بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

திருக்குர்ஆன் கேள்வி பதில் தொகுப்பு

 

 

  1. கிராமவாசிகளில் சிலர் இறை நெருக்கத்தை பெற்றுத்தரும் விஷயமாக எதை

கருதினர்?

 

கிராமவாசிகளில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோரும் உள்ளனர். தாம்

செலவிடுவதை அல்லாஹ்விடம் நெருங்குவதற்குரிய காரணமாகவும், இத்தூதரின்

(முஹம்மதின்) பிரார்த்தனைக்குரியதாகவும் கருதுகின்றனர்.

 

கவனத்தில் கொள்க! அது அவர்களுக்கு (இறை) நெருக்கத்தைப் பெற்றுத் தரும். அவர்களை அல்லாஹ் தனது அருளில் நுழையச் செய்வான். அல்லாஹ் மன்னிப்பவன்;

நிகரற்ற அன்புடையோன். (9:99)

 

2) உறுதிப்பட்ட பாதம் எப்போது சறுகிப் போகும்?

 

உங்களுக்கிடையே மோசடி செய்வதற்காக சத்தியங்களைச் செய்யாதீர்கள்! அவ்வாறு செய்தால் உறுதிப்பட்டபாதம் சறுகிப் போய் விடும். (16:94)

 

3) யாரிடத்தில் இருப்பது தீர்ந்துவிடும்?

 

உங்களிடம் உள்ளவை முடிந்து விடும். அல்லாஹ்விடம் உள்ளவை நிலைத்திருக்கும். (16:96)

 

4) யாருடைய முயற்சிக்கு நன்றி செலுத்தப்டும்?

 

நம்பிக்கை கொண்ட நிலையில் மறுமையை விரும்பி, அதற்காக முயற்சிப்போரின் முயற்சிக்கு நன்றிசெலுத்தப்படும். (17:19)

 

5) மிகப் பெரிய தகுதிகளையும் சிறப்புகளையும் கொண்டது எது?

 

மறுமை வாழ்வு மிகப்பெரிய தகுதிகளும், மிகப் பெரிய சிறப்புக்களும் கொண்டது.

(17:21)

 

6) ஷைத்தானின் உடன்பிறப்புகள் யார்?

 

விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். (17:27)

 

7) யாசகம் கேட்பவருக்கு எதையேனும் கொடுக்க முடியாத நிலை வந்தால் என்ன

செய்ய வேண்டும்?

 

(உம்மிடம் வசதியில்லாது) உமது இறைவனின் அருளைத் தேடி எதிர்பார்த்திருக்கும் நிலையில் (ஏதும்கொடுக்காமல்) அவர்களைப் புறக்கணிப்பதாக இருந்தால் கடினமில்லாத சொல்லையே அவர்களுக்குக் கூறுவீராக! (17:28)

 

8) அழகிய முடிவு எது?

 

அளக்கும் போது நிறைவாக அளங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! இதுவே சிறந்தது. அழகிய முடிவு. (17:35)

 

9) இறைவனின் வெறுப்பிற்குரியது எது?

 

பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்.                     இவை அனைத்தின் கேடும் உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாகும்.(17:37,38)

 

10) நமக்கும் காபிர்களுக்கும் இடையே மறைக்கப்பட்ட திரையை ஏற்படுத்த

என்ன வழி?

 

நீர் குர்ஆனை ஓதும் போது உமக்கும் மறுமையை நம்பாதோருக்கும் இடையே மறைக்கப்பட்ட ஒரு திரையைஏற்படுத்துகிறோம். ( 17:45)

 

15) நரகத்திற்கு எத்தனை வாசல்கள் உள்ளன?

 

அதற்கு ஏழு வாசல்கள் உள்ளன. அவர்களில் பங்கிடப்பட்ட ஒரு தொகையினர் ஒவ்வொரு வாசலுக்கும்உள்ளனர். (15:44)

 

12) எதிரிகள் பேசுவதன் மூலம் நமக்கு கலக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

 

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! ஸஜ்தா செய்வீராக!  (15:98)

 

13) உயர்ந்த குணம் யாரிடத்தில் உள்ளது?

 

மறுமையை நம்பாதோருக்கு தீய குணம் தான் உள்ளது. அல்லாஹ்வுக்கோ உயர்ந்த

குணம் உள்ளது. அவன்மிகைத்தவன்; ஞானமிக்கவன்.  (16:60)

 

14) பொறுமையாளர்களுக்கு எது சிறந்தது?

 

நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது.

(16:126)

 

15) மனிதர்களுக்கு நோய் நிவாரணம் எதில் உள்ளது?

 

“மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொருகனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!”என்று உமது இறைவன்தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது. (16:69)

 

16) தன்னை சீர்படுத்த என்ன வழி?

 

யார் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநாட்டுகிறார்களோ அத்தகைய சீர்படுத்திக் கொள்வோரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.

 

17) யுகமுடிவு நேரத்தின் நிகழ்ச்சி எந்த நேரத்திற்குள் நடந்துவிடும்?

 

வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. யுகமுடிவு நேரம் எனும் நிகழ்ச்சி கண்மூடித்திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் ஆற்றலுடையவன். (16:77)

 

18) நாம் நன்றி செலுத்துவற்காக நமக்கு அல்லாஹ் எவற்றையெல்லாம் தந்தான்?

 

நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான். (16:78)

 

19) அல்லாஹ் அவனது அருட்கொடுகளை நமக்கு ஏன் முழுமைப்படுத்தினான்?

 

நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான்.  (16:81)

 

20) வேதனைக்கு மேல் வேதனை யாருக்கு அதிகமாக்கப்படும்?

 

(நம்மை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர் குழப்பம் செய்து வந்ததன் காரணமாக வேதனைக்கு மேல் வேதனையை அவர்களுக்கு அதிகமாக்குவோம்.

(16:88)

 

 

 

 

21) யூசுப் நபிக்கு எதைவிடச் சிறைச்சாலை விருப்பமானதாக இருந்தது?

 

“என் இறைவா! இப்பெண்கள் (விபச்சாரத்திற்கு) அழைப்பதை விட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானது. ( 12:33)

 

22) அல்லாஹ்வை நோக்கி மக்களை அழைக்க நமக்கு என்ன வேண்டும்?

 

“இதுவே எனது பாதை. நானும், என்னைப் பின்பற்றியோரும் தெளிவான விளக்கத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வை நோக்கி அழைக்கிறோம்.  (12:108)

 

23) யாருடைய கழுத்தில் விலங்கு மாட்டப்பட்டுள்ளது?

 

நீர் ஆச்சரியப்பட்டால் “நாங்கள் மண்ணாக ஆன பின்பும் புதுப் படைப்பாக ஆவோமா?’ என்று அவர்கள்கூறுவது (இதைவிட) ஆச்சரியமாகவுள்ளது. அவர்கள் தான் தமது

இறைவனை ஏற்க மறுத்தவர்கள். அவர்களின்கழுத்துக்களில் தான் விலங்குகள் உள்ளன. அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாகஇருப்பார்கள். (13:5)

 

24) மின்னலும் மேகமும் எதற்காக உருவாக்கப்ட்டது?

 

அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துவதாக மின்னலை அவனே உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான். (13:12)

 

25) இணைகற்பிப்போர் நம்மிடம் அடைக்கலம் கேட்டால் நாம் ஏன் அடைக்கலம்

கொடுக்கனும்?

 

இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர்

அவருக்கு ப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத

கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.

 

26) குர்ஆனை உண்மை என்று அறிந்தவர் தீமையை எவ்வாறு தடுப்பார்?

 

நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு

உண்டு. (13:22)

 

27) நரகவாசிகளுக்கு நரகத்தில் எந்த திசையிலிருந்து மரணம் வரும்?

அதை (சீழ் நீரை) மிடறுமிடறாக விழுங்குவான். அது அவனது தொண்டைக்குள் இறங்காது. ஒவ்வொருதிசையிலும் அவனுக்கு மரணம் வரும். ஆனால் அவன் மரணிக்க மாட்டான். இதற்கு மேல் கடுமையானவேதனையும் உள்ளது. ( 14:17)

 

28) முஃமின்களை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் எதன் மூலம்

நிலைப்படுத்துகிறான்?

 

நம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக

வாழ்க்கையிலும், மறுமையிலும்அல்லாஹ் நிலைப்படுத்துகிறான். அநீதி இழைத்தோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். அல்லாஹ் நாடியதைச் செய்வான். (14:27)

 

29) ஜின்கள் எப்படிப்பட்ட நெருப்பால் படைக்கப்பட்டார்கள்?

 

கடுமையான வெப்பமுடைய நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம். (15:27)

 

30) சொர்க்கத்திற்கு பகரமாக அல்லாஹ் முஃமின்களிடம் எதை வாங்குகிறான்?

 

நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும்

சொர்க்கத்திற்குப் பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான்.  (9:111)

 

31) யாருடைய முகங்களில் இருளும் இழிவும் ஏற்படாது?

 

நன்மை செய்தோருக்கு நன்மையும்,(அதை விட) அதிகமாகவும் உண்டு. அவர்களின்

முகங்களில் இருளோ, இழிவோ ஏற்படாது. அவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (10:26)

 

32) செவிமடுக்கும் சமுதாயத்திற்கு எதில் சான்று உள்ளது?

 

இரவை நீங்கள் அமைதி பெறுவதற்காகவும், பகலை வெளிச்சமுடையதாகவும் அவனே அமைத்தான். செவிமடுக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன. (10:67)

 

33) இஸ்ராயீலின் மக்கள் எது வரையிலும் முரண்படவில்லை?

 

இஸ்ராயீலின் மக்களைச் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தினோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். அறிவு அவர்களிடம் வரும் வரை அவர்கள்

முரண்படவில்லை. உமது இறைவன் கியாமத் நாளில் அவர்கள்முரண்பட்டதில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான். (10:93)

 

34) பெருமிதமும் கர்வமும் கொள்ளாதவர்கள் யார்?

அவன் பெருமிதமும், கர்வமும் கொள்கிறான். (துன்பங்களை) சகித்துக் கொண்டு நல்லறங்கள் புரிவோரைத்  தவிர. அவர்களுக்கே

மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.  (11:11)

 

35) நபியின் உள்ளம் எதனால் சங்கடப்படும்?

 

“இவருக்கு ஒரு புதையல் அருளப்பட வேண்டாமா? அல்லது இவருடன் ஒரு வானவர்

வர வேண்டாமா?” என்றுஅவர்கள் கூறுவதால் (முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படும் செய்தியில் சிலவற்றை நீர் விட்டு விடக் கூடும். உமது உள்ளம் சங்கடப்படக் கூடும். நீர்

எச்சரிப்பவரே. அல்லாஹ்வே எல்லாப் பொருளுக்கும் பொறுப்பாளன். (11:12)

 

36) வலிமைக்கு மேல் வலிமை பெற என்ன செய்ய வேண்டும்?

 

“என் சமுதாயமே! உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! அவனை நோக்கித் திரும்புங்கள்! அவன் உங்களுக்கு, தொடர்ந்து வானத்தைப் பொழியச் செய்வான்.

வலிமைக்கு மேல் வலிமையை உங்களுக்கு அதிகமாக்குவான். குற்றவாளிகளாகி

புறக்கணிக்காதீர்கள்!” (எனவும் கூறினார்.) (11:52)

 

37) இறைவனிடம் அடையாளமிப்பட்டது எது?

 

(லூத் நபி வாழ்ந்த சமுதாயத்தினர் அழிக்கப்பட்ட ஊர்) உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் அநீதி இழைத்த இவர்களுக்குத் தொலைவில் இல்லை.  (11:83)

 

38) மறுமையில் ஃபிர்அவ்னின் சபையினரை நரகத்திற்கு யார் அழைத்து செல்வார்?

 

கியாமத் நாளில் அவன் தனது சமுதாயத்திற்கு முன்னால் வருவான்.   அழைத்துச்

செல்வான். சென்றடையும் அந்த இடம் மிகவும் கெட்டது. (11:98)

 

39) தீமைகளை அழிக்கக்கூடியது எது?

 

பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக!

நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை.

(1:114)

 

40) நாம் என்ன செய்தால் அல்லாஹ் நமக்கு தெளிவை வழங்குவான்?

 

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால் உங்களுக்குத் தெளிவை அவன் வழங்குவான். (8:29)

 

41) நம்முடைய பலம் எப்போது அழிந்து போகும்?

 

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும்.

(8:46)

 

42) அசுத்தமானவர்கள் யார்?

 

இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. (9:28)

 

43) திருப்திபடுத்த தகுதியானவர்கள் யார்?

 

உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்கின்றனர். அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வும், அவனது தூதருமே திருப்திப்படுத்தத் தகுதிபடைத்தவர்கள்.  (9:62)

 

44) நாம் நல்லுணர்வை எதன் மூலம் பெற முடியும்?

 

நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். (16:90)

 

45) இரண்டு தடவை தண்டனைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் யார்?

 

உங்களைச் சுற்றியுள்ள கிராமவாசிகளிலும், மதீனாவாசிகளிலும் நயவஞ்சகர்கள் உள்ளனர். அவர்கள் நயவஞ்சகத்தில் நிலைத்துள்ளனர். (முஹம்மதே!) அவர்களை நீர் அறிய

மாட்டீர்! நாமே அவர்களை அறிவோம். அவர்களை இரண்டு தடவை தண்டிப்போம். பின்னர் அவர்கள் கடும் வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். (9:101)

 

46) யாரை அல்லாஹ் மன்னிக்கக்கூடும்?

 

சிலர் தமது பாவங்களை ஒப்புக் கொள்கின்றனர். நல்ல செயலை, மற்றொரு தீய செயலுடன் கலந்துவிட்டனர். அவர்களை அல்லாஹ் மன்னிக்கக் கூடும். (9:102)

 

47) நமது உள்ளத்தை எது பலப்படுத்தும்?

 

தூதர்களின் வரலாற்றில் உமது உள்ளத்தைப் பலப்படுத்தும் அனைத்தையும் உமக்குக் கூறுகிறோம். உண்மையும், அறிவுரையும், நம்பிக்கை கொண்டோருக்குப் போதனையும் இதில் உமக்கு வந்துள்ளது. (11:120)

 

 

48) சனிக்கிழமை மீன் பிடிக்க சென்றவர்களுக்கு அறிவுரை கூறியவர்கள் ஏன்

அறிவுரை கூறினார்கள்?

 

“அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர்.

 

அதற்கவர்கள் “உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு

அறிவுரை கூறுகிறோம்)” எனக்கூறினர். (7:164)

 

49) யாரை நாய்க்கு உதாரணமாக சொல்லிக் காட்டுகிறான்?

 

நாம் நாடியிருந்தால் அதன் (குர்ஆன் வசனங்கள) மூலம் அவனை உயர்த்தியிருப்போம்மாறாக அவன் இவ்வுலக வாழ்வை நோக்கிச் சாய்ந்து விட்டான். தனது மனோ

இச்சையைப் பின்பற்றினான். அவனுக்குரிய உதாரணம் நாயாகும். (7:176)

 

50) கால்நடைகளை விட வழி கெட்டவர்கள் யார்?

 

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம்.

அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து

கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள்

கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விட

வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.  (7:179)

 

51) அல்லாஹ் துணைவியை எதற்கு படைத்தான்?

 

“அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மனஅமைதி பெறுவதற்காகப் படைத்தான்.  (7:189)

 

52) ஷைத்தானின் தாக்கத்தை யார் சுதாரிப்பார்கள்?

 

(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள்.  (7:201)

 

53) அல்லாஹ் எதை சீர்படுத்திக் கொள்ளுமாறு கட்டளையிடுகிறான்?

 

உங்களுக்கிடையே உள்ள உறவுகளைச் சீர்படுத்திக் கொள்ளுங்கள்! (8:1)

 

54) பத்ரு யுத்தத்தில் அல்லாஹ் ஏன் மழையை பொழியச் செய்தான்?

 

தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும், உங்களை விட்டும் ஷைத்தானின்

அசுத்தத்தைப் போக்கிடவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தவும், உங்கள்

பாதங்களை அதன் மூலம் உறுதிப்படுத்தவுமே வானத்திலிருந்து தண்ணீரை

உங்கள் மீது இறக்கினான். (8:11)

 

55) மக்களிடம் நன்மை இருப்பதை அறிந்தால் அல்லாஹ் என்ன செய்வான்?

 

அவர்களிடம் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்திருந்தால் அவர்களைச்

செவியேற்கச் செய்திருப்பான்.   (8:23)

 

 

56) ஆதம் நபியிடமும் ஹவ்வா (அலை)யிடமும் ஷைத்தான் செய்த சத்தியம் என்ன?

 

“நான் உங்கள் இருவருக்கும் நலம் நாடுபவனே” என்று அவர்களிடம் சத்தியம்

செய்தான். (7:21)

 

57) வானத்தின் வாசல்கள் யாருக்காக திறக்கப்படாது?

 

நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படமாட்டாது. (7:40)

 

58) சொர்க்க நரகத்தில் அறிவிப்பாளர் உண்டா?

 

“எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை உறுதியாகப் பெற்றுக் கொண்டோம்.

உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உறுதியாகப் பெற்றுக்

கொண்டீர்களா?” என்று சொர்க்கவாசிகள் நரகவாசிகளிடம் கேட்பார்கள்.

அவர்கள் “ஆம்’ என்பர். “அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் உள்ளது”

என்று அவர்களுக்கிடையே அறிவிப்பாளர் அறிவிப்பார். (7:44)

 

59) குருட்டுக் கூட்டமாக இருந்த சமுதாயம் எது?

 

ஆயினும் அவரைப் (நூஹ் நபியை) பொய்யரெனக் கருதினர். எனவே அவரையும்,

அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம். நமது வசனங்களைப்

பொய்யெனக் கருதியோரை மூழ்கடித்தோம். அவர்கள் குருட்டுக் கூட்டமாகவே

இருந்தனர்.  (7:64)

 

60) அல்லாஹ்வின் வேதனை எந்த நேரங்களில் வரும்?

 

அவர்கள் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் போது நமது வேதனை அவர்களுக்கு

வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா?

 

அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது முற்பகலில் நமது வேதனை

அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா?  (7:98)

 

61) சூனியக்காரர்கள் இஸ்லாத்தை ஏற்ற போது அல்லாஹ்விடத்தில் செய்த

பிரார்த்தனை என்ன?

 

“எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை

முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!” என்றனர்.  (7:126)

 

62) இஸ்ராயீலின் மக்கள் பொறுமையை மேற் கொண்டதால் இறைவன் வழங்கிய பரிசு

என்ன?

 

பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை, நாம் பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப்பகுதிகளுக்கு உரிமையாளர்களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள்

விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. (7:137)

 

63) மூஸா நபியின் சமுதாயம் காளை மாட்டை வணங்கியதற்கு பிறகு

அல்லாஹ்விடத்தில் செய்த பிரார்தனை என்ன?

 

தாங்கள் வழிதவறி விட்டதை உணர்ந்து அவர்கள் கைசேதப்பட்ட போது “எங்கள் இறைவன் எங்களுக்கு அருள்புரிந்து, எங்களை மன்னிக்காவிட்டால் நட்டமடைந்தோராவோம்” என்றனர். (7:149)

 

64) மூஸா நபி தூர் மலையிலிருந்து கொண்டு வந்த பலகையில் என்ன

எழுதி இருந்தது?

 

மூஸாவுக்குக் கோபம் தணிந்த போது பலகைகளை எடுத்தார். அதன் எழுத்துக்களில்

இறைவனை அஞ்சுவோருக்கு அருளும், நேர்வழியும் இருந்தது. (7:154)

 

65) குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றப்பட்டவர்களை அல்லாஹ்

ஏன் சோதித்தான்?

 

கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்

கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின்

மேல்மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில்

அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால்

இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.(7:163)

 

66) ஒவ்வொரு செய்திக்கும் எது உள்ளது?

 

ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்வதற்கான நேரம் உள்ளது. பின்னர் அறிந்து கொள்வீர்கள்!

(6:67)

 

67) உறுதியான நம்பிக்கையாளராக இப்றாகிம் நபியை அல்லாஹ் எதன் மூலம்

மாற்றினான்?

 

உறுதியான நம்பிக்கையாளராக இப்ராஹீம் ஆவதற்காக அவருக்கு வானங்கள் மற்றும் பூமியின் சான்றுகளை இவ்வாறே காட்டினோம். (6:75)

 

68) இறைவன் எதை கொண்டு அனைத்து பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான்?

 

என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான்.

உணர மாட்டீர்களா?”  (6:80)

 

69) அல்லாஹ்விற்கு இணை கற்பித்தவைகளை நான் எப்படி அஞ்ச முடியும் என்று

எதை வைத்து இப்றாகிம் நபி கூறினார்கள்?

 

“அல்லாஹ் உங்களுக்குச் சான்றளிக்காதவைகளை அவனுக்கு இணையாக்குவதற்கு

நீங்கள் அஞ்சாதபோது நீங்கள் இணை கற்பித்தவைகளுக்கு நான் எவ்வாறு

அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க அதிகத் தகுதி

படைத்தவர் யார்?”  (என்றும் அவர் கூறினார்.) (6:81)

 

70) அச்சமில்லா நிலை யாருக்கு உள்ளது?

 

நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல்

இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றோர். ( 6:82)

 

 

70) வேதக்காரர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய விதத்தில் மதிக்கவில்லை என்று

அல்லாஹ் கூற காரணம்என்ன?

 

“எந்த மனிதருக்கும் அல்லாஹ் எதையும் அருளவில்லை” என்று அவர்கள் கூறியதால் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் அவர்கள் மதிக்கவில்லை. (6:91)

 

72) எதை கவனித்தால் நன்மையாக ஆகும்?

 

“உங்கள் இறைவனிடமிருந்து சான்றுகள் உங்களிடம் வந்து விட்டன. அதைக்

கவனிப்போருக்கு அதுநன்மையாகும். அதைப் பார்க்காதிருப்போருக்கு அது கேடாகும். நான் உங்களுக்குக் காவலன் அல்லன்” (என்றுகூறுவீராக)  (6:104)

 

73) மனித ஜின் ஷைத்தான்கள் ஏமாற்றுவதற்காக என்ன செய்வார்கள்?

 

இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை

அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். (6:112)

 

74) அல்லாஹ்வின் வார்த்தைகள் எதனால் நிறைந்துள்ளது?

 

உமது இறைவனின் வார்த்தை உண்மையாலும், நீதியாலும் நிறைந்துள்ளது. (6:115)

 

75) முழுமையான சான்று யாருக்குரியது?

 

“முழுமையான சான்று அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவீராக! அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான். (6:149)

 

76) சத்தியங்களை முறித்தால் அதற்கான பரிகாரம் என்ன?

 

அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும்

நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது

அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே.

 

(இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்.

நீங்கள் சத்தியம் செய்(துமுறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே.

உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்!  (5:89)

 

 

77) மிகப் பெரும் சாட்சியம் எது?

 

“மிகப் பெரும் சாட்சியம் எது?” என்று (முஹம்மதே!) கேட்பீராக! “எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே சாட்சியாளன். (6:19)

 

78) சுமப்பதில் மிகவும் கெட்டது எது?

 

தமது முதுகுகளில் அவர்கள் பாவங்களைச் சுமப்பார்கள். கவனத்தில் கொள்க!

அவர்கள் சுமப்பது மிகக்கெட்டது. (6:31)

 

கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்)

கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பதுமிகவும் கெட்டது. (16:25)

 

79) இறைவனை அஞ்சுவோருக்கு எது சிறந்தது?

 

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வேசிறந்தது.

விளங்க மாட்டீர்களா?  (6:32)

 

80) யாரால் பதிலளிக்க முடியும்?

 

செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமேஅவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். (6:36)

 

81) மனிதர்களைப் போன்று பறவைகளிலும் சமுதாயங்கள் உள்ளனவா?

 

பூமியில் வாழும் எந்த உயிரினமானாலும், தமது இறக்கைகளால் பறந்து செல்லும்

எந்தப் பறவையானாலும் அவை உங்களைப் போன்ற சமுதாயங்களே. (6:38)

 

82) முன் சென்ற சமுதாயங்கள் இறைனுக்கு பணிவதற்காக இறைவன் என்ன

செய்தான்?

 

(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்கும் தூதர்களை அனுப்பினோம்.

அவர்கள் பணிவதற்காக அவர்களை வறுமையாலும், நோயாலும் தண்டித்தோம். (6:42)

 

83) யாருக்கு அனைத்து பொருட்களின் வாசல்களும் திறக்கப்பட்டன?

 

அவர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது, அவர்களுக்கு

அனைத்துப் பொருட்களின்வாசல்களையும் திறந்து விட்டோம். அவர்களுக்கு

வழங்கப்பட்டதில் மகிழ்ச்சியடைந்திருந்த போது திடீரென அவர்களைத் தண்டித்தோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தனர். (6:44)

 

84) யாரை விரட்டக்கூடாது என்று இறைவன் கூறுகிறான்?

 

தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்!

 

அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப்

பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை

நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்! (6:52)

 

85) அல்லாஹ் பகலில் நம்மை ஏன் எழுப்புகிறான்?

 

அவனே இரவில் உங்களைக் கைப்பற்றுகிறான். பகலில் நீங்கள் செய்வதை அறிகிறான்.

 

நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவு செய்யப்படுவதற்காக பகலில் உங்களை

எழுப்புகிறான். உங்கள் மீளுதல் அவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது

பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.  (6:60)

 

86) அல்லாஹ்வை குறை கூற மனிதர்களுக்கு எந்த வாய்பும் கிடைக்கக் கூடாது

என்பதற்காக அல்லாஹ் என்ன செய்தான்?

 

தூதர்களை அனுப்பிய பின்னர் அல்லாஹ்வைக் குறை கூற மனிதர்களுக்கு எந்தச்

சான்றும் இருக்கக் கூடாது என்பதற்காக நற்செய்தி கூறி, எச்சரிக்கும் தூதர்களை

(அவன் அனுப்பினான்.) அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும்

இருக்கிறான்.  (4:165)

 

87) தூதர்களின் வருகை நின்று போயிருந்த காலத்தில் வேதக்காரர்களுக்கு அல்லாஹ் யாரை தூதராக அனுப்பினான்?

 

தூதர்களின் வருகை நின்று போயிருந்த காலகட்டத்தில் நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களுக்குத் தெளிவுபடுத்திட உங்களிடம் வந்து விட்டார். நற்செய்தி கூறுபவரும்,

எச்சரிக்கை செய்பவரும் உங்களிடம்வந்து விட்டார். (5:19)

 

88) அல்லாஹ் யாரிடமிருந்து வணக்கத்தை ஏற்றுக் கொள்வான்?

 

“(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்” என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.  (5:27)

 

89) நமக்கு அல்லாஹ் தந்திருப்பவற்றிலிருந்து நம்மை சோதிப்பதற்காக அல்லாஹ்

நம்மை என்ன செய்தான்?

 

அல்லாஹ் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக்கியிருப்பான். எனினும்

உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக

(அவ்வாறு ஆக்கிடவில்லை.) (5:48)

 

90) இஸ்லாத்தை விட்டு மாறியோருக்காக அல்லாஹ் வேறொரு சமுதாயத்தை

கொண்டு வந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்?

 

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு

மாறிவிட்டால் அல்லாஹ் பின்னர் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான்.

அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள்.

 

அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏகஇறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும்இருப்பார்கள்.

 

அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச்

சொல்லுக்கு அவர்கள் அஞ்சமாட்டார்கள். (5:54)

 

91) அல்லாஹ் முஹம்மது நபியை யாரிடமிருந்து காப்பாற்றுவதாக வாக்களிக்கிறான்?

 

அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (5:67)

 

92) இவ்வுலகில் சோதனையே ஏற்படாது என்று எண்ணியவர்களை அல்லாஹ் என்ன

செய்தான்?

 

எந்தச் சோதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணி விட்டனர்.

இதனால், குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆனார்கள். (5:71)

 

93) மர்யமை அல்லாஹ் எவ்வாறு புகழ்கிறான்?

 

அவரது (ஈஸாவின்) தாய் உண்மையாளர். (5:75)

 

94) நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களில் கடுமையான பகைவர்களாகவும்

நெருக்கமான நேசர்களாகவும் யார் இருக்கிறார்கள்?

 

நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக

யூதர்களையும், இணைகற்பிப்போரையும் (முஹம்மதே!) நீர் காண்பீர்!

 

“நாங்கள் கிறித்தவர்கள்” எனக் கூறியோர் நம்பிக்கை கொண்டோருக்கு மிக

நெருக்கமான நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர்! அவர்களில்

பாதிரிகளும், துறவிகளும் இருப்பதும், அவர்கள் ஆணவம் கொள்ளாது இருப்பதுமே இதற்குக் காரணம். (5:82)

 

95) கிறிஸ்தவர்கள் குர்ஆனை செவுயுற்று உண்மையை அறிந்து கொண்டால் என்ன

செய்வார்கள்?

 

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது

உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை

நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று

கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர். (5:83)

 

96) மிகச்சிறந்த நண்பர்கள் யார்?

 

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர்,

அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்

தியாகிகளுடனும் நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.

(4:69)

 

97) ஷைத்தானின் சூழ்ச்சி எப்படிப்ட்டது?

 

ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாக உள்ளது.  (4:76)

 

98) பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி கிடைத்தால் என்ன செய்ய வேண்டும்?

 

பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதைப்

பரப்புகின்றனர். அதை இத்தூதரிடமும், (முஹம்மதிடமும்) தங்களில்

அதிகாரமுள்ளோரிடமும் கொண்டு சென்றிருந்தால் ஆய்வுசெய்வோர்

அதை அறிந்து கொள்வார்கள். (4:83)

 

99) நமக்கு யாரேனும் வாழ்த்து சொன்னால் நாம் என்ன செய்ய வேண்டும்?

 

உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது

அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும்

கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.  (4:86)

 

100) அல்லாஹ்வை குறைவாக திக்ரு செய்பவர்கள் யார்?

 

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை

ஏமாற்றவுள்ளான்.அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும்,

மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை

நினைக்கின்றனர். (4:142)

 

101) தீய சொல்லை வெளிப்படையாக யார் கூறலாம்?

 

அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக்

கூறுவதை அல்லாஹ் விரும்பமாட்டான். (4:148)

 

102) பொறுமையாக இருப்பது யாருக்கு எளிது?

 

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும். (2:45)

 

103) அல்லாஹ் யூதர்களுக்கு தூய்மையானவற்றை ஏன் ஹராமாக்கினான்?

 

  • யூதர்கள்செய்த அநீதியின் காரணமாகவும்,

 

  • அல்லாஹ்வின்பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும்,

 

  • வட்டியைவிட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும்,

 

  • மக்களின்செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும்
  • அவர்களுக்குஅனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். (4:161)

 

104) அறிவாளிகள் அல்லாஹ்வை எவ்வாறு திக்ரு செய்வார்கள்?

 

அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள்.

(3:191)

 

105) அல்லாஹ்வின் விருந்து எது?

 

தமது இறைவனை அஞ்சியோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின்

விருந்து. அல்லாஹ்விடம் இருப்பவை நல்லோருக்குச் சிறந்தது.

 

திருக்குர்ஆன்  3:198

 

106) நம்பிக்கை கொண்டோர் சகிப்புத்தன்மையில் எப்படி இருக்க வேண்டும்?

 

நம்பிக்கை கொண்டோரே! சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்குளை) மிகைத்துவிடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (3:200)

 

107) நாம் நம்முடைய மனைவியை வெறுத்தால் அதில் அல்லாஹ் எதை

வைத்திருப்பான்?

 

அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை

வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை

அமைத்திருப்பான். (4:19)

 

108) திருமணம் செய்பவர் எப்படிப்பட்ட உடன்படிக்கையை எடுக்கிறார்?

 

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர்

மற்றவருடன் இரண்டறக் கலந்துவிட்ட நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக்

கொள்ள முடியும்? (4:21)

 

109) அல்லாஹ் நமக்கு ஏன் சட்டங்களை எளிதாக்க விரும்புகிறான்?

 

அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான். (ஏனெனில்) மனிதன் பலவீனனாகப்படைக்கப்பட்டுள்ளான். (4:28)

 

110) நல்ல பெண்கள் யார்?

 

சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆவர்.

 

கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை

(கற்பை) காத்துக்கொள்வோருமே நல்ல பெண்கள். (4:34)

 

111) மனைவியுடன் சண்டை வரும் என நினைத்தால் என்ன செய்ய வேண்டும்?

 

பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால்

 

  • அவர்களுக்குஅறிவுரை கூறுங்கள்!
  • அவர்களைஅடியுங்கள்!

 

அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.(4:34)

 

112) ஷைத்தானின் நண்பர்கள் யார்?

 

  • அல்லாஹ்வையும்,இறுதி நாளையும் நம்பாது
  • மக்கள்மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைுத்தானின்
  • நண்பர்கள்).

 

  • யாருக்குஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். (4:38)

 

113) மிகச்சிறந்த நிழலில் யார் நுழைவார்?

 

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச்

செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும்

நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர்.

 

மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம். (4:57)

 

 

114) அருள் எங்கே உள்ளது?

 

“அருள், அல்லாஹ்வின் கையில் உள்ளது;

தான் நாடியோருக்கு அதைக் கொடுப்பான்’ என்றும் கூறுவீராக!  (3:73)

 

115) நாம் எப்போது நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டோம்?

 

நீங்கள் விரும்புவதிலிருந்து (நல்வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். (3:92)

 

116) பாக்கியம் பொருந்தியதாக ஆக்கப்பட்ட பள்ளிவாசல் எது?

 

அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல்ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (3:96)

 

117) எப்படிப்பட்ட சமுதாயம் நம்மிடம் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்?

 

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம்

உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (3:104)

 

118) வேதமுடையோரில் சிலர் எதை செய்ததால் நேரான சமுதாயமாக மாறினார்கள்?

 

அவர்கள் அனைவரும் சமமாக இல்லை. வேதமுடையோரில்நேரான சமுதாயமும்

உள்ளது.

 

  • அவர்கள்இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகின்றனர்;

 

  • ஸஜ்தாச்செய்கின்றனர். (3:1130

 

119) காபிர்களின் சூழ்ச்சி நம்மை ஒன்றும் செய்யாமல் இருக்க நாம் என் செய்ய

வேண்டும்?

 

  • நீங்கள்சகித்துக் கொண்டு

 

  • (இறைவனை)அஞ்சினால்

 

அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாது.

அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன். (3:120)

 

120) அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோர் எங்கே உயிருடன் உள்ளனர்?

 

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்!

மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர். உணவளிக்கப்படுகின்றனர்.

(3:169)

 

121) காபிர்களை அல்லாஹ் உடனடியாக தண்டிக்காமல் ஏன் விட்டு வைத்திருக்கிறான்?

 

“(நம்மை) மறுப்போரை நாம் விட்டு வைத்திருப்பது அவர்களுக்கு நல்லது’ என்று அவர்கள் நினைக்க வேண்டாம். பாவத்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்காகவே விட்டு வைத்துள்ளோம். இழிவுபடுத்தும் வேதனை அவர்களுக்கு உண்டு. (3:1780

 

122) கஞ்சத்தனம் செய்வோருக்கான தண்டனை என்ன?

 

அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து

நெரிக்கப்படுவார்கள். (3:180)

 

123) உறுதிமிக்க காரியங்கள் எது?

 

  • நீங்கள்சகித்துக் கொண்டு
  • (இறைவனை)அஞ்சினால்

 

அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும். (3:186)

 

  • என்அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு!
  • நன்மையைஏவு! தீமையைத் தடு!
  • உனக்குஏற்படுவதைச் சகித்துக் கொள்!

 

அது உறுதிமிக்க காரியமாகும். (31:17)

 

யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ

 

அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும். (42:43)

 

 

www.eagathuvam.com

 

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *