ், “நன்றி செலுத்தும் அடியார்’ என்று குறிப்பிட்டுள்ளான்.12 நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் அவல நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்துள்ள (இந்தத் துன்ப) நிலையை நீங்கள் காண வில்லையா? எங்களுக்காக உங்கள் இறைவ னிடம் பரிந்துரைக்க மாட்டீர்களா?” என்று கேட்பார்கள்.
அதற்கு அவர்கள், “என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப்போல் கோபம் கொள்ளமாட்டான். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் (இறுதி) நபி (ஸல்) அவர்கüடம் செல்லுங்கள்” என்று கூறுவார். மக்கள் என்னிடம் வருவார்கள். நான் இறை சிம்மாசனத்திற்குக் கீழே சஜ்தா செய்வேன். அப்போது “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துவீராக! பரிந்துரை செய்யுங்கள். (உங்கள்) பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும். கேளுங்கள். அது உங்களுக்குத் தரப்படும்” என்று (இறைவனின் தரப்பி-ருந்து) சொல்லப்படும். அறிவிப்பாளர் முஹம்மத் பின் உபைத் (ரஹ்) அவர்கள், “இந்த ஹதீஸ் முழுமையாக எனக்கு நினைவில்லை” என்று கூறுகிறார்கள். (புகாரி: 3340)
மஹ்ஷரில் நிற்கும் மக்களுக்கும் பரிந்துரை செய்வது அல்லாமல் வேறு சில காரியங்களுக்காகவும் கியாம நாளில் பரிந்துரை செய்வார்கள்.
1. சொர்க்கத்தின் கதவுகள் திறக்க.(முஸ்லிம்: 329)
2. கேள்வி கணக்கின்றி 70 ஆயிரம் நற்ர்கள் கேள்விக்கு முன்னதாகவே சுவர்க்கத்திற்கு செல்ல பரிந்துரை.(புகாரி: 4712)
3. முஃமின்களுக்கு பரிந்துரை.
4. பெரும்பாவம் செய்தவர்களுக்கு பரிந்துரை.
5. அபூதாலிப் அவர்களுக்கு தன்னை குறைக்கப்படுவதற்காக பரிந்துரை.(புகாரி: 3883)
6. சுவர்க்கத்தில் முஃமின்களுக்கு அந்தஸ்து உயர்வதற்காக பரிந்துரை.
நபி (ஸல்) அவர்கள் மூலம் இந்த சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்புகள்.
சிறந்த சமுதாயத்தவர்
நபி (ஸல்) அவர்களுக்கு தனிச்சிறப்புகளை வழங்கியதல்லாமல் அவர்களை பின்பற்றும் இந்த சமுதாயத்திற்கும் பல தனிச்சிறப்புகளை வழங்கியிருக்கிறான்.
நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன்: 3:110)
நபி (ஸல்) அவர்கள் (மொத்த சமுதாயத்தில் இறுதியாக) நீங்கள் எழுபதாவது சமுதாயமாக இருக்கின்றீர்கள். அந்த எழுபதில் நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக்கின்றீர்கள் என்று கூறினார்கள். (திர்மிதீ: 3001)
எதிரிகளிடமிருந்து கைப்பற்ற பொருட்கள்
நபி (ஸல்) அவர்களுடைய சமுதாயத்திற்கு கொடுக்கப்பட்ட தனிச்சிறப்புகளில் எதிரிகளிடமிருந்து பேரில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஆகுமானதும் ஒன்றாகும்.
போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, தூய்மையானதை உண்ணுங்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்: 8:68)
இந்த வசனத்தில் நன்க்கு போர்க்களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை சாப்பிடுவதற்கு நமக்கு அனுமதியளித்திருக்கிறான். நபி (ஸல்) அவர்கள் இது இந்த சமுதாயத்திற்கு மட்டும் குறிப்பானது என்று கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு முன்னிருந்த இறைத்தூதர்கள் எவருக்கும் வழங்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பட்டுள்ளது:
1. (எதிரிகளுக்கும் எனக்குமிடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் அவர்களுடைய உள்ளங்கüல் என்னைப் பற்றிய அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது.
2. தரை முழுவதும் சுத்தம் (-தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. (எனவே,) என் சமுதாயத்தாரில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்து விட்டால் (அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திலேயே தயம்மும் செய்து கொள்ளட்டும்;)
3. (முந்தைய இறைத்தூதர்கள் எவருக்கும் அனுமதிக்கப்படாத) போரில் கிடைக்கப் பெறும் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளது.
4. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூதாயத்தாருக்கு மட்டுமே தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். (ஆனால்,) நானோ ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இறைத்தூதராக (நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டுள்ளேன்.
5. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை புரியும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி: 438)
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் நமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவர் (யூஷஉ பின் நூன் (அலை) அவர்கள்) ஓர் அறப்போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம் “ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்ற ஒருவர், அவளுடன் தாம்பத்திய உறவைத் தொடங்க விரும்பி, இன்னும் தாம் பத்திய உறவைத் தொடங்காமலிருப்பின் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண் டாம். (அவ்வாறே,) வீடு கட்டி முடித்து, அதன் மேற்கூரையை (இன்னும்) உயர்த்தாமலிருப் பவரும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். ஆட்டையோ, சினை ஒட்டகங் களையோ வாங்கிவிட்டு, அவை குட்டிகள் ஈனுவதை எதிர்பார்த்துக்கொண்டிருப்ப வரும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம்” என்று கூறிவிட்டுப் போருக்குப் புறப்பட்டார்.
ஓர் ஊரை (ஜெரிக்கோ நகரை வெள்ளிக்கிழமை) அஸ்ர் தொழுகையின் நேரத்தில் அல்லது சற்றேறக்குறைய அந்த வேளையில் அவர் நெருங்கினார். (சற்று நேரத்தில் சூரியன் மறையத் தொடங்க, சனிக்கிழமை போரிடுவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் தோற்றுப்போக நேரிடுமே என்றஞ்சி) சூரியனை நோக்கி, “நீ, இறைவனின் கட்டளைப்படி இயங்குகின்றாய். நானும் இறைக்கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்” என்று கூறிவிட்டு, “இறைவா! சூரியனை (உடனே மறையவிடாமல்) தடுத்துவிடு” என்று பிரார்த்தித்தார். எனவே, அவருக்கு அல்லாஹ் வெற்றியை வழங்கும்வரை சூரியன் (மறையாமல்) தடுத்து நிறுத்தப்பட்டது.
(வெற்றிபெற்ற) பின்னர் அம்மக்கள் போரில் கிடைத்த செல்வங்களை ஒன்று சேர்த்தனர். அப்போது அவற்றை (எரித்துச் சாம்பலாக்கி)ப் புசிப்பதற்கு வானிலிருந்து நெருப்பு வந்தது. (ஆனால்) அவற்றைப் புசிக்க அது மறுத்துவிட்டது. அந்த இறைத்தூதர் “உங்களில் கையாடல் நடந்துள்ளது. ஆகவே, ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒரு மனிதர் என்னிடம் சத்தியப் பிரமாணம் அளிக்கட்டும்” என்று கூறினார்.
அவ்வாறே அவர்களும் அவரிடம் சத்தியப் பிரமாணம் அளித்தனர். அப்போது, ஒரு மனிதரின் கை, இறைத்தூதரின் கையோடு ஒட்டிக்கொண்டது. அப்போது இறைத்தூதர், “உங்களி டையேதான் கையாடல் செய்யப்பட்ட பொருள் உள்ளது. ஆகவே, உன்னுடைய குலத்தார் என்னிடம் சத்தியப் பிரமாணம் அளிக்கட்டும்” என்று கூறினார்.
அவ்வாறே, அவர்கள் சத்தியப் பிரமாணம் அளிக்க, இரண்டு மனிதர்களின் கை அல்லது மூவருடைய கை இறைத்தூதருடைய கையுடன் ஒட்டிக்கொண்டது. அப்போது அவர், “உங்களிடையேதான் கையாடல் செய்யப்பட்ட அந்தப் பொருள் உள்ளது. நீங்கள்தாம் அதைக் கையாடல் செய்துள்ளீர்கள்” என்று கூறினார்.
ஆகவே, அக்குலத்தார் பசுமாட்டின் தலை அளவுக்குத் தங்கத்தைக் கொண்டு வந்து, மண் தரையில் இருந்த பொருட்களுடன் வைத்தனர். உடனே (வானிலிருந்து) நெருப்பு வந்து அதைப் புசித்தது. (முற்காலங்களில் போர்ச் செல்வங்கள் இப்படித்தான் செய்யப்பட்டன.)
நமக்கு முன்னால் யாருக்கும் போர்ச் செல்வங்கள் (எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள) அனுமதிக்கப்படவில்லை. (பின்னர் நமக்கு அப்பொருட்களைப் பயன்படுத்த அல்லாஹ் அனுமதியளித்தான்). வளமும் உயர்வும் உள்ள அல்லாஹ் நமது பலவீனத்தையும் இயலாமை யையும் கண்டு, அவற்றை நமக்கு அனுமதிக்கப்பட்டவையாக ஆக்கினான்.
(முஸ்லிம்: 3595)
ஜும்ஆ தொழுகை
நபி (ஸல்) அவர்கள் மூலம் இந்த சமுôயத்திற்கென்று பல தனிச்சிறப்புகள் இருக்கின்றது. அதில் வெள்ளிக்கிழமை ஒன்றாகும்.
இந்த நாளுக்கென்று பல சிறப்புகள் இருக்கின்றது. இந்நாளில்தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். இந்த நாளில்தான் அவர்கள் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைந்தார்கள். இந்நாளில்தான் கியாம நாள் நிகழும். இந்நாளில் பிரார்த்தனை அங்கரிக்கப்படும் நேரம் இருக்கிறது. இப்படி பல சிறப்புகள் இந்நாளுக்கு உண்டு. இப்படி சிறப்புகள் உள்ள இந்நாளை கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாம் (காலத்தால்) பிந்தியவர்களாவோம். மறுமையில் (அந்தஸ்தால்) முந்தியவர்களாவோம். எனினும், (யூத, கிறிஸ்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் அருளப்பெற்றார்கள். மேலும் இந்த நாள்தான் அவர்களுக்கும் (வாரவழிபாட்டு) நாளாக கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இ(ந்த நாளைத் தம் வாரவழிபாட்டு நாளாக ஏற்றுக்கொள்வ)தில் கருத்து வேறுபாடுகொண்டனர். ஆகவே, அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்தான். இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடர்பவர் களே ஆவர். (எவ்வாறெனில், வெள்üக் கிழமை நமது வார வழிபாட்டு நாள் என்றால்) நாளை (சனிக்கிழமை) யூதர்களும் மறு நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறிஸ்தவர்களும் (வார வழிபாடு நடத்தும் தினங்களாகும்). (புகாரி: 876)
பாவங்கள் மன்னிக்கப்பட்ட சமுதாயம்
இந்த சமுதாயத்திற்கு என்னமுடியாத பல சிறப்புகளை அல்லாஹ் வழங்கியுள்ளான். அதில் இந்த சமுதாயத்திற்கு ஏற்படும் மறதிகளுக்கும், சிறு தவறுகளுக்கும் குற்றம் பிடிக்காமல் இருப்பதும் ஒன்றாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உம்மத்தினரின் உள்ளங்கüல் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன் படி செயல்படாதவரை அல்லது அதை (வெüப்படுத்தி)ப் பேசாதவரை எனக்காக அல்லாஹ் மன்னித்து விட்டான். இதை அபூஹுரைரா(ர-) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி: 2528)
அழிக்கப்படாத சமுதாயம்
நபியவர்கள் மூலம் இந்த சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்புகளில் இந்த சமுதாயம் எக்காரணத்தைக்கொண்டு முழுமையாக எதிரிகள் மூலமாகவோ, அல்லது அல்லாஹ்வின் வேதனையின் காரணமாகவோ, பசி, பட்டினி, வெள்ளப்பெருக்கு போன்றைவைகளால் முழுமையாக அழிக்கப்படாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் பார்த்தேன். அதில் எனக்குச் சுருட்டிக் காட்டப்பட்ட அளவுக்கு என் சமுதாயத்தாரின் ஆட்சி விரிவடையும். எனக்குச் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான (தங்கம் மற்றும் வெள்ளியின்) இரு கருவூலங்கள் வழங்கப்பட்டன. நான் என் இறைவனிடம் என் சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழித்துவிடாதே எனப் பிரார்த்தித்தேன்.
மேலும், “அவர்கள்மீது அவர்களிடையே உள்ள எதிரிகளைத் தவிர வெளி எதிரிகளைச் சாட்டி விடாதே. அவ்வாறு நீ சாட்டினால், அவர்களது ஆட்சியும் கண்ணியமும் முற்றாக அழிந்துவிடும்” என்றும் பிரார்த்தித்தேன்.
என் இறைவன், “முஹம்மதே! நான் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அது மாற்றப் படாது. நான் உம்முடைய சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழிக்கமாட்டேன் என்பதை உமக்கு (வாக்குறுதியாக) அளிக்கிறேன். மேலும், அவர்களுக்கெதிராக அவர்களிடையேயுள்ள எதிரிகள் அல்லாமல் வெளி எதிரிகளைச் சாட்டி, அவர்களது ஆட்சியை முற்றாக அழிக்கமாட்டேன்; எதிரி கள் பூமியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு எதிராகத் திரண்டாலும் சரியே! ஆனால், அவர்களிலேயே சிலர் சிலரை அழிப்பார்கள். அவர்களிலேயே சிலர் சிலரைச் சிறைபிடிப்பார்கள்” என்று கூறினான். இதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள். (முஸ்லிம்: 5538)
சாட்சி பகரும் சமுதாயம்
இந்த சமுதாயத்தின் தனிச்சிறப்புகளில் கியாம நாளில் இந்த சமுதாயம் பிற சமுதாயத்திற்கு சாட்சி பகருவதாக இருக்கும்.
இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்க ளுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழ வும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங் களை நடு நிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரி லிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற் கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ண யித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்ற வர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக் குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்க முடையோன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்: 2:143)
இந்த சமுதாயத்திற்கு பிற சமுதாயத்திற்கு எதிராக எப்படி சாட்சி சொல்லும் என்பதற்கும் கியாம நாளில் நடைபெறும் ஒரு சம்பவம் நமக்கு விளக்குகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாüல் (நபி) நூஹ் (அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள், “இதோ வந்துவிட்டேன்; என் இறைவா! கட்ளையிடு; காத்திருக்கிறேன்” என்று பதிலüப்பார்கள். அப்போது அவர்கüடம், “(நமது செய்தியை மக்களுக்கு) நீங்கள் எடுத் துரைத்துவிட்டீர்களா?” என்று இறைவன் கேட்பான். அவர்கள், “ஆம் (எடுத்துரைத்து விட்டேன்)” என்று சொல்வார்கள். அப்போது அவர்களுடைய சமுதாயத்தாரிடம், “உங்களுக்கு இவர் (நம் செய்தியை) எடுத்துரைத் தாரா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “எங்கüடம் எச்சரிப்பவர் எவரும் வரவில்லை” என்று சொல்வார்கள். அப்போது அல்லாஹ், “உங்களுக்கு சாட்சியம் சொல்கின்றவர் யார்?” என்று (நூஹிடம்) கேட்க அவர்கள், “முஹம்மதும் அவருடைய சமுதாயத்தினரும்” என்று பதிலüப்பார்கள். அவ்வாறே அவர்களும், “நூஹ் (அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு இறைச் செய்தியை) எடுத்துரைத்துவிட்டார்கள்” என்று சாட்சியம் அüப்பார்கள். மேலும், இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பார். இதையே “இவ்வாறே, உங்களை நாம் நடு நிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவ ராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக” எனும்
(அல்குர்ஆன்: 2:143) இறைவசனம் குறிக்கிறது. “நடுநிலையான’ (வசத்) என்பதற்கு “நீதியான’ என்று பொருள். இதை அபூசயீத் அல்குத்ரீ (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி: 4487)
மலக்குமார்களின் வரிசையைப் பெற்ற சமுதாயம்
இந்த சமுதாயத்தின் தனிச்சிறப்புகளில் மற்றொன்டு இந்த சமுதாயம் சப்புகளில் நிற்கும் போது அது மலக்குமார்களில் வரிசைக்கு ஒப்பாக மாறிவிடுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறுதி சமுதாயத்தாராகிய) நாம் மூன்று விஷயங்களில் (மற்ற) மக்கள் அனைவரைவிடவும் சிறப்பிக்கப்பட்டுள்ளோம்:
1. நம் (தொழுகை) வரிசைகள் வானவர்களின் (தொழுகை) வரிசைகளைப் போன்று (சீராக) ஆக்கப்பட்டுள்ளன.
2. நமக்கு பூமி முழுவதும் தொழுமிடமாக ஆக்கப்பட்டுள்ளது. (தொழுகைக்காக “அங்கத் தூய்மை’ செய்ய) நமக்குத் தண்ணீர் கிடைக்காதபோது தரை முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாக ஆக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறப்பையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். இதை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
தலைமைப்பதவியை தக்க வைத்துக் கொள்ளும் சமுதாம்.
கியாம நாளுக்கு முன்பாக ஈஸா (அலை) அவர்கள் இப்பூமிக்கு வúகை தருவார்கள் என்று நம்பியிருக்கிறோம். ஈஸா (அலை) அவர்கள் இப்பூமிக்கு வந்தவுடன் அவர்களை தலைமைப்பதவியை எடுத்துக்கொள்ளப்படும் அதற்கு ஈஸா (அலை) அவர்கள் மறுத்துவிடுவார்கள். இதை பின்வரும் செய்தி நன்க்கு விளக்குகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்கு ஆதரவாகப் போராடிக்கொண்டேயிருப்பார்கள். மறுமை நாள்வரை அவர்கள் (சத்தியத்தில்) மேலோங்கியே நிற்பார்கள். பிறகு மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கிவருவார்கள். அப்போது முஸ்லிம்களின் தலைவர், “வாருங்கள், வந்து எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்துங்கள்!” என்று (ஈசாவிடம்) கூறுவார். அதற்கு ஈசா (அலை) அவர்கள், “இல்லை (உங்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுவிக்கமாட்டேன்). உங்களில் சிலர்தாம் மற்றச் சிலருக்குத் தலைவராக இருப்பார்; இது, அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு அளித்துள்ள மரியாதையாகும்” என்று கூறிவிடுவார்கள். (முஸ்லிம்: 247)
இது வரை இவ்வுலகில் இந்த சமுதாயம் எவ்வளவு சிறப்புகளை பெற்றிருக்கின்றது என்பதை தெளிவுபட பார்த்தோம். இதே இந்த உம்மத்தே முஹம்மதிய்யா சமுதாயம் மறுமையில் என்ன தனிச்சிறப்புகளை பெற்றிருக்கின்றது என்பதை பார்ப்போம்.
வெண்மைச்சமுதாயம்.
மறுமை நாளில் வேறு எந்த சமுதாயமும் பெற்றிருராத முக ஒலியை இந்த சமுதாயம் பெற்றிருக்கும்.
நுஅய்ம் அல்முஜ்மிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பள்ளிவாசலிலின் மேல்புறத்தில் அபூ ஹுரைரா (ரலிலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளூ செய்தார்கள். (உளூ செய்து முடித்ததும்) “மறுமை நாளில் என் சமுதாயத்தார் உளூவின் உறப்புகளிலுள்ள அடையாளங்களால் “(பிரதான) உறுப்புக்கள் பிரகாசிப்போரே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் எவருக்குத் (தமது உளூவில் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது பிரகாசத்தையும் நீட்டிக்கொள்ள முடியுமோ அதனைச் செய்து கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டிருக்கிறேன் என்றார்கள். (புகாரி: 136)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள். அப்போது அவர்கள் (திடீரென) உறங்கிவிட்டார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு புன்னகைத்தவர்களாகத் தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சிரிக்கக் காரணம் என்ன?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “சற்று முன் (குர்ஆனின் 108ஆவது அத்தியாயமான “அல்கவ்ஸர்’ எனும்) ஓர் அத்தியாயம் எனக்கு அருளப்பெற்றது” என்று கூறிவிட்டு அந்த அத்தியாயத்தை (பின்வருமாறு) ஓதிக் காட்டினார்கள்:
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். இன்னா அஉத்தைனாகல் கவ்ஸர். ஃபஸல்லி லி ரப்பிக்க வன்ஹர். இன்ன ஷானிஅக்க ஹுவல் அப்தர்.
(பொருள்: அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்… (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு அல்கவ்ஸரை நல்கியுள்ளோம். எனவே, உம்முடைய இறைவனைத் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக! நிச்சயமாக உம்முடைய பகைவன்தான் சந்ததியற்றவன்.)
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்கவ்ஸர் என்றால் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்” என்று பதிலளித்தோம். அவர்கள், “அது ஒரு (சொர்க்க) நதி. என்னுடைய இறைவன் (மறுமை நாளில்) அதை(த் தருவதாக) எனக்கு வாக்களித்துள்ளான்; அதில் அபரிமிதமான நன்மைகள் உள்ளன. அது ஒரு நீர் தடாகம்; மறுமை நாளில் என்னுடைய சமுதாயத்தார் (தண்ணீர் அருந்துவதற்காக) அதை நோக்கி வருவார்கள். அதன் குவளைகள் நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் போன்று (அதிகமாகக்) காணப்படும். அப்போது அவர்களில் ஓர் அடியார் (தண்ணீர் அருந்தவிடாமல்) தடுக்கப்படுவார். உடனே நான், “இறைவா! அவர் என் சமுதாயத்தாரில் ஒருவர். (அவர் ஏன் தடுக்கப்படுகிறார்?)” என்று கேட்பேன். அதற்கு இறைவன், “உங்கள் சமுதாயம் உங்களுக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கிவிட்டதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறுவான். (முஸ்லிம்: 670)
பாலத்தை கடக்கும் முதல் சமுதாயம்
கியாம நாளில் இந்த சமுதாயத்திற்கு என்ன தனிச்சிறப்புகள் வழங்கப்படும் என்பதை பார்த்து சருகிறோம். அதில் மறுமையில் நரகத்தின் மேல் போடப்பட்டிருக்கும் பாலத்தை இந்த சமுதாயம்தான் முதலில் கடந்து செல்லும்.
அபூஹுரைரா (ர-) அவர்கள் கூறியதாவது: மக்கள் (நபி ளஸல்ன அவர்கüடம்) “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பௌர்ணமி இரவில் கீழே மேகம் சூழாத (வானில்) சந்திரனைக் காண்பதில் நீங்கள் ஐயம்கொள்வீர்களா?” என்று கேட்டார்கள்.
மக்கள், “இல்லை (ஐயம் கொள்ள மாட்டோம்), அல்லாஹ்வின் தூதரே!” என்றார்கள். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், “கீழே மேகம் சூழாத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஐயம்கொள்வீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கும் மக்கள், “இல்லை” என்று பதிலüத்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறுதான் உறுதியாக நீங்கள் இறைவனைக் காண்பீர்கள்” என்று கூறிவிட்டு (பின்வருமாறும்) கூறினார்கள்:
மறுமை நாüல் மக்கள் அனைவரும் ஒன்று குவிக்கப்படுவார்கள். அப்போது “(உலகத்தில்) யார் எதனை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அதனைப் பின்பற்றிச் செல்லட்டும்” என்பான் (இறைவன்). ஆகவே, சிலர் சூரியனைப் பின்பற்றிச் செல்வர். இன்னும் சிலர் சந்திரனைப் பின்பற்றிச் செல்வர். வேறு சிலர் தீய சக்தி(களான சாத்தான்கள், சிலைகள், மந்திரவாதிகள் போன்ற வழிகேடர்)களைப் பின்பற்றிச் செல்வர். இறுதியில் (எனது) இந்த சமுதாயம் மட்டும் தங்கüடையே நயவஞ்சகர்கள் இருக்கும் நிலையில் எஞ்சியிருக்கும். அப்போது வ-வும் மான்பும் உடைய இறைவன் (அவர்கள் அறியாத தோற்றத்தில்) அவர்கüடம் வந்து, “நான் உங்கள் இறைவன்” என்பான். உடனே அவர்கள் “எங்கள் இறைவன் எங்கüடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம்; எங்கள் இறைவன் எங்கüடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்” என்று கூறுவார்கள்.
அப்போது அல்லாஹ் (அவர்கள் அறிந்த தோற்றத்தில்) அவர்கüடம் வந்து, “நானே உங்கள் இறைவன்” என்பான். அப்போது அவர்கள், “நீ எங்கள் இறைவன்தான்” என்பார்கள். பிறகு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேற்பரப்பில் பாலம் அமைக்கப்படும். (இறைத்தூதர்கள். தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். நானே அ(ந்தப் பாலத்)தை முதலாவதாகக் கடப்பவன் ஆவேன். அன்றைய தினத்தில் இறைத்தூதர்களைத் தவிர வேறுயாரும் பேசமாட்டார்கள். அன்றைய தினத்தில் “இறைவா! காப்பாற்று! காப்பாற்று!’ என்பதே இறைத்தூதர்கüன் பிரார்த்தனையாகும். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், “அந்நரகத்தி(ன் பாலத்தி)ல் கொக்கிகள் அமைந்திருக்கும்.
அவை (ஊமத்தங்காயின் முள்வடிவில்) “சஅதான்’ செடியின் முள்ளைப் போன்றிருக்கும்” என்று கூறிவிட்டு, “”சஅதான்’ செடியின் முள்ளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்(பார்த்திருக் கிறோம்)” என்று பதிலüத்தார்கள். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் சஅதான் செடியின் முள்ளைப் போன்றிருந்தாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள் அப்போது அந்த கொக்கி மக்களை அவர்கüன் (தீய) செயல்களுக் கேற்ப பற்றிப் பிடிக்கும். அவர்கüடம் தம் (தீய) செயல்களை முன்னிட்டு பேரழிவுக்கு உள்ளாபவர் களும் உண்டு. (அந்தப் பாலத்தில்) தட்டுத்தடு மாறிய பின் தப்புபவர்களும் உண்டு.
இறுதியாக இறைவன் நரகத்திற்குரியவர்கüல் தான் நாடிய சிலர் மீது கருனை காட்ட நினைக்கும் போது வானவர்கüடம், அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்களை நரகத்தி-ருந்து வெüயேற்றுமாறு கட்டளையிடுவான்.
அவ்வாறே வானவர்கள் அவர்களை வெüயேற்றுவார்கள். சஜ்தாச் செய்த அடையாளங்களை வைத்து இவர் களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள். சஜ்தா செய்ததனால் (ஏற்பட்ட) அடையாளங் களைப் புசிக்கக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துவிட்டான். ஆகவே (அல்லாஹ்வை வணங்கியவர்கள்) நரகத்தி-ருந்து வெüயேற்றப்படுவார்கள். சஜ்தா செய்த(தால் ஏற்பட்ட) வடுக்களைத் தவிர ஆதமின் மைந்த(னான மனித)ர்களுடைய முழு உடம்பையும் நரகம் புசித்துவிடும். இந்த நிலையில் அவர்கள் கருகிப் போனநிலையில் நரகத்தி-ருந்து வெüயேறுவார்கள். அப்போது அவர்கள் மீது (மாஉல் ஹயாத் எனும்) ஜீவநீரை ஊற்றப்படும். உடனே அவர்கள் வெள்ளச் சேற்றில் முளைத்துவிடும் தானிய வித்தைப் போன்று செழிப்புடன் எழுவார்கள்.
பின்னர் அல்லாஹ் அடியார்கüடையே தீர்ப்பüத்து முடிப்பான். இறுதியாக ஒரே ஒரு மனிதன் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே எஞ்சி நிற்பான். அவன்தான் நரகவாசிகüல் கடைசியாக சொர்க்கத்திற்கு செல்பவன். அவன் நரகத்தை முன்னோக்கியபடி “இறைவா! நரகத்தை விட்டும் என் முகத்தை திருப்புவாயாக! அதன் நச்சுக் காற்று என்னை அழித்துவிட்டது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது.” என்று கூறுவான். அப்போது அல்லாஹ், “(உனது கோரிக்கைப்படி) இவ்வாறு உனக்கு செய்து கொடுக்கப் பட்டால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா?” என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், “இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறுறெதையும் கேட்கமாட்டேன்)” என்பான்.
அந்தமனிதன் அல்லாஹ்விடம் தான் நாடிய உறுதிமொழியையும் வாக்குறுதிகளையும் வழங்குவான். அல்லாஹ் நரகத்தைவிட்டும் அம்மனிதனுடைய முகத்தை திருப்பிவிடுவான். சொர்க்கத்தை நோக்கி அவனுடைய முகத்தை திருப்பியதும் அம்மனிதன் சொர்க்கத்தின் செழிப்பைப் பார்த்துக்கொண்டு அல்லாஹ் நாடிய அளவு நேரம் அமைதியாக இருப்பான். பிறகு “இறைவா! என்னைச் சொர்க்கத்தின் வாசலருகே செல்லவைப்பாயாக!” என்று கேட்பான். அதற்கு இறைவன், “முன்பு கேட்டதைத் தவிர வேறெதையும் நீ என்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறி உறுதிமொழியும் வாக்குறுதியும் அüத்தாயே?” என்று கேட்பான்.
அதற்கு அம்மனிதன், “இறைவா! என்னை உன் படைப்புக்கüலேயே நற்கதியற்றவனாய் ஆகிவிடக்கூடாது!” என்று கூறுவான். அதற்கு இறைவன், “(நீ கேட்டது) உனக்கு வழங்கப்பட்டால் வேறு எதையும் நீ கேட்காம-ருப்பாயா?” என்பான். அம்மனிதன், “இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! இஃதல்லாத வேறெதையும் நான் கேட்கமாட்டேன்” என்பான். இதுகுறித்து இறைவனிடம் உறுதிமொழியும் வாக்குறுதியும் அந்த மனிதன் அüப்பான். உடனே இறைவன் அந்த மனிதனை சொர்க்கத்தின் வாசல் வரை செல்லவைப்பான். அதன் வாசலை அவன் அடைந்ததும் அதன் ரம்மியத்தைக் காண்பான்; அதிலுள்ள செழுமையையும் (மனதிற்கு) மகிழ்ச்சி (தரத் தக்கவை)யையும் காண்பான். பிறகு அல்லாஹ் நாடிய அளவுக்கு அவன் அமைதியாக இருப்பான்.
அதன்பின் அந்த மனிதன், “இறைவா! என்னை சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிப்பா யாக!” என்று கூறுவான். அதற்கு உன்னதனாகிய அல்லாஹ், “ஆதமின் மகனே! உனக்கு என்ன கேடு! ஏன் வாக்கைக் காப்பாற்றத் தவறிவிட்டாய்? முன்பு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என உறுதிமொழியும் வாக்குறுதியும் அüத்தாயே!” என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், “இறைவா! உன் படைப்பு கüலேயே என்னை நற்கதியற்றவனாய் ஆக்கி விடாதே!” என்பான். இம்மனிதனின் நிலை கண்டு சிரிப்பான். பிறகு அவனுக்கு சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதியüத்துவிடுவான். அதன் பின் இறைவன் அம்மனிதனிடம், “நீ ஆசைப்படுவதைக் கேள்!” என்று கூறுவான். அம்மனிதனும் தான் ஆசைப்படுவதை கூறுவான். இறுதியில் அவன் தன் ஆசைகள் யாவும் முற்றுப் பெறும்போது (அவனிடம்) இறைவன், “இதைவிட அதிகத்தை நீ ஆசைப்படு!” என்று சொல்-க் கொடுப்பான். இறுதியில் ஆசைகள் முற்றுப் பெற்றுவிடும்போது உன்னதனாகிய அல்லாஹ் “உனக்கு இதுவும் உண்டு. இதைப்போன்று இன்னொரு மடங்கும் உண்டு” என்பான்.
இதன் அறிவிப்பாளரான அபூசயீத் அல்குத்ரீ (ர-) அவர்கள் தமக்கு இதை அறிவித்த அபூ ஹுரைரா (ர-) அவர்கüடம், “உனக்கு இதுவும் உண்டு. இதைப்போன்று இன்னொரு மடங்கும் உண்டு’ என்றா அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ர-) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடமிருந்து “உனக்கு இதுவும் உண்டு. இதுபோன்று இன்னொரு மடங்கும் உண்டு’ என்றே இறைவன் கூறியதாகவே மனனமிட்டேன்” என்றார்கள். அதற்கு அபூசயீத் (ர-) அவர்கள், “இதுவும் உண்டு. இதுபோன்று பத்து மடங்கும் உண்டு’ என்றே நான் நபி (ஸல்) அவர்கüடமிருந்து செவியேற்றுள்ளேன்” என்று கூறினார்கள். (புகாரி: 806)