தக்பீர் எப்பது கூறுவது?
மினாவிலிருந்து அரஃபாவுக்குச் செல்லும் வழியில் தல்பியா கூறிக்கொண்டும், தக்பீர் கூறிக் கொண்டும் செல்லலாம்? இதில் ‘தக்பீர்’ என்பது ‘அல்லாஹு அக்பர்’ என்பது மட்டுமா? மற்றவர்கள் சொல்வதுபோல் கூடுதல் சிறப்பு வார்த்தைகள் எதுவும் ஹதீஸ்களில் உள்ளதா?
முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மினாவிலிருந்து அரஃபா நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நான் அனஸ் (ரலி) அவர்கüடம் தல்பியாச் சொல்வது குறித்து, “நீங்கள் (மினாவிலிருந்து அரஃபா போகும்போது) நபி (ஸல்) அவர்களுடன் எவ்வாறு செயல்பட்டு வந்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “தல்பியாச் சொல்பவர் தல்பியாச் சொல்வார். அது (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை; தக்பீர் சொல்பவர் தக்பீர் சொல்வார். அதுவும் (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை” என்று பதிலüத்தார்கள்.
நூல்: புகாரி 970
தக்பீர் என்றால் அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான்.