நன்மைக்கு வழிகாட்டுவதும் தர்மம்
பெற்றோர், பிள்ளைகள், வாழ்க்கைத் துணை, நண்பர்கள் என்று பலரும் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். இவ்வாறு யார் இருந்தாலும் அவர்களிடம் நாம் நன்மையான காரியங்கள் பற்றி எடுத்துரைத்து அவற்றைச் செய்யுமாறு கூறினால், அதுவும் தர்மம் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் “தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்’’ என்று கூறினார்கள். அப்போது “(தர்மம் செய்ய ஏதும்) அவருக்குக்கிடைக்கவில்லையானால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?’’ என்றுகேட்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள், “அவர் தம் கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; பிறருக்கும் தர்மம் செய்வார்’’ என்று சொன்னார்கள்.
“அவருக்கு தெம்பு இல்லையானால் (என்ன செய்வார்), சொல்லுங்கள்?’’ என்றுகேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர்உதவட்டும்‘’ என்றார்கள். “(இதற்கும் அவர்) சக்தி பெறாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?’’ என்று கேட்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் “அவர் “நல்லதை’ அல்லது “நற்செயலை’(ச் செய்யும்படிபிறரை) ஏவட்டும்’’ என்றார்கள். “(இயலாமையால் இதையும்) அவர் செய்யாவிட்டால்(என்ன செய்வது), சொல்லுங்கள்?’’ என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், “அவர்தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே தர்மம்தான்’’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி); நூல்: முஸ்லிம் 1834
தமது பொறுப்பின் கீழிருக்கும் நபர்களுக்கு மார்க்கத்தை விளக்கி வழிகாட்டுவது அனைவர் மீதும் கடமையாக இருக்கிறது. இது ஒருபக்கம் இருப்பினும், அவ்வாறு நன்மை ஏவி தீமையைத் தடுப்பதற்கும் அல்லாஹ் தர்மம் செய்த கூலியை வழங்குகிறான். இது ஏக இறைவன் நமக்கு வழங்கியிருக்கும் பெரும் பாக்கியம்.