தீமையைத் தடுக்காதிருப்பதும் குற்றமே!
- கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல்மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.
- “அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் “உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு
அறிவுரை கூறுகிறோம்)” எனக் கூறினர். - கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். குற்றம் புரிந்து வந்ததால் அநீதி இழைத்தவர்களைக் (மீன் பிடிக்க சென்றோரையும் அதை தடுக்காதோரையும் ) கடுமையாகத் தண்டித்தோம்.
திருக்குர்ஆன் 7: 163,164,165
தீமையைத் தடுக்காதிருப்பதும் குற்றமே! தீமையைச் செய்தவர்கள், தீமையைத் தடுத்தவர்கள், தீமையைத் தடுக்காதிருந்தவர்கள் ஆகிய மூன்று வகையினரில் தீமையைத் தடுத்தவர்களை மட்டும் காப்பாற்றியதாக இவ்வசனம் கூறுகிறது.
தீமையைச் செய்யாமலும், மற்றவர்களின் தீமையைத் தடுக்காமலும் இருந்தவர்கள் தீமை செய்தோருடன் சேர்த்து (குரங்குகளாகவும்,பன்றிகளாகவும் மாற்றப்பட்டு) அழிக்கப்பட்டனர் என்றும் இவ்வசனம் கூறுகிறது.
தீமையைத் தடுக்காமல் தம்மளவில் நல்லவர்களாக வாழ்வோர் இறைவனின் திருப்தியைப் பெற முடியாது என்பதை இவ்வசனத்திலிருந்து (7:165) அறியலாம்.
———————-
ஏகத்துவம்