திண்ணைத் தோழர்களின் நிலை
—————————————————
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
திண்ணைத் தோழர்களில் எழுபது நபர்களை பார்த்திருக்கிறேன். அவர்களில் எவருக்குமே மேலாடை இருந்ததில்லை. அவர்களில் சிலரிடம் வேட்டி மட்டும் இருந்தது.
(வேறுசிலரிடம்) தங்கள் கழுத்திலிருந்து கட்டிக் கொள்ளத்தக்க ஒரு போர்வை இருந்தது. (அவ்வாறு கட்டிக் கொள்ளும்போது) சிலரின் போர்வை கரண்டைக்கால் வரையும் இருக்கும்.
வேறு சிலரின் போர்வை கால்களில் பாதியளவு வரை இருக்கும். தங்களின் மறைவிடங்களைப் பிறர் பார்த்து விடலாகாது என்பதற்காகத் தம் கைகளால் துணியைச் சேர்த்துப் பிடித்துக் கொள்வார்கள்.
நூல் : புஹாரி 221
தன் உடலை மறைத்து கொள்வதற்கு மனிதனுக்கு ஆடை என்பது ஓர் அத்தியாவச தேவையாக உள்ளது. அந்த ஆடையும் இல்லாமல் இருக்கின்ற ஆடையினால் தங்கள் மறைவிடங்களைப் மறைத்து வாழ்ந்துது இருக்கிறார்கள் என்றால் திண்ணைத் தோழர்களின் தியாகம் எத்தகையது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
//பசியினால் மயங்கிவிழுந்த திண்ணை தோர்கள்.//
ஃபழாலா பின் உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தும் போது தொழுகையில் அவர்களோடு நின்ற ஆண்களில் சிலர் பசியின் காரணமாக (மயங்கி) விழுந்து விடுவார்கள்.
அவர்கள் தான் திண்ணை ஸஹாபாக்கள்.
அவர்கள் (மயங்கி விழுவதைப் பார்க்கும் கிராமவாசிகளில் சிலர் அவர்களின் நிலையை அறியாமல்) இவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள் என்று கூறுவார்கள்.
நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்து விட்டால் அவர்களை நோக்கித் திரும்பி அல்லாஹ்விடம் உங்களுக்குக் கிடைக்கவிருப்பதை நீங்கள் அறிந்தீர்கள் என்றால் உங்களுடைய ஏழ்மை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள் என்று கூறுவார்கள்.
நூல்: திர்மிதி 2291
பசியாலும் வறுமையாலும் திண்ணை தோழர்கள் வாழ்கை கழிந்தாலும் அப்படிப்பட்டசுழலிலும் அல்லாஹ் கடமையாக்கிய வணக்க வழிபாடுகளில் பேணுதலாக இருந்திருக்கிறார்கள்
அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக..!
————————
ஏகத்துவம்