*திருமணம் முடிக்கும்போது மணப் பெண்ணின் முன்னெற்றி ரோமத்தை பிடித்து ஓதும் துஆக்கள் ஏதும் உண்டா?*

*உங்களில் ஒருவர் ஒரு பெண்ணை அல்லது ஒரு பணிவிடையாளரை அல்லது வாகனத்தைப் பெற்றுக்கொண்டால், அதன் முன் பகுதியை பிடித்து பின்வரும் பிரார்த்தனையை ஓதிக் கொள்ளட்டும்*

(பொருள்: *அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஹைரிஹா வஹைரி மா ஜுபிலத் அலைஹி வஅஊது பிக மின் ஷர்ரிஹா வஷர்ரி மா ஜுபிலத் அலைஹி* என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக, *அப்துல்லாஹ் இப்னு அம்ரு* (ரலி) அறிவிக்கிறார் என்று *இப்னுமாஜா (1914)* நூலிலும், மற்றும் சில நூற்களிலுமாக (16 அறிவிப்புகளில்) ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியின் அனைத்து அறிவிப்புகளிலும் *முஹம்மத் இப்னு அஜ்லான்* என்பவர் இடம் பெற்றிருக்கிறார்.

இவர் நல்லவர்தான் என்றாலும், அவரின் நினைவாற்றல் குறைவினால் இவரைப் பற்றி இமாம் ஹாகிம் உட்பட பல ஹதீஸ் கலை அறிஞர்கள் இவர் *மோசமான நினைவாற்றல்* கொண்டவர் என்று விமர்சனம் செய்துள்ளார்கள்.

இவருடைய அறிவிப்புக்கு ஏற்றவாறு மற்ற நம்பகமானவர்கள் அந்த ஹதீஸ்களை அறிவித்திருந்தால் மட்டுமே இவருடைய செய்திகளைப் பதிவு செய்வார்கள்.

இதனால்தான் இமாம் முஸ்லிம் அவர்கள் கூட, இவர் இடம்பெறும் ஹதீஸ்களைத் தனி ஆதாரமாகப் பதிவு செய்யவில்லை.

எனவே, *மணப் பெண்ணின் முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து ஓதும் பிரார்த்தனைப் பற்றிய இந்த செய்தி, மார்க்கத்தில் பின்பற்றத் தகுதியில்லாத தரத்தில் பலஹீனமானதாக இருக்கிறது.* இதுபோன்ற செய்தி ஆதாரப்பூர்வமான வேறு எந்த ஹதீஸிலும் இல்லை.

——————-

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *