ஜன்னத்துல் பகீஃயில் நபிகள் நாயகம்…
அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நாள்இரவு இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்களை படுக்கையில்காணவில்லை. அவர்களைத் தேடி) வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் ஜன்னத்துல் பகீஃ அடக்கஸ்தலத்திலிருந்தார்கள். (என்னைக் கண்டவுடன்) சொன்னார்கள். (ஆயிஷாவே!) இறைவனும் இறைத்தூதரும் உனக்கு அநீதமிழைத்து விடுவார்கள் எனபயந்து போனாயா?
நான் கூறினேன் : (அவ்வாறெல்லாமில்லை) உங்கள் துணைவியர் ஒருவரிடம்வந்திருப்பீர்கள் என்று தான் கருதினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு‚அலைஹி வஸல்லம்) அவர்கள் மொழிந்தார்கள்: தின்னமாக இறைவன் ஷஃபான்மாதத்தின் 15 ம் இரவின் போது முதல்வானத்திற்கு இறங்கி வருகிறான். மேலும் கல்ப்கூட்டத்தாரின் ஆடுகளின் எண்ணிக்கையைவிட அதிக அளவில் அடியார்களைமன்னிக்கிறான்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா)
நூற்கள் : அஹ்மத் எண் : 26060, திர்மிதி எண் : 739, இப்னுமாஜா எண்: 1389 இப்னுஅபீஷய்பா எண் : 29858
இவர்கள் எடுத்துரைத்த இந்த செய்தி இமாம் புகாரி அவர்களால் பலவீனமானது என்றுஆதாரத்துடன் இடித்துரைக்கப்பட்ட செய்தியாகும். புகாரி இமாமின் மாணவரான இமாம்திர்மிதீ அவர்கள் இந்த செய்தியைப் பற்றி புகாரி இமாமிடம் கேட்டபோது இதுஆதாரமற்றது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.