திருக்குர்ஆன் கேள்வி – பதில் (Part -4)

கேள்வி : *அல்லாஹ்வின் பாதையில் செல்வதை தடுத்தால் என்ன ஏற்படும்?*

பதில் : *தீங்கும் கடும் தண்டனையும் கிடைக்கும்*. (அல்குர்ஆன் 16:94)

கேள்வி : *அல்லாஹ்வுக்கு உதாரணங்கள் கூறலாமா?*

பதில் : *கூடாது* (அல்குர்ஆன் 16:74)

கேள்வி : *நபிகளாரின் விவரங்களை மக்காவிற்கு எடுத்து சென்ற பெண்ணை பிடித்து வருமாறு யாரை* நபிகளார் அனுப்பினார்கள்?

பதில் : *அலீ (ரலி), மிக்தாத்* (ரலி) (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : *மக்காவில் கடிதம் கொண்டு சென்ற பெண்மணி எந்த இடத்தில் இருப்பதாக நபிகளார் கூறினார்கள்?*

பதில் : *ரவ்ளத்துக்காக்* (ஆதாரம் : புகாரி 3007)

கேள்வி : *யாருக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்?*

பதில் : *அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதோருக்கு* (அல்குர்ஆன் 16:104)

கேள்வி : *பத்ர் போரில் பிடிபட்ட அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபிகளார் யாருடை சட்டை அணிய கொடுத்தார்கள்?*

பதில் : *நயவஞ்சகனின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை* (ஆதாரம் : புகாரி 3008)

கேள்வி : *குர்ஆன் ஓதும்போது என்ன செய்ய வேண்டும்?*

பதில் : *விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும்* (அல்குர்ஆன் 16:98)

கேள்வி : *ஏமன் நாட்டு கஅபா* என்று அழைக்கப்பட்ட ஆலயத்தின் பெயர் என்ன?

பதில் : *துல் கலஸா* (ஆதாரம் : புகாரி 3020)

கேள்வி : *ஏமன் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்ட துல்கலஸா ஆலயத்தை உடைத்தவர் யார்?*

பதில் : *ஜரீர்* (ரலி) (ஆதாரம் : புகாரி 3020)

கேள்வி : *ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால்* எதிரிகள் என்ன கூறினார்கள்?

பதில் : *நபி இட்டுக்கட்டி செல்கிறார்* என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 16:101)

கேள்வி : குர்ஆன் யார் மூலம் இறக்கப்பட்டது?

பதில் : இறைவனிடமிருந்து ரூஹுல் குதுஸ் எனும் (ஜிப்ரீல்* மூலம்) (அல்குர்ஆன் 16:102)

கேள்வி : *யூதனின் தலைவன் அபூ ராஃபிஉ என்பவனை கொன்றவர் யார்*?

பதில் : *அப்துல்லாஹ் பின் அதீக்* (ரலி) (ஆதாரம் : புகாரி 3023)

கேள்வி : *போர்களத்தின் ஏற்படும் துன்பங்களை பார்க்கும்போது எப்படி இருக்க வேண்டும்*?

பதில் : *நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருக்கு வேண்டும்*. (ஆதாரம் :புகாரி 3026)
——————
*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *