நார்வே நாட்டிலுள்ள திபெட் ஜெபர்ஜன்என்ற இடத்தில் ஆண்டிற்கு ஒரு முறைதொடர்ந்து 105 நாட்கள் சூரியன்மறையாமல் பகலாகவே இருக்கும். ‎இரவே கிடையாது. அங்குஐந்து நேரத் தொழுகைகளை எவ்வாறுதொழுவது? இந்தக் கேள்விக்கு வேறொருமாதப் பத்திரிகையில் பதில் கூறும்போது, லுஹர், அஸர் மட்டுமே அங்குகடமை என்றும் சுபுஹ், மக்ரிப், இஷாதொழுகைகளைத் தொழவேண்டியதில்லை என்றும்கூறியுள்ளார்கள். ஆனால் தஜ்ஜால்சம்பந்தப்பட்ட ஹதீஸில் இது போன்றகட்டத்தில் தொழுகையைக் கணித்துத்தொழுமாறு கூறப்பட்டுள்ளதே! ‎விளக்கவும்.‎

குர்ஆன் ஹதீஸ் பற்றிய ஞானம் ‎இல்லாததால், “கடமையான ‎தொழுகைகளைத் தொழ ‎வேண்டியதில்லை’ என்ற தவறான ‎தீர்ப்பை அந்தப் பத்திரிகையில் ‎கூறியுள்ளார்கள். குர்ஆன் ஹதீஸ் ‎தேவையில்லை, மத்ஹபுகள் கூறும் ‎தீர்ப்பைத் தான் நாங்கள் பின்பற்றுவோம் ‎என்று கூறுவதால் ஏற்படும் மிக ‎மோசமான விளைவு இது! மத்ஹபுகளைப் ‎பின்பற்றுவது தவறான கொள்கை ‎என்பதற்கு இது சிறந்த எடுத்துக் காட்டு!‎

மத்ஹபுகளைப் பொறுத்த வரை ‎இன்றைய நவீன யுகத்தில் ஏற்படும் ‎பிரச்சனைகளுக்கு அவற்றின் மூலம் தீர்வு ‎சொல்ல இயலாது. இந்தக் காலத்தில் ‎ஏற்படும் பிரச்சனையை அப்போதே ‎சிந்தித்து,தீர்வு சொல்வது ‎சாத்தியமில்லை.‎

ஆனால் குர்ஆன் ஹதீஸ் எக்காலத்திற்கும் ‎ஏற்றவை! மனிதனைப் படைத்த ‎அல்லாஹ்வினாலும், மனித ‎சமுதாயத்திற்கு வழிகாட்டுவதற்காக ‎அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் ‎‎(ஸல்) அவர்களாலும் சொல்லப்பட்ட ‎செய்திகள் அவை என்பதால் இறுதி நாள் ‎வரை ஏற்படும் எல்லாப் ‎பிரச்சனைகளுக்கும் அவற்றில் நிச்சயமாக ‎தீர்வு இருக்கும்! அவற்றை ஆய்வு ‎செய்தால் அந்தத் தீர்வை நாம் அடைய ‎முடியும்.‎

‎”இரவில் சூரியன் உதிக்கும் நாடு’ என்று ‎அழைக்கப்படும் நார்வே நாட்டைப் ‎பற்றியோ அல்லது இது போன்ற ஏனைய ‎துருவப் பகுதிகளைப் பற்றியோ ‎அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‎தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் ‎அது போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் ‎என்ன செய்ய வேண்டும்?

என்பதைக் ‎கூறிவிட்டுச் சென்றுள்ளார்கள். அது தான் ‎நீங்கள் குறிப்பிடும் தஜ்ஜால் குறித்த ‎செய்தியாகும்.‎

‎”அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ‎தஜ்ஜால் பூமியில் எவ்வளவு காலம் உயிர்வாழ்வான்?” என்று நாங்கள் கேட்டோம். ‎அதற்கு அவர்கள், “அவன் பூமியில்நாற்பது நாட்கள் தங்குவான். அன்று ஒருநாள் ஒரு வருடம் போலவும், இன்னொருநாள் ஒரு மாதம் போலவும், மற்றொருநாள் ஒரு வாரம் போலவும், ஏனையநாட்கள் அனைத்தும் உங்களது இந்தநாட்களைப் போலவும் இருக்கும்என்றுநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்கூறினார்கள்

. அல்லாஹ்வின் தூதரே! ‎ஒரு வருடம் போன்று இருக்கும் ஒருநாளில் ஒரு நாளுக்குரிய தொழுகைஎங்களுக்குப் போதுமானதா?” என்றுநாங்கள் கேட்டோம். “அவ்வாறல்ல! ‎அதன் நேரத்தை நீங்கள் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்என்று கூறினார்கள். ‎‎(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)‎

அறிவிப்பவர் : நவாஸ் பின் ஸம்ஆன் ‎‎(ரலி)‎

நூல் : முஸ்லிம் 5629

இந்தச் செய்தியின் அடிப்படையில் பகல் ‎முழுவதும் சூரியன் இருக்கும் போது ‎24 மணி நேரங்களை ஒரு நாள் என்ற அடிப்படையில் கணித்து அதன்படி தொழுகை நேரங்களக் கணக்கிட்டு தொழ வேண்டும்.‎

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *