சுயமரியாதை
———————-
(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம்கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:273)
பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும் போது யாரும் கொடுக்கவும் செய்யலாம். மறுக்கவும் செய்யலாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : புகாரீ (2074)
ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதைவிடச் சிறந்த உணவவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்.
அறிவிப்பவர் : மிக்தாம் (ரலி)
நூல் : புகாரீ (2072)