தொழுகையில் பிஸ்மில்லாஹ் வை சப்தமிட்டு ஓதலாமா?

“சூரா அத்தவ்பாவைத்தவிர, அல்குர்ஆனில் ஏனைய சூராக்களை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கூறி ஓதித்தான் ஆரம்பிக்க வேண்டும். இதே அல்குர்ஆன் சூராக்களைத் தொழுகையில் ஓதும் போதும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்இ என்றுதான் ஆறம்பிக்க வேண்டும். இதில் கருத்து முரண்பாடில்லை.

ஆனால் தொழுகையில், அல்பாத்திஹாவை, அல்லது வேறு அல்குர்ஆன் வசனங்களை ஓத ஆரம்பிக்க முன்பு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், என்பதை சப்தம் இன்றி ஓதிக்கொள்வதா? இல்லை சப்தமாக ஓதித்தான் ஆறம்பிக்க வேண்டுமா? என்பதில் தான் கருத்து முரண்பாடு உள்ளது. எனவே! நாம் இது சம்பந்தமாக வரும் ஆதாராபூர்வமான ஹதீஸ்களை ஆராயக் கடமைப் பட்டுள்ளோம்.

இதில்இ நாம் முதலாவதாக இம்மாம் திர்மிதி அவர்கள் பதிவு செய்து, அதை இமாம் திர்மிதி அவர்களே அறிவிப்பாளர் தொடரில் வலுவானதாக இல்லை எனக் கூறும்:! இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தமது தொழுகையை பிஸ்மில்லாஹ கூறி ஆறம்பிப்பாரகள் (திர்மிதி 228) என்ற நபி மொழியை விளங்குவோம்.

மேற் கூறிய நபி மொழி, தொழுகையில் அல்குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன், பிஸ்மில்லாஹ் என்று கூறி ஓத வேண்டுமென்று கூறவில்லை, தொழுகையை ஆறம்பிக்கும் போதுதான் பிஸ்மில்லாஹ், என்று கூறினார்கள்.

தொழுகையின் ஆரம்பம், அல்லாஹ் அக்பர் எனும் தக்பீர் தொழுகையின் முடிவு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்ற ஸலாம் கொடுத்தல். இங்கு, பிஸ்மில்லாஹ்வைக் கொண்டு தொழுகையை ஆரம்பித்தார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறுவதன் அர்த்தம் என்னவெனில், எந்தவொரு காரியத்தையூம் செய்வதற்கு ஆரம்பிக்க முன்பு பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்பதும் நபி மொழியாகும். அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகைக்குத் தக்பீர் கட்டுவதற்கு முதலில், ஹதீஸில் உள்ளவாறே “பிஸ்மில்லாஹ்” மாத்திரம் கூறி அல்லாஹூ அக்பர் என்று தக்பீருடன் தொழுகையை ஆறம்பித்திருப்பார்கள். அத்தோடு, ஓத வேண்டிய அல் பாத்திஹா சூராவை ஆறம்பிக்கமுன் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், என்பதை மௌனமாக ஓதி, அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் சூராவை ஓதியிருப்பார்கள்.

தொழுகையில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம், என்பதை நபி (ஸல்) அவர்கள், மௌனமாக மனதால் மாத்திரம் சப்தமேயின்றி ஓதியதின் காரணத்தால் அனஸ் (ரலி) அவர்கள்:- நான் நபி (ஸல்) அவர்களுடனும், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் தொழுது இருக்கிறேன் அவர்களில் யாரும் பிஸ்மில்லாஹ்வை ஓதியதை நான் கேட்டதில்லை, (புஹாரி-743, முஸ்லிம்- 667) என்று மேற் கூறிய நபி மொழியை அறிவிக்கிறார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் மாத்திரமல்ல பின்னைய காலங்களில் கலீபாக்களாக வந்த முப்பெரும் ஸஹாபாக்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் நின்று தொழுத அனுபத்தையே அறிவித்திருக்கிறார்கள்.

நுஐம் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கும் கீழ்கானும் ஹதீஸையூம் சற்று ஆராய்வோம். “நான் அபூ ஹூரைரா (ரலி) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன். அவர்கள் பிஸ்மியை ஓதிவிட்டு அல்பாத்திஹா அத்தியாயம் ஓதினார்கள். தொழுகை முடிந்த பின் நான் உங்ளில் அல்லாஹ்வின் தூதர் தொழுததைப்போல் சரியாகத் தொழபவன் ஆவேன். என்று அபூஹூரைரா (ரலி) கூறினார்கள்.

இந்த நபி மொழியிலிருந்து நாம் விளங்க வேண்டியது என்னவெனில்:- அபூ ஹூரைரா (ரலி) அவர்கள், வளக்கத்திற்கு மாறாகத் தொழுகையில், இப்படி பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதைக் கொஞ்சம் சப்தமாக ஓதியிருக்கிறார்கள். இதை அவதானித்த,இந்த நபி மொழியை அறிவிப்பவரும் அவரோடு தொழுகையில் கலந்து கொண்டவர்களும் ஆச்சரியமாகப் பார்த்த வேளையில் அதைக் கண்னுற்ற அபூஹூரைரா (ரலி) அவர்கள் நான் உங்களில் அல்லாஹ்வின் தூதர் தொழுததைப்போல் சரியாகத் தொழுபவன் ஆவேன் என் கூறுகிறார்கள்.

அதுவல்லாமல் அல்லாஹ்வின் தூதர் சத்தமிட்டுத்தான் தொழுகையில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். கூறுவார்கள் என்று கூற வில்லை, இந்த நபி மொழி தொழுகையில் பிஸ்மியை சப்தமாக ஓதவேண்டும் என்பதற்கு ஆதாரமானதுபோல் இருந்தாலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் தொழுகையில் பிஸ்மியை ஓதியதை நான் கேட்டதில்லை என அனஸ் (ரலி) அறிவிக்கும் நபி மொழிக்கு மேலும வலுவாகவுள்ளது.

எப்படியெனில் நபி (ஸல்) களாரும் முப்பெரும் ஸஹாபாக்களும் பிஸ்மியை மௌனமாக ஓதித் தொழுவித்திருக்கும் பொழுது, அபூ ஹூரைரா (ரலி) சப்தமாக ஓதிவிட்டாரே? என்று பின்னால் தொழுதவர்கள் ஆச்சரியப்பட்டதனால்தான், அபூஹரைரா (ரலி) அவர்கள், தாமாகவே, தொழுது முடித்த பிறகு, இவ்வாறு மக்களிடம் கூறினார்கள் என்றுதான் நாம் விளங்க வேண்டும்.

*தொழுகையின் துவக்கத்தில் பிஸ்மில்லாஹ் ஓத வேண்டுமா*

ஒவ்வொரு ரக்அத்திலும் சூராக்களை ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என சப்தமிட்டோ,மெதுவாகவோ கூற வேண்டும்.

‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பது சூரத்துல் ஃபாத்திஹாவின் ஒரு வசனம் என்பதால் அதையும் ஓத வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் கிராஅத் (குர்ஆன் ஓதுதல்) எவ்வாறு இருந்தது? என அனஸ் (ரலி)யிடம் விசாரிக்கப்பட்ட போது’அவர்கள் நீட்டி நிறுத்தி ஓதினார்கள்’ என்று கூறிவிட்டு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதில் ரஹ்மான் ரஹீம் என்ற வார்த்தைகளை நீட்டி ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: கதாதா,

நூல்: புகாரீ 5046

‘நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்றே தொழுகையைத் துவங்குவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்கள்: புகாரீ 743, முஸ்லிம் 229

நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வைச் சப்தமின்றி ஓதினார்கள் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஆதாரமாகும். சப்தமிட்டு பிஸ்மில்லாஹ் ஓதுவதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதேன். அவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று ஓதி விட்டுப் பிறகு அல்ஹம்து சூராவை ஓதினார்கள்…. அல்லாஹ்வின் மீதாணையாக நபி (ஸல்) அவர்கள் தொழுது காட்டியது போல் நான் உங்களுக்குத் தொழுது காட்டினேன்’ என்று அபூஹுரைரா (ரலி) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: நுஐம் அல்முஜ்மிர்

நூல்: ஹாகிம் 1/357

ஏகத்துவம்

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

0 thoughts on “தொழுகையில் பிஸ்மில்லாஹ் வை சப்தமிட்டு ஓதலாமா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *