ஜின்களை விலங்குகளால் பார்க்க முடியும்
ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தானை பார்க்கும் ஆற்றலை அல்லாஹ் விலங்குகளுக்கு வழங்கியுள்ளான். இதை பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன.
(அதனால் தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கின்றது. (அதனால் தான் கத்துகின்றது.)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (3303)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் இரவில் நாய் உளையிடுவதையும் கழுதை கத்துவதையும் செவியுற்றால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடுங்கள். ஏனென்றால் அவைகள் உங்களால் பார்க்க முடியாத (தீய)வற்றை பார்க்கின்றன.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : அபூதாவுத் (4439)
மேற்கண்ட செய்தி ஜின்களை மனிதர்களால் பார்க்க முடியாது என்று கூறுவதுடன் விலங்குளால் பார்கக் முடியும் என்ற கருத்தையும் தருகிறது.