தொடர வேண்டிய தர்மங்கள்
நமது பொருளாதாரத்தை இறைவழியில் செலவழிப்பதற்கு நன்மைகள் உண்டு. ஒருமுறை இருமுறை என்று எப்போது செலவழித்தாலும் நன்மை கிடைக்கும் என்றாலும், அதற்கான வாய்ப்புக்களை தவறவிடாமலும், தட்டிக்கழிக்காமலும் தொடர்ந்து வழங்கும்போது அளப்பறிய நன்மைகள் கிடைக்கும்.
…இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ – அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்‘’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புஹாரி (1465)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு நன்கொடை வழங்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். (அப்போதெல்லாம்) நான் “என்னை விட அதிகத் தேவையுடையவருக்கு இதைக் கொடுங்களேன்’’ என்று சொல்வேன்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1888)