நன்மைகள் செய்ய விரைவோம்
ஆரோக்கியமோ, செல்வச் செழிப்போ, நல்லது செய்வதற்குரிய சாதகமான சூழிநிலையோ எப்போதும் இருந்து கொண்டே இருக்குமென்ற உத்திரவாதம் எவருக்கும் இல்லை. எந்த நேரத்திலும் தற்போதிருக்கும் நிலை மாறலாம். எனவே தகுந்த வாய்ப்பு அமையும் போதே நன்மையை நோக்கி விரைய வேண்டும்; முந்திக் கொள்ள வேண்டும்.
உங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பு கொண்ட சொர்க்கத்தை நோக்கியும் விரையுங்கள். அது இறையச்சமுடையோருக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ளது.
(திருக்குர்ஆன் 3:133)
ஒவ்வொருவருக்கும் ஒரு முன்னோக்கும் திசை உள்ளது. அவர் அதை முன்னோக்குகிறார். எனவே நன்மையான காரியங்களில் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ் உங்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பான். அனைத்துப் பொருட்கள் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
(திருக்குர்ஆன் 2:148)