தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுதுவிட்டு தவாஃபை ஆரம்பிக்கலாமா?
ஹரம் ஷரீஃபில் நுழைந்த பிறகு “தஹிய்யதுல் மஸ்ஜித்’ தொழுதுவிட்டு தவாஃபை ஆரம்பிக்கலாமா? அல்லது முதல் அமலே தவாஃபில் தான் ஆரம்பிக்க வேண்டுமா?
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இறையில்லம் கஅபாவுக்கு வந்(து தவாஃப் செய்)தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவில் “ஹஜருல் அஸ்வத்’ உள்ள மூலையில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 2334, 1603
நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் நுழைந்து தவாஃபைத் தான் துவக்கியுள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் நாம் தவாஃபைத் துவக்குவது தான் நபிவழியாகும்.