சூடேற்றப்பட்ட கற்கள்
இவ்வசனங்களில், தீயசெயல் செய்தவர்களைத் தண்டிப்பதற்காக சூடான கல் மழையைப் பொழிந்து அல்லாஹ் அழித்ததாகக் கூறப்படுகின்றது.
சூடான கற்கள் என்பதை அதன் மேலோட்டமான பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் மேலிருந்து சூடான கற்கள் தரைக்கு வருவதற்குள் சூடு ஆறி விடும்.
இக்கற்கள் தாக்கியதில் பேரழிவு ஏற்பட்டிருப்பதாக இவ்வசனங்கள் கூறுவதால், பூமியில் வந்து விழும்போது வெப்பமாக இருந்திருப்பதை அறியலாம்.
கீழே விழுந்து வெடித்துச் சிதறும்போது ஏற்படும் வெப்பத்தையே இது குறிக்கிறது. எனவே அக்கல்லுக்குள் கடுமையான சக்தி அழுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
இந்த வசனங்களில் தீயவர்கள் அழிக்கப்பட்டதைக் கூறி விட்டு, இதில் மாபெரும் அத்தாட்சி இருக்கிறது என்றும், சிந்திக்கும் மக்களுக்கு அங்கு அத்தாட்சியை விட்டு வைத்திருக்கிறோம் என்றும் கூறுவதால், அணுகுண்டு போன்ற பேரழிவை ஏற்படுத்தும் பொருட்களைப் பற்றிய முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.