சோதனைக் குழாய் குழந்தை பெற அனுமதி உண்டா?

சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் முறைக்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா?

முந்தைய காலத்தில் தாய் அல்லாத மற்ற பெண்கள், குழந்தைக்குப் பால் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. பால் கொடுப்பதன் மூலம் அந்தப் பெண் தாய் அந்தஸ்தை அடைந்தாலும், தந்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த உறவும் ஏற்படுவதில்லை. பால்குடி முறையும், சோதனைக் குழாய் முறையும் ஒன்று போல் தோன்றுகின்றதே! விளக்கவும்.

சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறுவதில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன.

1- கணவனின் உயிரணுவை எடுத்து, மனைவியின் கரு முட்டையுடன் சேர்த்து சோதனைக் குழாயில் வளர்த்து அதை மனைவியின் கருவறையில் செலுத்துவது ஒரு முறையாகும்.

2- கணவன் அல்லாத வேறொரு ஆணிடமிருந்து உயிரணுவை எடுத்து அதை மனைவியின் கரு முட்டையைச் சேர்த்து குழாயில் வளர்த்து மனைவியின் கருவறையில் செலுத்தி குழந்தை பெற வைப்பது மற்றொரு முறையாகும்.

3- கணவன் அல்லாத இன்னொரு ஆணின் உயிரணுவை இன்னொரு பெண்ணின் சினை முட்டையுடன் சேர்த்து குழாயில் வளர்த்து ஒரு பெண்ணின் கருவறையில் செலுத்துவது

இவற்றில் முதலாவது வழிமுறைக்கு மட்டுமே மார்க்கத்தில் அனுமதி உள்ளது.

உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!

திருக்குர்ஆன் 2:223

உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள்’ என்ற சொற்றொடர் மூலம் கணவனின் உயிரணுவை எடுத்து செயற்கை முறையில் மனைவிக்குச் செலுத்தலாம் என்றும், கணவன் அல்லாத மற்றவர்களின் உயிரணுவை எடுத்து இவ்வாறு செய்வது கூடாது என்றும் விளங்கலாம்.

பால்குடித் தாய் முறை என்பது மார்க்கம் அனுமதித்த ஒன்றாகும். கருவறையில் அடுத்த ஆணின் கருவைச் சுமப்பதற்கு மார்க்கம் அனுமதிக்கவில்லை. எனவே இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து மார்க்கச் சட்டத்தைத் தீர்மானிக்கக் கூடாது.
——————
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *