தாயம் லூடோ விளையாட மார்க்கத்தில் தடையா ?
மனித உணர்வுகளை மதிக்க தெரிந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. ஏனென்றால் இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களையும் அகில உலகத்தையும் படைத்த இறைவனின் மார்க்கம். இறைவனுக்குத்தான் படைத்த மனிதனின் உணர்வுகள் பற்றி தெரியும். இஸ்லாம் விளையாட்டுகளை பொருத்த வரையில் அதிலேயே மூழ்கி கிடந்து அடிமையாகாமலும் அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுக்காத வகையிலும் மோசடி, சூதாட்டம் இல்லாமலும் உடல் ஆரோக்கி யத்தையும் சிந்தனையையும் சீர்படுத்தக் கூடிய விளையாட்டுகளை அனுமதிக்கவும் செய்து அதை தூண்டவும் செய்கிறது. இன்னும் இஸ்லாம் நம்முடைய உடம்பை பேணுவதையும் வலியுறுத்தியுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உன் உடம்புக்கும் கண்ணுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன.
அறி: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ்(ரலி),
நூல்: புகாரி 1975
இஸ்லாத்தில் மார்க்க வரையறைக்குட்டுபட்டு சந்தோஷமாக கொண்டாட வேண்டிய பண்டிகைகள் நோன்பு பெருநாள், ஹஜ் பெருநாள். இந்த நாட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளையாட்டுக்காக அல்லாஹ்வால் அருளப் பட்ட நாட்கள் என்றே கூறியுள்ளளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த காலகட்டத்தில் மதீனாவாசிகள் இரண்டு நாட்களை தேர்வு செய்து அதிலே விளையாடுபவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் இது என்ன நாட்கள் என்று கேட்டார்கள். அறி யாமைக் காலத்திலிருந்து இந்த இரண்டு நாட் களில்தான் விளையாடிகொண்டு வருகிறோம் என்று அவர்கள் சொன்னார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதற்கு பதிலாக நோன்பு பெருநாள் ஹஜ் பெருநாள் என்ற இரண்டு நாட்களை (விளையாடுவதற்காக) அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல் : அஹ்மத் 13131
இந்நாட்களில் நபி (ஸல்) அவர்கள் விளையாடுவதற்கு அனுமதி அளித்த தோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய மனைவியோடு சேர்ந்து அதை நீண்ட நேரம் வேடிக்கையும் பார்த்துள்ளார்கள்
தாயம் லூடோ விளையாட மார்க்கத்தில் தடையா ?
நர்தஷிர் என்பது தாயக்கட்டையை குறிக்குமா ?
https://m.facebook.com/story.php?story_fbid=271180703891185&id=707087352671774