சாகுல் ஹமீத் என்று பெயர் வைக்கலாமா

சாகுல் ஹமீத் என்ற பெயர் பரவலாக முஸ்லிம்களிடம் காணப்படுகிறது. ஹமீத் (புகழுக்குரியவன்) என்பது படைத்த இறைவனைக் குறிக்கும் சொல்.

(பார்க்க: அல்குர்ஆன் 22:64, 31:26, 35:15, 42:28, 57:24…)

இந்தப் பெயருடன் சாஹ் என்ற வார்த்தையை இணைக்கின்றனர். சாய் என்றால் மன்னர் என்று பொருள்.

இதை ஹமீத் என்ற சொல்லுடன் இணைக்கும் போது சாகுல் ஹமீத் (புகழுக்குரியவனின் மன்னன்) என்ற பொருள் ஏற்படுகிறது. அதாவது அல்லாஹ்விற்கு அரசன் என்ற மோசமான பொருள் வருகிறது.

எனவே இவ்வளவு மோசமான பொருளுள்ள பெயரைச் சூட்டுவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். இந்தப் பெயர் உள்ளவர்கள் அதை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்துல் ஹமீத் (புகழுக்குரியவனின் அடிமை) என்று கூட மாற்றிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில்) அல்லாஹ்விடம் மிகவும் கேவலமான பெயர், (உலகில்) ஒரு மனிதன்மன்னாதி மன்னன்” (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக்கொண்டதாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சயீத் பின் அம்ர் அல்அஷ்அஸீ (ரஹ்) அவர்கள், (“மலிக்குல் அம்லாக்” என்பதற்கு) சாஹான் சாஹ்” (மன்னாதி மன்னன்) என்று (பாரசீக மொழியில்) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் (பொருள்) கூறினார்கள்” என்றார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் 4338.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மறுமை நாளில் அல்லாஹ்விடம் மிகவும் அருவருப்பான பெயர், (உலகில்) ஒருவர் தமக்குமன்னாதி மன்னன்‘ (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக் கொண்டதாகும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி 6205.

இது போன்று பாவம் என்று தெரியாமல் செய்யும் காரியங்களை விட்டும் தவிர்ந்து நடக்க வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக!

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *