தமத்துவ்
மூன்று வகையில் ஹஜ் கடமையை நிறைவேற்றலாம். அதில் ஒரு வகை தமத்துவ் எனப்படும்.
ஹஜ்ஜுக்குச் செல்லும்போது உம்ராவுக்கு மட்டும் இஹ்ராம் அணிந்து உம்ராவை நிறைவேற்ற வேண்டும். உம்ராவை முடித்து விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டு மக்காவில் உள்ளூர்வாசியைப் போல் தங்கி இருந்து விட்டு ஹஜ்ஜுக்கான காலம் வந்த உடன் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டி ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். இதுவே தமத்துவ் எனப்படும்.